மகாராஷ்டிர மாநிலத்தில் தற் போது வெங்காய அறுவடை நடந்து வருகிறது. அமோக விளைச்சல் காரணமாக வெங்காயம் எதிர் பார்த்ததை விட கூடுதலாக மகசூல் ஆகியுள்ளது. இந்நிலையில் ஏறத்தாழ ஆயிரம் கிலோ வெங்காயம் விற்ற விவசாயிக்கு ஒரு ரூபாய் மட்டும் கையில் கிடைத்துள்ளது.
தேவிதாஸ் பர்பானே என்ற விவசாயிக்குத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் கூறி யதாவது:
இரண்டு ஏக்கர் நிலத்தில் ரூ. 80 ஆயிரம் செலவு செய்து வெங்காயம் சாகுபடி செய்தேன். கடந்த 10-ம் தேதி, 952 கிலோ வெங்கா யத்தை 18 சாக்கு மூட்டைகளில் பிடித்து, லாரி மூலம் புணேவில் உள்ள வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் துக்கு (ஏபிஎம்சி) அனுப்பி வைத்தேன்.
அங்கு, ஒரு கிலோ ரூ.1.60-க்கு எடுத்துக் கொண்டார்கள். இதனால் 952 கிலோ வெங்காயத்துக்கு ரூ. 1,523.20 கிடைத்தது. இடைத்தரகர் ரூ.91.35-ஐ தரகாக எடுத்துக் கொண்டார். தொழிலாளர்களுக்கு ரூ. 59 மற்றும் ரூ. 18.55 கூலியாக கொடுக்கப்பட்டது. இதர செல வினங்களுக்காக ரூ. 33.30 கொடுக் கப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வெங்காயத்தைக் கொண்டு சேர்த்த வாடகையாக லாரி டிரைவருக்கு ரூ. 1,320 கொடுக்கப்பட்டது.
எல்லா செலவுகளும் போக கையில் ஒரு ரூபாய்தான் மிஞ்சி யது. ஒரு கிலோ 3 ரூபாய்க்கா வது விற்பனையாகும் என எதிர் பார்த்தேன். ஆனால், இவ்வளவு குறைந்ததால் ஏமாற்றம் அடைந் தேன்.
நான்கு மாதங்கள் கடுமையாக உழைத்து பயிர்களைப் பார்த்துக் கொண்டேன். கடும் மின்தட்டுப்பாட் டுக்கு இடையிலும் நீர் பாய்ச்சினேன். லாபத்தை விடுங்கள். போட்ட முதலீட்டைக் கூட எடுக்க முடியாது போலிருக்கிறது.
வறட்சி பாதித்த பகுதிகளில் தினமும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளைக் கேட்கிறேன். வெங்காய விலை இப்படியே சரிந்தால் என்னைப் போன்ற விவசாயிகளும் தற் கொலை செய்து கொள்ள வேண்டியதுதான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேவிதாஸ் பர்பானே-வின் வெங்காயம் சிறியதாகவும், தரம் குறைவாகவும் இருந்ததாக அந்த வெங்காயத்தை வாங்கிய வியா பாரி கூறியதாக உள்ளூர் ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள் ளன.
இதனிடையே, வெங்காய வியாபாரிகள், லாசல்கான் பகுதி ஒழுங்கு முறை விற்பனைக் கூட உறுப்பினர்கள் வெங்காய விலை கடுமையாக சரிந்துள்ளது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவி ஸைச் சந்தித்து இவ்விவகாரத்தில் தலையிடும்படி கோரியுள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire