dimanche 29 mai 2016
சுட்டு வீழ்த்தப்பட்ட ஹரம்பே என்று அழைக்கப்படும் 17 வயது கொரில்லா
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகள் தொடர்பில் புதிய சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது தொடர்பில் புதிய வழிகாட்டல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகள் தொடர்பில் புதிய சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே எதிர்வரும் காலங்களில் கைது செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கைது செய்வதற்காக செல்லும் நபரோ, அல்லது நபர்களோ, கைதுசெய்யப்படும் நபர் மற்றும் அவரது உறவினர்களுக்கு தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யும் நபரின் பதவி எந்தப் பிரிவு அவரது பெயர் விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும், என்ன காரணத்திற்காக குறித்த நபர் செய்யப்படுகின்றார் என்பது அவரது மனைவி அல்லது, அல்லது கணவன் பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு அறியத்தர வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யும் அதிகாரியின் பெயர், எந்த இடத்தில் எந்த நேரம், எந்த திகதியில் கைது செய்யப்படுகின்றார், எந்த இடத்தில் தடுத்து வைக்கப்படுகின்றார் என்பது பற்றிய விபரங்களையும் வெளியிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும் நபரினால் பயன்படுத்தும் மொழியில் இந்த விபரங்கள் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும் போது கைது செய்யப்படும் நபர் தனித்து இருந்தால், அவர் தன்னைப் பற்றிய தகவல்களை உறவினர்களிடம் அல்லது நண்பர்களிடம் அறிவிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்படுவது என்பது பலவந்த கடத்தல்கள் காணாமல் போதல்களுக்கு நிகரான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகள் தொடர்பில் புதிய சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே எதிர்வரும் காலங்களில் கைது செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கைது செய்வதற்காக செல்லும் நபரோ, அல்லது நபர்களோ, கைதுசெய்யப்படும் நபர் மற்றும் அவரது உறவினர்களுக்கு தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யும் நபரின் பதவி எந்தப் பிரிவு அவரது பெயர் விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும், என்ன காரணத்திற்காக குறித்த நபர் செய்யப்படுகின்றார் என்பது அவரது மனைவி அல்லது, அல்லது கணவன் பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு அறியத்தர வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யும் அதிகாரியின் பெயர், எந்த இடத்தில் எந்த நேரம், எந்த திகதியில் கைது செய்யப்படுகின்றார், எந்த இடத்தில் தடுத்து வைக்கப்படுகின்றார் என்பது பற்றிய விபரங்களையும் வெளியிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும் நபரினால் பயன்படுத்தும் மொழியில் இந்த விபரங்கள் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும் போது கைது செய்யப்படும் நபர் தனித்து இருந்தால், அவர் தன்னைப் பற்றிய தகவல்களை உறவினர்களிடம் அல்லது நண்பர்களிடம் அறிவிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்படுவது என்பது பலவந்த கடத்தல்கள் காணாமல் போதல்களுக்கு நிகரான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உடல் உறுப்பு தானம் செய்வதால் மற்றவருக்கு பரிசாக அளிக்க முடியும். ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், வாரத்திலும், மாதத்திலும் என்னென்ன மாற்றங்கள் காண்கின்றன என உங்களுக்கு தெரியுமா?
அப்படிப்பட்ட இந்த உயிரை, உடல் உறுப்பு தானம் செய்வதால் மற்றவருக்கு பரிசாக அளிக்க முடியும். ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், வாரத்திலும், மாதத்திலும் என்னென்ன மாற்றங்கள் காண்கின்றன என உங்களுக்கு தெரியுமா?
தெரிந்துக் கொள்ளுங்கள், தெரிந்துக் கொண்டு மண் தின்னும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முனையுங்கள்...
நீங்கள் இறந்த மறுநொடியே உங்கள் மூளை திடீரென விரிந்து இயக்கம் முடிவுறும்.
உங்கள் உடலில் வெட்பநிலை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1.6 ஃபாரன்ஹீட் அளவு குறைய ஆரம்பிக்கும். இதனால், இறந்தவர்களின் உடல் மெல்ல, மெல்ல குளிர்ந்த நிலைக்கு செல்கிறது.
ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் மெல்ல, மெல்ல உங்கள் உடல் செல்கள் இறக்க ஆரம்பிக்கும். பிறகு உடைய ஆரம்பித்து, வெளியேற ஆரம்பிக்கும், இதனால் தான் உடல் அழுக ஆரம்பிக்கிறது.
கால்சியம் தசைகளில் பில்ட் அப் ஆக துவங்குவதால், தசை இறுக்கமாக, கடினமாக மாறும்.
சில சமயங்களில் தசை இலகுவாக ஆகும் தருணத்தில், இறந்தவரின் உடலில் இருந்து மலம் அல்லது சிறுநீரும் வெளியேறும்.
தோல் மெல்ல, மெல்ல ஈரத்தன்மை இழந்து, சுருங்க ஆரம்பிக்கும். இதனால், இறந்தவர்களின் கூந்தலும், நகமும் வளர்வது போன்ற தோற்றமளிக்கும்.
புவி ஈர்ப்பு, இறந்தவர்களின் இரத்தத்தை கீழ் நோக்கி இழுக்கும். இதனால் சருமத்தின் மேற்புறம் பழுப்பு நிறமாக மாற ஆரம்பிக்கும்.
இறந்தவர்களின் உடலில் ஆங்காங்கே பச்சை நிற தடிப்புகள் தோன்றும். இதற்கு காரணம், உடல் உறுப்புகளில் இருக்கும் என்ஸைம்கள் அதுவாக செரிக்க ஆரம்பிக்கும். இதற்கு காரணம் பாக்டீரியாக்கள்.
உடல் அழுகும் போது ப்யுட்ரெஸைனை, காலரா நுண்ணுயிர் நச்சு இரசாயனங்கள் வெளியேறும். இதன் காரணத்தால் தான் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
புழுக்கள், வண்டுகள் இறந்தவரின் உடலை உண்ண ஆரம்பிக்கும். புழுக்கள் இறந்தவரின் 60% உடலை ஒரே வாரத்தில் செரித்துவிடும்.
மெல், மெல்ல இறந்தவரின் உடல் ஊதா மற்றும் கருப்பு நிறமாக மாறும். இதற்கு காரணம், பாக்டீரியாக்கள் தொடர்ந்து இறந்தவரின் உடலை செரிப்பது தான்.
ஓரிரு வாரத்தில் இறந்தவரின் உடலில் இருந்து முடிகள் மொத்தமும் உதிர்ந்துவிடும்.
நான்கு மாதங்களில் இறந்தவரின் உடலில் இருக்கும் மொத்த தசை மற்றும் சருமம் அழுகி, வெறும் எலும்புக்கூடு மட்டும் தான் மிஞ்சும்.
இலங்கை அரசின் முடிவு அரசியல் எதிரிகளால் பரப்பப்படும் வதந்திகளை தவிர, இதுவரை வேறு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை தமிழர் நிலங்களை திரும்ப ஒப்படைக்கும் இலங்கை
தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்கும் இலங்கை அரசின் முடிவுக்கு அந்நாட்டு அதிபர் சிறிசேனா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் சிறிசேனா
இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்தாலும், தமிழர்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாமல் இருந்தது. இலங்கையில் சிறிசேனா தலைமையிலான ஆட்சி அமைந்தபின்னர் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார். இதற்காக ஜப்பான் சென்றுள்ள சிறிசேனா அங்குள்ள இலங்கை தமிழ் சமுதாயத்தினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
27 ஆண்டுகள் காத்திருப்பு
நாங்கள் குற்றவாளிகளாக தமிழர்களின் நிலங்களை திரும்ப அவர்களிடமே ஒப்படைத்து வருகிறோம். உங்கள் சொந்த நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர்கள் தங்கள் நிலங்களுக்காக ஒரு ஆண்டு, 2 ஆண்டு காத்திருக்கவில்லை, 27 ஆண்டுகளாக தங்கள் நிலம் திரும்ப கிடைக்க காத்திருக்கிறார்கள்.
ராணுவம் மூலம் விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், போருக்கான அடிப்படை காரணம் இன்னும் தொடருகிறது. எனவே மீண்டும் ஒரு பிரிவினைவாத போர் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசு உறுதியாக இருக்கிறது. நாட்டு ஒற்றுமைக்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
எந்த அச்சுறுத்தலும் இல்லை
அரசியல் எதிரிகளால் பரப்பப்படும் வதந்திகளை தவிர, இதுவரை வேறு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. எங்கள் அரசு வந்தபின்னர் அனைத்து நட்பு நாடுகளுடனும் சிறப்பாக ஒத்துழைத்து வருகிறோம். அண்டை நாடுகளும் எங்களை நட்புடன் வரவேற்கின்றன. எங்கள் ராணுவத்துக்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பயிற்சி அளிக்கிறது. இதன்மூலம் நாங்கள் முன்னேறி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சரியான தகவல்கள் கிடைக்கப்படவில்லை.இவர் ஓர் மூலிகையாளர், தற்காப்பு கலைஞர் என்றும் அறியப்படுகிறார் இவரது பிறப்பை பற்றி;
லி சிங்-யோன், சீனாவை சேர்ந்த இவர் உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவராக கருதப்படுகிறார். இவர் ஓர் மூலிகையாளர், தற்காப்பு கலைஞர் என்றும் அறியப்படுகிறார். இவரது பிறப்பை பற்றி இன்றுவரையும் சரியான தகவல்கள் கிடைக்கப்படவில்லை.
இரண்டில் எது இவரது வயதாக இருந்தாலும், இவர் தான் அதிக வயது வாழ்ந்த நபராக கருதப்படுவார். இவர் இறக்கும் முன், இவ்வளவு ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததற்கான இரகசியமும் கூறி சென்றிருக்கிறார்...
பத்து வயதில் மூலிகையாளராக தன் துறையை தேர்ந்தெடுத்து பயணத்தை துவங்கிய லி சிங்-யோன். நாற்பது வருடங்கள் goji berries, lingzi, wild ginseng, he shou wu, gotu kola, மற்றும் rice wine போன்ற மூலிகை உணவுகளை உண்டு வந்துள்ளார். இதையே இவர் நூறு வயது வரை கடைபிடித்து வந்தார் எனவும் கூறப்படுகிறது.
1749-ம் ஆண்டு இவரது 71வது வயதில் இவர் சீன இராணுவத்தில் தற்காப்பு கலை பயிற்றுவிக்கும் நபராக சேர்ந்துள்ளார்.
இவர் 23 திருமணங்கள் செய்திருந்தார், இவருக்கு 200 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் தான் உலகின் வயதான நபர் இல்லை என்றும், ஒருமுறை லீ ஏறத்தாழ 500வருடங்கள் வாழ்ந்த நபரை சந்தித்ததாக கூறியிருக்கிறார் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
அந்த நபர் தான் இவருக்கு Qigong பயிற்சி மற்றும் சிறப்பு மூலிகை டயட் கற்பித்தார் எனவும், அதன் மூலமாக தான் இவர் அசாதாரண நீண்ட ஆயுள் வரை வாழ முடிந்தது எனவும் கூறப்படுகிறது.
இறக்கும் முன்னர் லீ-யிடம் அவரது ஆயுள் இரகசியம் பற்றி கேட்டப்போது, ஆமை போல அமர வேண்டும், புறா போல நடக்க வேண்டும், நாய் போல உறங்க வேண்டும், இதயத்தை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.
சீன அரசின் வரலாற்று கோப்புகளில், லீயின் 150வது (1827) மற்றும் 200வது (1877)பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த விடயங்கள் இருக்கின்றன என கூறப்பட்டுள்ளன. இதை சீனாவின் செங்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வூ என்பவர் ஊர்ஜிதம் செய்துள்ளார்.
1933-ம் ஆண்டு வெளிவந்த டைம் பத்திரிக்கையின் பிரதியில் இவர் 197 வயது வாழ்ந்ததாகவும். இவரது பத்தாவது வயதில் இருந்தே கன்சூ, ஷான்ஷி, திபெத், சியாம் மற்றும் மஞ்சூரியா போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அணுசக்தி இந்தியாவை சேர்ப்பதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பை அமெரிக்கா கண்டித்தது.
வாஷிங்டன்,
அணுசக்தி நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்ப்பதற்கு பாகிஸ்தான் தெரிவித்த எதிர்ப்பை அமெரிக்கா கண்டித்தது.
இந்தியா முயற்சி
அணுசக்தி வளத்தை கொண்டுள்ள நாடுகள் ‘என்.எஸ்.ஜி’ நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலக நாடுகளுக்கு அணுமூலப் பொருட்களை வினியோகம் செய்தும் வருகின்றன. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா உள்பட 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினர் ஆவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் பாகிஸ்தான் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அணுசக்தி நாடுகளின் கூட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்தநிலையில் வாஷிங்டன் நகரில் அமெரிக்க வெளியுறவு துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அணுசக்தி நாடுகள் வரிசையில் சேர இந்தியா விண்ணப்பித்து இருக்கிறதே, இது இந்த பிராந்தியத்தில் அணு ஆயுத போட்டியை ஏற்படுத்தாதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அமெரிக்கா கண்டிப்பு
அதற்கு பதில் அளித்த மார்க் டோனர், ‘‘இது ஆயுத போட்டி தொடர்பான விஷயம் அல்ல. அதேபோல் அணு ஆயுத போட்டியும் கிடையாது. இது முழுக்க முழுக்க அணுசக்தியை பொதுப் பயன்பாட்டுக்கு அமைதியான முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியது. இதை பாகிஸ்தான் புரிந்து கொள்ளும் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்’’ என்று கண்டிப்புடன் கூறினார்
என்.எஸ்.ஜி.யின் 48 நாடுகள் கூட்டத்தில் இதுபற்றி முடிவு எட்டப்படுமா? என்ற இன்னொரு கேள்விக்கு அவர் கூறியதாவது:-
பொறுத்திருந்து பார்ப்போம்
2015-ம் ஆண்டு இந்தியாவில் பயணம் செய்த ஒபாமா இந்த விஷயத்தில் அமெரிக்காவின் கருத்தை உறுதியாக தெரிவித்து இருந்தார். அதில் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு நிர்வாகம் தொடர்பான தேவைகளை இந்தியா பூர்த்தி செய்து இருக்கிறது என்றும், இந்தியா என்.எஸ்.ஜி. நாடுகள் வரிசைக்கு தயாராக இருக்கிறது எனவும் கூறி இருந்தார்.
அணுசக்தி நாடுகள் என்பது ஒரு மனதாக முடிவை எடுக்கும் அமைப்பைக் கொண்டது. எனவே, பொறுத்திருப்போம். இதில் எப்படி ஓட்டெடுப்பு இருக்கும் என்பதையும் பார்க்கவேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்பது சிந்தித்து முடிவு செய்யவேண்டிய விஷயம். தவிர, இது தற்போது உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் உள்விவகாரம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்க மாணவர்கள் கூட்டமைப்பு இனவாதத்திற்கு எதிரான பேரணி ஒன்றை திங்கள்கிழமை டெல்லியில் நடத்தவுள்ளது
ஆப்பிரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இந்திய தலைநகர் டெல்லி காவல்துறை ஐந்து பேரை வியாழக்கிழமை கைது செய்துள்ளது.
ஆறு ஆப்பிரிக்க நாட்டவர் காயப்படுத்தப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து மூன்று வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணிப்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் காங்கோ குடியரசை சேர்ந்த ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் ஆப்பிரிக்க தூதரகங்கள் மற்றும் இந்தியா இடையிலான இராஜதந்திர சர்ச்சையைத் தூண்டியுள்ளது.
ஆப்பிரிக்க குடிமக்களை தாக்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்க மாணவர்கள் கூட்டமைப்பு இனவாதத்திற்கு எதிரான பேரணி ஒன்றை திங்கள்கிழமை டெல்லியில் நடத்தவுள்ளது.bbc
vendredi 27 mai 2016
ஒரே நேரத்தில் பல பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது ஆண்களுக்கு ஏன்
நாற்பது வயதிற்கு கீழான ஆண்களுக்கு இது பெரிய ஆச்சரியமாக இருக்காது. ஆம், நீண்ட நாட்களாக ஒரே உறவில் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் கூட வேறு நபர் மீது ஈர்ப்பு ஏற்படுவது மிகவும் இயல்பு தானாம்.
நாயை குளிப்பாட்டி என்னதான் நடுவீட்டில் வைத்தாலும் அது தெருவிற்கு தான் செல்லும் என்பதை போல, என்னதான் காதலித்தாலும், அன்புக் காட்டினாலும், ஒருக்கட்டதிற்கு மேல் ஆண்கள் வேறு பெண்களை சைட் அடிக்க சென்றுவிடுவார்கள் என ஆண்கள் மீது பெண்களுக்கு பொதுவான கருத்து ஒன்றிருக்கிறது.
இது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும் என இப்போது அறிவியல் ரீதியாகவே நிரூபணம் ஆகியுள்ளது...
ஆய்வு!
இம்மாதம் டெக்சாஸ் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 119 ஆண்கள், 140 பெண்கள் கலந்துக் கொண்ட ஆய்வில் தான் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாகவே ஆண், பெண், ஒருவர் மீது ஒருவர் 27 பண்பு, குணங்கள் சார்ந்து தான் ஈர்ப்பு கொள்கிறார்களாம்.
27 நற்குணங்கள்!
அழகு, புத்தி கூர்மை, உடல்நலம், பொருளாதாரம் என 27 அடிப்படை பண்பு, குணங்களில் ஏதேனும் ஒன்றின் மீது உண்டாகும் பேரார்வம் தான் பின்னாளில் காதலாக மாறுகிறது.
இரண்டு பிரிவு
இந்த ஆய்வில் பங்கு எடுத்துக் கொண்டவர்களை ஆய்வாளர்கள் அதிகளவு விரும்பத்தக்கவர்களாக இருப்பவர்கள், குறைந்தளவு விரும்பத்தக்கவர்களாக இருப்பவர்கள் என இரண்டு பிரிவாக பிரித்தனர். (அதாவது என்றும் நெருக்கமாக இருக்க நினைப்பவர்கள், மற்றும் நேரத்திற்காக காத்திருப்பவர்கள்)
அதிகளவு விரும்பத்தக்க
இதில், அதிகமாக விரும்பத்தக்கவர்களாக திகழும் நபர்கள் தான் மற்ற நபர்கள் மீதும் அதிக ஈர்ப்பு கொள்கிறார்கள், மேலும் இவர்களால் ஒருவரிடம் மட்டும் நேர்மையாக உறவில் இருப்பது கடினம் என்றும், மற்றவர்கள் மீதும் அதிகமாக அன்பு செலுத்துவார்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தளவு விரும்பத்தக்க
குறைந்தளவு விரும்பத்தக்க நபர்கள் தான் உறவில் அதிகளவு மகிழ்ச்சியாகவும், மற்ற நபர்கள் மீது அதிகமாக ஈர்ப்பு கொள்ளாமலும் இருக்கிறார்களாம். இவர்கள் இவரது துணை வேறு நபர் மீது ஈர்ப்பு கொள்ள கூடாது என்பதற்காக அதிக காதலை வெளிப்படுத்துவார்களாம். இவர்கள் மத்தியில் வேறு நபர் மீது ஈர்ப்பு கொள்ளும் சதவீதம் குறைவாக இருக்கிறதாம்.
மனோபாவம்
ஆண்கள் தான் இப்படி, பெண்கள் தான் இப்படி என்றில்லை. வேண்டுமானால், பெண்கள் அதிகமாக இதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள் எனவும். மற்றபடி இந்த மனோபாவம் இருபாலினர் மத்தியிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிநுட்பம்
கடந்த பத்து ஆண்டுகளில் வளர்ந்துள்ள சமூக வலைத்தள தொழில்நுட்ப வளர்ச்சிகளினால் இது இன்னமும் அதிகரித்து தான் உள்ளது.
jeudi 26 mai 2016
நிலங்களை திருப்பியளிக்காதது ஏன்?விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கைவிட்டுச் சென்ற நிலங்களை மீண்டும் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் படி காணி ஆணையாளர் 2013 ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவொன்றை இது வரை அமல்படுத்த தவறியமை தொடர்ப்பாக விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம்சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தங்களது காணிகளை மீண்டும் பெற்றுத் தரும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி 2013 ம் ஆண்டு அவர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்தனர்.சம்பந்தப்பட்ட காணிகளை மீண்டும் மனுதாரர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக காணி ஆணையாளர் 2013 ம் ஆண்டு வாக்குறுதியொன்றை வழங்கினார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்து.ஆனால் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் காணி ஆணையாளர் வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப் படவில்லை என்று சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் புதன்கிழமையன்று நீதிமன்றத்தில் மீண்டும் புகாரொன்றை முன்வைத்தனர்.அதனை ஆராய்ந்த தலைமை நீதிபதி ஸ்ரீபவன் உட்பட மூவர் அடங்கிய நீதிபதிகளின் குழு, 2013 ஆண்டு காணி ஆணையாளர் வழங்கிய உத்தரவின்படி காணிகளை மனுதாரர்களுக்கு பெற்றுக் கொடுக்க தவறியமை தொடர்பாக எதிர் வரும் ஜுலை மாதம் 26 ம் தேதி விளக்கமளிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உத்த்ரவிட்டுள்ளாா்யுத்தம் நடைபெற்ற போது வன்னி மாவட்டத்தில் இருக்கின்ற தங்களது காணிகளை விட்டுச் சென்றதாக தெரிவித்த மனுதாரர்கள் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2012 ம் ஆண்டு அங்கு சென்ற பொது தங்களது காணிகளில் வேறு நபர்கள் குடியேறியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
1954 க்கு அழையுங்கள் அரச ஊழியர்கள் இலஞ்சம் கேட்டால்
அரசாங்க ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றனர். ஆகவே மக்களுக்காக அவர்கள் கடமையாற்ற வேண்டியவர்கள்.
அவர்களிடமிருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள மக்களுக்கு உரிமையுண்டு. அதற்காக இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் கேட்டால் அது தொடர்பில் 1954 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிட முடியும் இவ்வாறு இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் டயஸ் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் கபே அமைப்பு ஆகியன இணைந்து இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்னும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் அரச நிறுவனங்களுக்குச் சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். எமது ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் மாற்றங்களை உருவாக்கி வருகின்றோம்.
இலஞ்சம் மற்றும் ஊழலை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம். உயர்மட்டத்திலுள்ள இவ்வாறான விடயங்களை கையாள புதிய குழுவொன்று உருவாக்கியுள்ளோம். பொதுமக்கள் எங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு தந்தால் எங்களால் வெற்றிகரமாக செயற்படமுடியும் என்றார்.www.ciaboc.gov.lk
mercredi 25 mai 2016
தந்தைக்கு மகள் தாயாகி விடுகிறாள். தந்தை மகளிடம் குழந்தை ஆகிவிடுகிறான்
என்பது மிக அழகான கலை. அதை எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம். எந்த கோணத்தில் வேண்டுமானாலும் அணுகலாம். நிர்வாண கோலமும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால்தான், ஓவிய வகுப்பில் நிர்வாணமாக போஸ் கொடுக்க வரும் பெண்கள், ஆண்கள் அதற்காக வருந்துவதில்லை. நிர்வாண கோலம் எந்த வகையிலும் ஆபாசமில்லை என்பதற்கு ரஷ்ய மியூசியத்தில் உள்ள அந்த ஓவியத்தை உதாரணமாகக் கூறலாம். வயதான ஒரு கிழவன், இளம்பெண் ஒருத்தியின் மார்பில் பால் அருந்திக் கொண்டிருக்கிறான். அருகில், ஒரு குழந்தையை கிழவி ஒருத்தி அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அதையும் மீறி அந்த குழந்தை பசியால் கதறிக் கொண்டிருக்கிறது. இந்தக் காட்சிக்குப் பின்னணியில் கையில் துப்பாக்கியும், ஈட்டியும் ஏந்திய வீரர்கள் சிலர் உள்ளனர். - இதுதான் அந்த ஓவியக் காட்சி. இந்த ஓவியத்தில் கிழவன் பால் குடிக்கும் இளம்பெண் வேறு யாருமல்ல; அவனது மகளேதான்! அருகில் உள்ள குழந்தை, இவளது பால்குடி மறவாத குழந்தை. அந்த குழந்தையை பிடித்து அழுத்திக் கொண்டிருப்பவள் இந்த பெண்ணுக்கு தாய், கிழவனுக்கு மனைவி! இப்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? படுபாவி கிழவன்... இப்படியா அநியாயம் செய்வான் என்று கொதித்தெழுவீர்கள் தானே? அப்படி அவசரப்பட வேண்டாம். இந்தக் காட்சியின் பின்னணி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் துளியும் ஆபாசம் கிடையாது. அது எப்படி? இந்த படத்தில் மகளின் மார்பில் பால் குடிக்கும் கிழவன் ஒரு புரட்சிக்காரன். ஜார் மன்னருக்கு எதிராக புரட்சி செய்ததால், மன்னரின் வீரர்கள் அவனை கைது செய்துவிட்டனர். சிறையில் அந்த கிழவனுக்கு உண்ண உணவோ, குடிக்க தண்ணீரோ கொடுக்கக்கூடாது என்பது மன்னர் உத்தரவு. பசியினாலும், தாகத்தினாலும் அவன் துடிதுடித்து சாக வேண்டும் என்பது அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை! கடிகாரம் வேகமாக சுழல்கிறது. கிழவனுக்கு பசி அதிகமாகிறது. தண்ணீர் தாகம் அதைவிட அதிகம் வதைக்கிறது. துடிக்கிறான்... துவழுகிறான்... காவலுக்கு நிறுத்தப்பட்ட வீரர்கள் யாரிடமும் துளியும் இரக்கம் வரவில்லை. அந்தநேரத்தில், கிழவனைப் பார்ப்பதற்காக அவனது கிழட்டு மனைவியும், அவர்களது மகளும் வருகின்றனர். மகளுக்கு குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. அதனால், அவள் தன் குழந்தையை கையோடு அழைத்து வந்திருக்கிறாள். சிறையில் கிழவன் படும் அவஸ்தையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கிழவன் தண்ணீர்... தண்ணீர்... என்று துடிக்கிறான். யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை. கிழவியானவள் அருகில் காவலுக்கு நின்ற வீரர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிறாள், கதறுகிறாள். யாருக்கும் இரக்கம் வரவில்லை. அப்போதுதான் பொங்கியெழுகிறாள் கிழவனின் இளம் வயது மகள். கைக்குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அருகில் நின்ற பாதுகாப்பு தலைவனிடம் வருகிறாள். "எங்கள் தந்தை தாகத்தால் உயிர் போகக் கிடக்கிறார். அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்..." என்று கெஞ்சி பதறுகிறாள். அவள் கேள்வியையும் வீரர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. உதாசீனப்படுத்தி விடுகின்றனர். அடுத்ததாக அவள் அவர்களிடம் கடுமையாக வாதிடுகிறாள். "எங்கள் தந்தைக்கு நாங்கள் தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது?" "ஆமாம்!" "உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?" "ஆமாம்! இதில் என்ற மாற்றமும் இல்லை" என்கின்றனர் வீரர்கள். உடனே, கீழே விழுந்து கிடந்த தந்தையை தூக்குகிறாள் அந்த மகள். அவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சற்று ஓரமாக ஒதுங்கித் திரும்பிக் கொள்கிறாள். "அப்பா... உங்களுக்கு தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். இப்போது நான் உங்கள் தாகத்தை தண்ணீர் இல்லாமலேயே தணிக்கிறேன்..." என்றவள், சட்டென்று தனது மேலாடையை அவிழ்க்கிறாள். கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து பல மணி நேரம் ஆனதால், அவளது இரு மார்பகத்தில் பால் நிரம்பி நிற்கிறது. அந்த மார்பகத்தில் தந்தையை பால் குடிக்க வைக்கிறாள், அவரது தாகத்தை தணிக்கிறாள் அந்த புரட்சிக்காரனுக்கு பிறந்த மகள். இந்த சம்பவத்தில் தந்தைக்கு மகள் தாயாகி விடுகிறாள். தந்தை மகளிடம் குழந்தை ஆகிவிடுகிறான். வெளித் தோற்றத்தில் பார்க்க வேண்டுமானால் படம் ஆபாசமாக இருக்கலாம். ஆனால், ஆழ்ந்து நோக்கினால் நிச்சயம் ஆபாசம் அல்ல.
மகாராஷ்டிராவில் அவலம் ஒரு டன் வெங்காயம் விற்ற விவசாயிக்கு கிடைத்தது ஒரு ரூபாய்
கோப்புப் படம்
மகாராஷ்டிர மாநிலத்தில் தற் போது வெங்காய அறுவடை நடந்து வருகிறது. அமோக விளைச்சல் காரணமாக வெங்காயம் எதிர் பார்த்ததை விட கூடுதலாக மகசூல் ஆகியுள்ளது. இந்நிலையில் ஏறத்தாழ ஆயிரம் கிலோ வெங்காயம் விற்ற விவசாயிக்கு ஒரு ரூபாய் மட்டும் கையில் கிடைத்துள்ளது.
தேவிதாஸ் பர்பானே என்ற விவசாயிக்குத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கூறி யதாவது:
இரண்டு ஏக்கர் நிலத்தில் ரூ. 80 ஆயிரம் செலவு செய்து வெங்காயம் சாகுபடி செய்தேன். கடந்த 10-ம் தேதி, 952 கிலோ வெங்கா யத்தை 18 சாக்கு மூட்டைகளில் பிடித்து, லாரி மூலம் புணேவில் உள்ள வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் துக்கு (ஏபிஎம்சி) அனுப்பி வைத்தேன்.
அங்கு, ஒரு கிலோ ரூ.1.60-க்கு எடுத்துக் கொண்டார்கள். இதனால் 952 கிலோ வெங்காயத்துக்கு ரூ. 1,523.20 கிடைத்தது. இடைத்தரகர் ரூ.91.35-ஐ தரகாக எடுத்துக் கொண்டார். தொழிலாளர்களுக்கு ரூ. 59 மற்றும் ரூ. 18.55 கூலியாக கொடுக்கப்பட்டது. இதர செல வினங்களுக்காக ரூ. 33.30 கொடுக் கப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வெங்காயத்தைக் கொண்டு சேர்த்த வாடகையாக லாரி டிரைவருக்கு ரூ. 1,320 கொடுக்கப்பட்டது.
எல்லா செலவுகளும் போக கையில் ஒரு ரூபாய்தான் மிஞ்சி யது. ஒரு கிலோ 3 ரூபாய்க்கா வது விற்பனையாகும் என எதிர் பார்த்தேன். ஆனால், இவ்வளவு குறைந்ததால் ஏமாற்றம் அடைந் தேன்.
நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்து பயிர்களைப் பார்த்துக் கொண்டேன். கடும் மின்தட்டுப்பாட் டுக்கு இடையிலும் நீர் பாய்ச்சினேன். லாபத்தை விடுங்கள். போட்ட முதலீட்டைக் கூட எடுக்க முடியாது போலிருக்கிறது.
வறட்சி பாதித்த பகுதிகளில் தினமும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளைக் கேட்கிறேன். வெங்காய விலை இப்படியே சரிந்தால் என்னைப் போன்ற விவசாயிகளும் தற் கொலை செய்து கொள்ள வேண்டியதுதான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேவிதாஸ் பர்பானே-வின் வெங்காயம் சிறியதாகவும், தரம் குறைவாகவும் இருந்ததாக அந்த வெங்காயத்தை வாங்கிய வியா பாரி கூறியதாக உள்ளூர் ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள் ளன.
இதனிடையே, வெங்காய வியாபாரிகள், லாசல்கான் பகுதி ஒழுங்கு முறை விற்பனைக் கூட உறுப்பினர்கள் வெங்காய விலை கடுமையாக சரிந்துள்ளது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவி ஸைச் சந்தித்து இவ்விவகாரத்தில் தலையிடும்படி கோரியுள்ளனர்.
mardi 24 mai 2016
எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்ட வெள்ளைக் கொடி சரணடைந்த 110 புலிகளின்
ஆதவா ( செயற்பாடு தெரியாது)
அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
அம்பி ( செயற்பாடு தெரியாது)
அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),
ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),
பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),
V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)
பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )
பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)
பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )
Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)
எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
கரிகரன் ( செயற்பாடு தெரியாது)
இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)
இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
இசைபிரியா ( ஊடக பிரிவு)
ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)
கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
குயிலன் ( இராணுவ புலனாய்வு)
குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )
மலரவன் (நிர்வாக சேவை )
மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)
மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)
மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )
மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )
மோகன் அங்கிள் (கடற்புலிகள் )
முகிலன் (இராணுவ புலனாய்வு)
முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )
balakumaran-custody இறுதி
நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)
நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )
நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )
நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )
நேயன் (புலனாய்வு)
நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )
நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய்
நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)
நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )
பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )
பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)
Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)
Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)
பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)
பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)
புலித்தேவன் (சமாதான செயலகம்)
புலிமைந்தன் (யோகியின் சாரதி)
புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )
புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)
ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)
ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )
ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)
புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)
Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)
Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)
ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)
ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )
ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)
S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)
சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)
சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)
செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )
சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)
சின்னவன் (புலனாய்வு)
சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)
Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)
Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)
திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)
திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )
துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)
வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)
வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)
Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)
Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)
வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)
வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)
வினிதா (நடேசனின் மனைவி )
வீமன் (கட்டளை தளபதி)
விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)
யோகன் / சேமணன் (அரசியல் துறை)
யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)
Inscription à :
Articles (Atom)