நாட்டில் பல அழிவுகளை ஏற்படுத்திய இந்தளவு மழையை பதுக்கிவைத்திருந்த குற்றத்திற்காக கடவுளை பாரிய நிதிமோசடி குற்றப் பிரிவுக்கு அழைக்க வேண்டும் என பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாக தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றைய நல்லாட்சியின் செயற்பாடுகள் மேற்குறிப்பிட்டவாறே அமைந்துள்ளன எனவும் தெரிவித்தார்.
கெலிஓயா கரமட ஸ்ரீ வேலுவனாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவ வீரர்களை நினைவு கூர்வதை இன்று தடுத்து நிறுத்தியுள்ளார்கள். கடந்த காலங்களில் யுத்த வெற்றி தினமாக மாத்திரம் இன்றி சகல மக்களின் விடுதலை தினமாகவும் கொண்டாடப்பட்டது.
ஆனால் நல்லிணக்கம் என்று கூறிகொண்டு யுத்தத்தை வெற்றி கொள்ள காரணமாக இருந்த இராணுவ வீரர்களின் தினத்தை கொண்டாடமல் இருப்பது மடமையான விடயமாகும்.
நாட்டில் உள்ள பிரச்சினைகளையெல்லாம் எனது தலையில் கட்டிவிட்டு தப்பிக்கொள்ள முடியாது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சகல அபிவிருத்து திட்டங்கள் முடக்கிவிடப்பட்டுள்ளன. மக்களின் தேவைகளை அறிந்து அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire