ஈழ ஆசை காட்டி அன்று ரெலோ இயக்கத்தின் மூலம் பொற்கோவில் பிடிக்கப்பட்டது. அதே போல் பிளட் அமைப்பின் முயற்சியாள் மாலதீவு பிடிபட்ட போது இந்தியன் படை மாலதீவினுள் தரை இறக்கப்பட்டது .இப்போ தண்ணிர் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்தாம் தண்ணி காட்டுகின்றது இந்தியா ...தீ விபத்து காரணமாக, அந்நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். குடிநீருக்காக அவதிப்படும் மக்கள் தண்ணீர் விற்கும் கடைகளை அடித்து நொறுக்கினர். இந்த இக்கட்டான சூழ்நிலை சமாளிக்க இந்தியா, இலங்கை, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் மாலத்தீவு உதவி கேட்டுள்ளது. இந்நிலையில் மாலத்தீவுக்கான இந்திய தூதர் ராஜிவ் சகாரே, இந்தியாவிலிருந்து 5 விமானங்கள் மூலம் தண்ணீர் தருவதாகத் தெரிவித்திருந்தார். அதில் முதல் விமானம் ஐ.எல். 76 குடிநீரை ஏற்றிக்கொண்டு ஏற்கனவே மாலத்தீவில் தரையிறங்கியுள்ளதாக வெளியுறவுத்துறை தொடர்பாளர் சையது அக்பருதீன் டுவிட்டர் இணையதளத்தில் கூறியுள்ளார்.தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள உதிரி பாகங்கள் வெளிநாட்டில் இருந்து தான் வரவேண்டும் என்பதால் நிலைமை சீராக மேலும் சில தினங்கள் ஆகும் என்று ஷெரிப் கூறியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire