vendredi 27 mai 2016

ஒரே நேரத்தில் பல பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது ஆண்களுக்கு ஏன்


நாற்பது வயதிற்கு கீழான ஆண்களுக்கு இது பெரிய ஆச்சரியமாக இருக்காது. ஆம், நீண்ட நாட்களாக ஒரே உறவில் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் கூட வேறு நபர் மீது ஈர்ப்பு ஏற்படுவது மிகவும் இயல்பு தானாம்.
நாயை குளிப்பாட்டி என்னதான் நடுவீட்டில் வைத்தாலும் அது தெருவிற்கு தான் செல்லும் என்பதை போல, என்னதான் காதலித்தாலும், அன்புக் காட்டினாலும், ஒருக்கட்டதிற்கு மேல் ஆண்கள் வேறு பெண்களை சைட் அடிக்க சென்றுவிடுவார்கள் என ஆண்கள் மீது பெண்களுக்கு பொதுவான கருத்து ஒன்றிருக்கிறது.
இது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும் என இப்போது அறிவியல் ரீதியாகவே நிரூபணம் ஆகியுள்ளது...
ஆய்வு!
இம்மாதம் டெக்சாஸ் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 119 ஆண்கள், 140 பெண்கள் கலந்துக் கொண்ட ஆய்வில் தான் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாகவே ஆண், பெண், ஒருவர் மீது ஒருவர் 27 பண்பு, குணங்கள் சார்ந்து தான் ஈர்ப்பு கொள்கிறார்களாம்.
27 நற்குணங்கள்!
அழகு, புத்தி கூர்மை, உடல்நலம், பொருளாதாரம் என 27 அடிப்படை பண்பு, குணங்களில் ஏதேனும் ஒன்றின் மீது உண்டாகும் பேரார்வம் தான் பின்னாளில் காதலாக மாறுகிறது.
இரண்டு பிரிவு
இந்த ஆய்வில் பங்கு எடுத்துக் கொண்டவர்களை ஆய்வாளர்கள் அதிகளவு விரும்பத்தக்கவர்களாக இருப்பவர்கள், குறைந்தளவு விரும்பத்தக்கவர்களாக இருப்பவர்கள் என இரண்டு பிரிவாக பிரித்தனர். (அதாவது என்றும் நெருக்கமாக இருக்க நினைப்பவர்கள், மற்றும் நேரத்திற்காக காத்திருப்பவர்கள்)
அதிகளவு விரும்பத்தக்க
இதில், அதிகமாக விரும்பத்தக்கவர்களாக திகழும் நபர்கள் தான் மற்ற நபர்கள் மீதும் அதிக ஈர்ப்பு கொள்கிறார்கள், மேலும் இவர்களால் ஒருவரிடம் மட்டும் நேர்மையாக உறவில் இருப்பது கடினம் என்றும், மற்றவர்கள் மீதும் அதிகமாக அன்பு செலுத்துவார்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தளவு விரும்பத்தக்க
குறைந்தளவு விரும்பத்தக்க நபர்கள் தான் உறவில் அதிகளவு மகிழ்ச்சியாகவும், மற்ற நபர்கள் மீது அதிகமாக ஈர்ப்பு கொள்ளாமலும் இருக்கிறார்களாம். இவர்கள் இவரது துணை வேறு நபர் மீது ஈர்ப்பு கொள்ள கூடாது என்பதற்காக அதிக காதலை வெளிப்படுத்துவார்களாம். இவர்கள் மத்தியில் வேறு நபர் மீது ஈர்ப்பு கொள்ளும் சதவீதம் குறைவாக இருக்கிறதாம்.
மனோபாவம்
ஆண்கள் தான் இப்படி, பெண்கள் தான் இப்படி என்றில்லை. வேண்டுமானால், பெண்கள் அதிகமாக இதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள் எனவும். மற்றபடி இந்த மனோபாவம் இருபாலினர் மத்தியிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிநுட்பம்
கடந்த பத்து ஆண்டுகளில் வளர்ந்துள்ள சமூக வலைத்தள தொழில்நுட்ப வளர்ச்சிகளினால் இது இன்னமும் அதிகரித்து தான் உள்ளது.


Aucun commentaire:

Enregistrer un commentaire