முதலாவதாக எதிர்வரும் தேர்தலில் மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை முழுமையாக பிரயோகிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறோம் .
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல், சகல இன மத சமூகங்களும் சமத்துவமாக வாழ்வதற்கான ஏதுநிலைகள் உருவாக்குதல்,
அரசியல் அமைப்பின் 18வது திருத்தம் நீக்கப்பட்டு ரத்துச்செய்யப்பட்ட 17வது திருத்தத்தை மீளக் கொண்டு வருதல் மூலம் சுதந்திரமான பொலிஸ்சேவை, நீதிச்சேவை மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என நாம் உணர்கிறோம்.
ஊழலற்ற பாரபட்சமில்லாத மக்களுக்கு நெருக்கமான நிர்வாகம் நாட்டின் எல்லா மட்டங்களிலும் நிலவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
மேற்படி எதிர்பார்ப்புக்களுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதற்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
தி.ஸ்ரீதரன் பொதுச்செயலாளர் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
Aucun commentaire:
Enregistrer un commentaire