சட்டவிரோதமாக சொத்து சேர்த்தல் தொடர்பான குற்றச்சாட்டில் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
இது தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளார்.
கடந்த தேர்தல் காலப் பகுதியில் விமானங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
தனக்கு இன்று பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு ஆகியவற்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக கூறிய நாமல், தான் இன்று பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மட்டுமே சமூகமளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire