அவர் ஆற்றிய உரை பின்வருமாறு:
”வட இந்தியாவில் இருந்து வந்து தமிழகத்தின் மருமகளாகி இருக்கிறேன்.” “தமிழக அரசியலையும் நன்கு அறிந்து கொண்டேன்.” ”என் மனதில் உள்ளதை அப்படியே பேசி விடுவேன்.” ”என்னை ஏன் காங்.,கில் சேர்ந்தீர்கள்; கட்சி மாறினீர்கள் என சிலர் கேட்கின்றனர்.” ”எனக்கு தற்போது தான் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.” ”கட்சி மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன.” “சினிமாவில் நடித்து பெயர், புகழ், பணம் சம்பாதித்தேன்.”
”அதன் பிறகு அரசியலுக்கு வந்தேன்.” ”ஆனால் சிலர் அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதித்தனர்.” ”காங்கிரசில் இருந்து தான் நீதி கட்சி வந்தது.” “தி.மு.க., அ. தி.மு.க., உட்பட அனைத்து கட்சிக்கும் ஆணிவேர் காங்கிரஸ்தான்.” ”காமராஜர் முதல்வராக இருந்த 9 ஆண்டுகளில் செய்த சாதனைகளை, எந்த கட்சியும் செய்யவில்லை.” ”1914ல் பள்ளியில் இருந்து காமராஜர் வெளியேற்றப்பட்டார்.” ”துணிக்கடையில் வேலை செய்தார்.”
“படிப்படியாக வளர்ந்து தான் முதல்வரானார்.” ”தற்போது அரசியலுக்கு வருபவர்களுக்கு முதல் கனவே முதல்வர்தான்.” ”மக்களை சரியான பாதைக்கு கொண்டு செல்லும் சக்தி காங்கிரசுக்கு மட்டுமே உள்ளது.” ”மக்கள் நேர்மையான தலைவரை எதிர்பார்க்கின்றனர்.” ”தமிழகத்தில் இதுவரை சவாரி குதிரையாக காங்கிரஸ் இருந்தது.” ”இனிமேல் ரேஸில் ஜெயிக்கும் பந்தய குதிரையாக நாம் மாற்றுவோம்.”
”காமராஜர், கக்கன் போன்ற நேர்மையாக வாழ்ந்தவர்களை பற்றி பேசி மக்களை சந்திப்போம்.” ”2016ல் வெற்றி நமதே என ஜெயித்து காட்டுவோம்,” என்றார். இளங்கோவன் பேசிய பேச்சுக்கு குஷ்புவை இளங்கோவன் உயர்த்தி பாராட்டியுள்ளார். ”2016ல் காங்., கட்சியை துாக்கி நிறுத்தும் மாபெரும் சக்தியாக குஷ்பு இருப்பார் என்று அவரை புகழ்ந்ததால், மேடையில் உள்ளவர்கள் பெயரை கூட மறந்துவிட்டேன்” என்று கொஞ்சம் ஓவராகவே புகழ்ந்துள்ளார் இளங்கோவன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire