ஆப்கானிஸ்தானின் கானகா மாவட்டத்தில், கணவனை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒரு பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுட்டு தலிபான் தீவிரவாதிகளை கொலை செய்தனர்.
அந்த நிகழ்வை அவர்கள் வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தெருவில் இழுத்து வந்து அமர வைக்கிறார்கள். அவரை சுற்றி ஏராளமான பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
அவர்களும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு எதிராக கோஷம் போடுகின்றனர். அந்த பெண்ணால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும், அவரது கணவரின் உறவினர்களும் அங்கு நிற்கிறார்கள். அந்த பெண்ணுக்கான தண்டனையை உடனே நிறைவேற்றுங்கள் என்று அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
அதன்பின், முகமூடி அணிந்த ஒருவர் கையில் ஏ.கே.47 துப்பாக்கியோடு அங்கு வருகிறார். அந்த பெண்ணின் தலையின் பின்னால் சுடுகிறார். அந்த பெண் சுருண்டு விழுந்து உயிரை விடுகிறார். இது அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire