விருது பெற்ற தினத்திலிருந்தே இவர் சர்வதேச பொறிக்குள் சிக்கியுள்ளார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
இலங்கை மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்த அமெரிக் காவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் தங்களுடைய இலக்கு முடியாமல் போனதும் மைத்திரியை வளைத்துப் போடுவதற்கு போட்ட தூண்டில்தான் இந்த சர்வதேச விருதாகும்.
அழுத்தங்களுக்கு அடிபணியாத மிகவும் ஆளுமையுள்ள உறுதியான தலைமையை பதவியிலிருந்து அகற்றி தாங்கள் நினைத்ததைச் சாதிக்கும் பொம்மைத் தலைமையை உருவாக்குவதுதான் மேற் குலகத்தினதும் அமெரிக்காவினதும் சதி இலக்காக இருக்கிறது.
மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகள் இருப்பதை நிராகரிக்க முடியாமல் இருக்கிறது.
ஐ.தே.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்க முன் வந்துள்ள நிலையில் சந்திரிகா - மங்கள கூட்டுதொடர்பிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தொடர்பிலும் முக்கியமான விடயங்களைத் தெரிவித்திருக்கிறார்.
மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவால் கட்சி இப்போது சுக்கு நூறாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறானதொரு நிலை உருவாகுவதற்கு சந்திரிகா - மங்கள கூட்டுச்சதியே காரணமாக இருந்ததென திஸ்ஸ அத்தநாயக்க கூறுகிறார்.
ஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்டின் மிகப்பெரிய தேசியக் கட்சியாகும். வேட்பாளர் ஒருவரை கட்சியின் சார்பில் நிறுத்த முடியாமல் போனதற்கு சந்திரிகாவும் மங்களவும் தான் காரண மென உட்கட்சிப் போராட்டம் ஆரம்பமாகியிருக்கிறது.
பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு ரணில் அல்லது சஜித் ஆகியோர் பொருத்தமானவர்களென கட்சியினுள் பேசப்பட்ட நிலையில் மைத்திரிபால சிறிசேனவை ஐ.தே.கவின் சார்பில் எவ்வாறு நிறுத்த முடிவு செய்யப்பட்டது என கட்சிக்குள் கலகம் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் ரணில் விக்கிரமசிங்கவின் இய லாமையின் வெளிப்பாடாகும்.
தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வி கண்ட ரணில் விக்கிரம சிங்கவுக்கு தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர் கொள்ளும் தைரியம் இல்லை. தொடர் தோல்விகள் சில வேளை களில் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். இந்த பலவீனத்தை சந்திரிகாவும் மங்களவும் பயன்படுத்தியிருக் கிறார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவை பதவியில் இருந்து வீழ்த்தலாம் என்ற பகற்கனவில் இருக்கும் சந்திரிகாவும் மங்களவும் வெளி நாட்டு சக்திகளின் பின்னணியில் செயற்படுவது ஊர்ஜிதமாகியி ருக்கிறது. வெளிநாட்டுத் தூதுவர்களை சந்திரிகா அம்மையார் அண்மையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இது இன்னும் தொடர்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் களத்தில் நிற்கும் போது முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா தேர்தல் தொடர்பில் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை ஏன் நடத்த வேண்டும்?
பதவிக்காலம் முடிந்ததும் வெளிநாடுகளிலேயே தனது காலத்தைக் கழித்தவர் சந்திரிகா. சில நாடுகளின் அரசியல் தலைவர்களோடும் இவருக்கு தொடர்பு இருந்திருக்கிறதெனக் கூறப்படுகிறது. இலங் கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அரசியல் குழப்ப நிலையை உருவாக்கும் முயற்சியிலும் தோற்றுப்போன சர்வதேச சக்திகள் சந்திரிகாவை பயன்படுத்துகின்றன என்பது இதன் மூலம் ஊர்ஜிதமாகிறது. இவருடைய சதிக்கு ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் பலிக்கடாவாகியிருக்கிறார்கள் என்பது ஜனவரி 9 ஆம் திகதி தெரிந்துவிடும்.
போகிற போக்கைப் பார்த்தால் ஐ.தே.க.வின் நாமமே இல்லாமல் போய்விடும் போல் இருக்கிறது.
பொது வேட்பாளரெனச் சொல்லப்படும் மைத்திரி, பின்னால் இருந்து சொல்வதைச் சொல்லும் ஒருவராகத்தான் இருக்கிறார். என்றாலும் ஐ.தே.க. சில உடன்பாடுகளை செய்திருக்கிறது, (எழுத்து மூலம்). அவைகள் அனைத்துமே மீறப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கிறார். இதன் மூலம் ஐ.தே.க. செயற்குழுவும் ஏமாற்றப் பட்டிருக்கிறதென்பது உண்மையாகும். இவை பற்றி தெரிந்திருந்தும் ரணில் விக்கிரமசிங்க மெளனியாக இருப்பது ஏன் என்பது மர்மமாகவே இருக்கிறது.
சந்திரிகா அம்மையாரை நம்பி காலைவிட்ட ரணில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருப்பதோடு கட்சியின் (ஐ.தே.க. வின்) எதிர்காலத்தையும் சீரழித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire