ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போஹோஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அவர்கள் பல்வேறு இடங்களை கைப்பற்றி வைத்துள்ளனர். அடிக்கடி தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இந்த நிலையில் போஹோஹராம் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த 3 நகரங்களை மீட்பதற்காக ராணுவ படை அனுப்பப்பட்டது. அப்போது ராணுவ வீரர்கள் சிலர் எங்களிடம் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட போதிய ஆயுதங்கள் இல்லை என்று கூறி போருக்கு செல்ல மறுத்தனர். அவர்களை அரசு கைது செய்தது. இது தொடர்பான விசாரணையும் பல நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு நடந்து வந்தது.
அதையடுத்து போரிட மறுத்த 54 ராணுவ வீரர்களுக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் மாதம் ராணுவ வீரர்கள் சிலர் ராணுவ அதிகாரி ஒருவரை கொலை செய்ய முயற்சித்தனர். அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire