vendredi 9 août 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்திருந்தால் அபிவிருத்திக்காக கையந்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது .சி.சந்திரகாந்தன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் தேசிய பிரகடனத்தினை முன்வைக்கின்ற போது யதார்த்த பூர்வமான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயற்பட்டிருந்தால் தமிழ் மாணவர்கள் தட்டாந்தரையிலும் மரத்தடியிலும் உட்கார்ந்து கல்வி கற்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன்  குறுமன்வெளி மட்ஃசிவசக்தி வித்தியாலயத்தின் ஆயிரம் பாடசாலைகள் மகிந்தோதய   திட்டத்தின் ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சி.சந்திரகாந்தன் அவர்கள் 1976 வட்டுக்கோட்டை தமிழ் ஈழ பிரகடனத்தினை செய்யும்போது தமிழ் ஈழம்தான் ஓரே தீர்வு என குறிப்பிட்ட தமிழ் தலைமைகள் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கோடிக்கணக்கான உடமைகள் இழந்த பின்னர் தமிழ் ஈழம், சமஸ்டி, வடகிழக்கு இணைப்பு என்று கூறியவர்கள் கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் ஒற்றுமைக்கு ஆணையைத்தாருங்கள் சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று கூறி கிழக்கு மாகாணசபை அதிகாரங்களையும் இல்லாமல் செய்துவிட்டு எதிர்கட்சியில் குந்திக் கொண்டிருக்கின்றார்கள்.
போதாததிற்கு வடக்கு மாகாணசபை தேர்தலிலும்  விக்னஸ்வரனை களம் இறக்கவிட்டு உள்ளுக்குள் அடிபிடிப்படுகின்றார்கள்.
விக்னோஸ்வரன் முதலமைச்சராக வந்தால் கூட எப்படி அபிவிருத்தி செய்யப் போகின்றார்கள். எங்கிருந்து நிதி பெறப் போகின்றார்கள் கடந்த 4 வருடம் கிழக்கு மாகாணசபையை வழி நடத்திய அனுபவம் எனக்கிருக்கிறது. கற்றறிந்து அரசியல் ஞானம் பெற்றோ? பட்டம் பெற்றோ? நான் அரசியலுக்கு வரவில்லை.
எமது மக்களுக்காக களமுனையில்  உயிரை தியாகம் செய்யத் துணிந்து போராடியுள்னோம். எமது மக்களுக்காக விடிவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கிழக்கு மாகாணசபையை பொறுப்பேற்ற நாம் மிகத் திருப்தியாக செய்து காட்டிய அனுபவம் எமக்கு இருக்கிறது. நிதி பெறுவதானால் ஆளும் அரசின் பலம் இல்லாது விட்டால்முடியாது.
1978 ம் வருடம் மட்டக்களப்பு மாவட்டம் சூறாவளியால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து மக்கள் அல்லோலகல்லோப்பட்ட வேளையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக மட்டக்களப்பில் பிரேமதாசா கலந்துரையாடல் நடத்தியபோது அபிவிருத்திக்காகவே சொல்லின் செல்வர் அமைச்சர் ராஜாதுரை கலந்து கொண்டார் இக் கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள் என்று ராஜதுரை அவர்களுக்கு தமிழ் அரசிக் கட்சியின் செயலாளர். அன்று விளக்கம் கோரி கடிதம்  அனுப்பி இருந்தார். இதுவே பின்னாளிலர் இராஜதுரை அவர்கள் கட்சியை விட்டு செல்வதற்கு காரணமாக அமைந்தது.
இன்று அபிவிருத்திக்காக இணைபவாம் என்ற தமிழ் தேசியக் கூட்மைப்பு ஏன் அன்று சிந்திக்கவில்லை? அது மாத்திரம் அன்றி கிழக்கு மாகாண சபை தேர்தலில் சிந்திக்கவில்லை? தமிழ் தேசியக் கூட்டணியினர் சாதி ரீதியாக எம்மை ஒதுக்குகின்றனர். சாதி வேற்றுமை தலைதூக்குகின்றது. என்று வேட்பாளர் தெரிவின் போது முன்னால் தவிசாளர் கந்தையா அவர்கள் வடக்கில் உண்ணா விரதம் இருந்தார். இதற்கு ஊடகங்கள் முன்னுரிமை வழங்காது இருட்டடிப்பு செய்தன. இவை எல்லாம் தனிப்பட்ட சிலரின் அரசியலை வெளிக்காட்டுகின்றதே தவிர தமிழர்களை பற்றி சிந்திக்கும் நிலையினையல்ல என கூட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் கூறிப்பிட்டார்.
தொடர்ந்து தமிழ் மக்கள் ஏமாளிகளாக இருக்கும்வரை இந்த பழுத்த தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ந்து எம்மை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் இனிவருகின்ற காலங்களில் சரியான வழியில் சிந்தித்து தமிழ் மக்களுக்கான நேர்த்தியான பாதையை தோர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான காலம் தற்போது கனிந்துள்ளது. தொடர்ந்து எம்மை ஏமாற்றி அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்;பினர் அவர்களது அரசியல் பின்புலத்தினால் விசேடமாக கிழக்கு தமிழ் மக்களுக்கு எதனை செய்திருக்கின்றார்கள்? இவர்கள் எம் மக்களுக்காக ஏதாவது நல்ல விடயங்களை செய்ய இன்னும் எவவளவு காலம் அவகாசம் கொடுப்பது? மக்களே சிந்தியுங்கள். நீங்கள்தான் இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். இவர்கள் தொடர்ந்து தேர்தல் காலங்களில் உங்கள் இல்லங்கள் நாடி வந்து தமிழ் பாசிசத்தை வெறும் வாக்கு வங்கிக்காக உங்களுக்கு ஊட்டி வாக்கைப் பெற வருவார்கள். இனிவருகின்ற காலங்களில் கிழக்கு தமிழ் மக்கள் உண்மையான சிந்தனையாளர்களாக மாறி சரியான எமக்கான உண்மை அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க உறுதி பூண வேண்டும் எனவும் அவர் தனதுரையிலே குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பபின் மாகாண சபை உறுப்பினர்கள்; அனைவரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் முதல்வரின் உரையினை மிகவும் அவதானத்துடன் இரசித்து கேட்டமை குறிப்பிடத்தக்கது.

பாட்டன், முப்பாட்டன்மார் பாதுகாத்து கொடுத்த தாய் நாடாம்;பிரதமர் டி.எம்.ஜயரத்ன

வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கு வதானது, வடக்கில் மாநில அரசாங்கம் ஒன்று உருவாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகும் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகம் ஒன்றை கம்பளையில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாட்டன், முப்பாட்டன்மார் பாதுகாத்து கொடுத்த தாய் நாட்டை எந்த சந்தர்ப்பத்திலும் இரண்டாக பிரித்து வேறுபடுத்தப் போவதில்லை.
பௌத்த மத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் 2 ஆயிரத்து 557 வருடங்கள் பேணி பாதுகாத்த இந்த நாட்டை துண்டுகளாக பிளவுப்படுத்த வெளிநாட்டு சக்திகள் உட்பட பல சக்திகள் முயற்சித்து வருகின்றன.
வடக்கு மாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குமாறு அரசாங்கத்திற்கு பலவிதமான முறையில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் என்ற வகையில் அந்த கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தினாலும் தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் நிரந்தர சமாதானத்திற்காக அந்த கோரிக்கைகளையும் அழுத்தங்களையும் புறந்தள்ள தயாராக இருக்கின்றோம்.
வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதால், மாநில அரசாங்கம் ஒன்று உருவாக சந்தர்ப்பத்தை பெற்று கொடுத்தாக அமைந்து விடும்.
இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அந்த மாகாணத்தில் காணிகளின் பயன்பாடுகள் மற்றும் பிரதேசத்தின் பாதுகாப்பு பொறுப்புகள் அவரிடம் சென்று விடும்.
இதன் பின்னர் வடக்கில் தனியான ஆட்சியை அவர்கள் உருவாக்கி கொள்வதுடன், மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருந்து விலகி தமது எண்ணத்தின்படி செயற்பட முயற்சிப்பர். இதனை எப்போதும் மறந்து விடக் கூடாது.
நாட்டில் மாநில அரசாங்கம் ஒன்று உருவாகவும் நாட்டை பிளவு படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்றார்.

மேலுமொரு பெண் மத்திய கிழக்கில் சித்திரவதை .வீடியோஇணைப்பில்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் அராபியர்களால் சொல்லொணாத் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு சித்திரவதைக்குள்ளானவர்கள் ஒருவரேனும் வாராந்தம் இலங்கைக்கு வந்தவண்ணமே உள்ளனர். இந்த வரிசையில் நேற்று முந்தினம் மாத்தளை மடவள பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் மிகவும் சித்திர வதைக்குள்ளான நிலையில் இலங்கை திரும்பி மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த பெண், தன்னை அடித்து துன்புறுத்திய எஜமானர்கள் தனது தலைமுடியை வெட்டியதாகவும் பல நாட்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு கூட அனுமதிக்க வில்லை என்றும் குறிப்பிடுகின்றார். 

அத்துடன் தனக்கான ஊதியத்தை 2 மாதங்களாகியும் வழங்காத நிலையில் ஊதியம் கேட்டபோது இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கின்றார். 


வெள்ளிக்கிழமை தான் நோன்பு;உலமா சபை

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடப்பட்டது
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடப்பட்டது
இலங்கையில் நாளை வெள்ளிக்கிழமை தான் (09.08.2013) முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை கொண்டாட வேண்டுமென்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவித்திருந்த நிலையிலும், சில பகுதிகளில் இன்று வியாழக்கிழமையே பெருநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
கிழக்கில் கிண்ணியா பிரதேசத்தில் புதன்கிழமை இரவு தலைப்பிறை தென்பட்டதாக வந்த அறிவிப்பை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஏற்க மறுத்துவிட்டது.

அதற்கான காரணங்கள் பற்றி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முஃப்தி தமிழோசையிடம் விளக்கமளித்தார்.

கணவருடன் உறங்கினால், ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும்

கணவருடன் உறங்கினால், ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று அவருடைய மனைவிக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இங்கிலாந்து நீதிமன்றமே இவ்வாறு எச்சரித்து தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கு, இங்கிலாந்தில் வசித்து வரும் ஒரு சீக்கிய குடும்பம் பற்றியதாகும்.அக்குடும்பத்தில் 35 வயதான, ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் இருந்தார். அவருக்கு இந்தியாவில் பஞ்சாபில் மணப் பெண் பார்த்தனர். மணப்பெண், கால் முடமானவர்.
திருமணத்துக்காக, அந்த இளைஞன், இங்கிலாந்தில் இருந்து பஞ்சாபுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்டார். தாலி கட்டுவதற்கு முன்பு, அவரை அப்பெண் பார்க்கவில்லை. தாலி கட்டிய பிறகுதான், தனது கணவர் இயல்பான மனிதர் அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டார். இருப்பினும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவருடன் வாழத் தொடங்கினார்.
திருமணத்துக்கு பிறகு, இருவரும் இங்கிலாந்து திரும்பினர். இங்கிலாந்து சட்டப்படி, 'உடலுறவுக்கு' சம்மதிக்கவோ, மறுக்கவோ இயலாத நிலையில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவரின் திருமணம் ரத்து செய்யப்படும். 
எனவே, இவர்களது திருமணத்தை ரத்து செய்யுமாறு பர்மிங்காமில் இதற்கென உள்ள விசேட நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு முறையிட்டது. அந்த இளைஞரை, மனநல மையத்தின் பராமரிப்புக்கு அனுப்பி வைத்தது.
ஆனால், தங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் நீதிபதி ஹோல்மன் விசித்திரமான தீர்ப்பு அளித்தார். அந்த வாலிபர், உடலுறவுக்கு உடன்படும் திறன் படைத்தவர் அல்ல என்று நீதிபதி குறிப்பிட்டார்.
எனவே, அவருடன் தூங்கி அவருடைய மனைவி எந்தவகையிலாவது பாலியல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டால், அந்த வாலிபர் குற்றச்செயலில் பாதிக்கப்பட்டவராகி விடுவார் என்றும், அதன் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றும் நீதிபதி கூறினார்.
அதே சமயத்தில், அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்று, திருமணத்தை ரத்து செய்ய மறுத்து விட்டார். தனது துயரமான நிலைமையை மனவலிமை மற்றும் கண்ணியத்துடன் அப்பெண் தாங்கி வருவதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.
கணவருடன் தூங்கினால் ஆயுள் தண்டனை' என்று இங்கிலாந்தில் இதுபோன்று ஒரு நீதிபதி தீர்ப்பை அளித்திருப்பது. இதுவே முதல்தடவையாகும்.

jeudi 8 août 2013

புதிய வசதியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்!

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது பயனர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த வரிசையில் தற்போது பேஸ்புக் Embeddable Posts எனும் யூ டியூப்,வசதியை போன்று பேஸ்புக்கும் மதது தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை வேறு இணையத்தளங்களில் பயன்படுத்தவதற்காக Embed வசதியை கொடுத்துள்ளது
இதே போன்று பேஸ்புக் வோல்களில் பகிரப்படும் போஸ்ட்களினையும் இவ்வசதி மூலம் ஏனைய தளங்களில் நேரடியாக பயன்படுத்த முடியும் என்பதால் குறித்த போஸ்ட்களுடன் தொடர்பான புகைப்படங்களை தரவிறக்கம் செய்து மீண்டும் தரவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் தகவலின் அடிப்படையில் இந்திய பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்ட இவர் இலங்கையிடம் பின்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஆசியாவில் அதிகளவான இராணுவம் நிலை வட மாகாணத்தில் தான்;தேர்தல் கண்காணிப்பு

ஆசியாவில் அதிகளவான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள பிரதேசமாக வடக்கு பிரதேசத்தைக் கருத முடியும் எனத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான "கபே' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு மிகவும் அதிகளவிலான இராணுவத்தினர் உள்ளனர். சரியாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆசியாவில் அதிகளவான இராணுவம் நிலை கொண்டுள்ள பிரதேசமாக இலங்கையின் வடக்குப் பிரதேசத்தைக் கருத முடியும்.
வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறது. அது பொருள்களை விற்பனை செய்வது முதல் பாதுகாப்பு உட்பட பல விடயங்களில் நீண்டு செல்கிறது. வடக்கில் முகாம்களில் உள்ள இராணுவத்தினரை இந்தப் பணிகளில் இருந்து விலக்கி வைக்காமல் தேர்தலை நடத்துவது எந்த வகையிலும் நேர்மையானதல்ல.
எனினும் செயற்பாடுகளை வரையறுக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. நாட்டின் தெற்குப் பகுதிகளில் உள்ளது போல், பொலிஸாருக்குச் சிவில் பணிகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் தற்போதுள்ள பிரச்சினைக்குத் தற்காலிகமாவோ, குறுகிய காலத்திற்கோ தீர்வு காணமுடியும்.
நிலைமை இப்படியிருக்க, இதை போர்த்து மூடி தேர்தல் வெற்றிக்காக சில தேர்தல்காலச் சலுகைகளும் இடம் பெறுகின்றன.
இராணுவம் பல இடங்களில் வெளியேறிவிட்தாகவும், பல இடங்களில் மக்கள் குதூகலமாக குடியேறிவிட்டதாகவும், வடக்கு வசந்தத்தின் பிதாமகன் (சர்வாதிகார-இராணுவ-ஆளுனர்) சொல்கின்றார்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் தமது காணி சுவீகரிப்புக்கு எதிராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் புதல்வர் எஸ்.ஜே.கிறிஸ்டியன் கதிர்காமர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அங்கு தமது பூர்வீக காணிகளை சுவீகரிக்கும் முனைப்புக்கள் இடம்பெற்று வருவதாக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
உண்மையில் இது எதைத்தான் காட்டுகின்றது.? இவருக்கே இந்நிலையென்றால், தேர்தலின் பின் மக்களின் நிலை எப்படியருக்கும்? வடக்கின் வசந்தம் எப்படியிருக்கும்?
டக்ளஸ் சொல்கின்றார் எம்மை வெல்லவைத்தால், நாம் போராடிப்பெற்ற 13-வதின் சகலதையும் பெற்றுத்தருவோம் என….. 13-வதின் பலதை பறிக்க முற்பட்ட ஜனாதிபதியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு செல்லமுடியாமல், ஒளிந்திருந்தவர்தான் டக்ளஸ். இப்பேர்ப்பட்ட வீரன் எதிர்காலத்தில் இதற்காகப் போராடுவாரா? தனது நீண்டகாலக் கனவு, வடமாகாணசihத் தேர்தல், முதலமைச்சர் பதவி எனச் சொன்ன டக்ளஸ்இ இப்போ மகிந்தா சொன்னதன் பேரிலேயே தேர்தலில் நிற்கவில்லை என்கின்றார்.
இவைகளை எதுவாகக் கணிக்கலாம்? மக்களிற்கு காதில் பூ வைக்கும் தேர்தல்கால கோமாளித்தனமாகத்தான் கொள்ளலாம்.
"வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறது. அது பொருள்களை விற்பனை செய்வது முதல் பாதுகாப்பு உட்பட பல விடயங்களில் நீண்டு செல்கிறது. வடக்கில் முகாம்களில் உள்ள இராணுவத்தினரை இந்தப் பணிகளில் இருந்து விலக்கி நாட்டின் தெற்கு பகுதிகள் போல் ராணுவச் செயற்பாடு இருக்க வேண்டுமென்ற "கபே" செயலாளரின் கூற்று எதன்பாற்பட்டது?
ஓர் சிவில் சமூகச் செயற்பாடு அச்சமூகத்தின் அச்சாணியான ஜனநாயக விழுமியங்களின் செயற்பாட்டின் பாற்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதேயாகும்.
வடக்கின் இன்றைய ராணுவ சிவில் நிர்வாகச் செயற்பாடும் அதன் "அர்ப்பணிப்பற்ற சேவை" என்பது, வடக்கில் எப்பிரச்சினைகளும் இல்லையென உலகிற்கு காட்டும் சினிமாப்பட உத்தியே. இதில் ராணுவம் மக்களுக்கு ரத்தம் கொடுக்கின்றது என பொங்கி எழும் அரச அடியாட்களின் அரச பக்திப்-பாமரத்தை என்னே என்பது.
ராணுவம் மக்களுக்கு ஆனதல்ல, என்பதை நேற்றைய கம்பகா பலியெடுப்பு மூலமாவது அரச பக்திப் பரவசங்களும், அரச எடுபிடி அடியாட்களும் உணர்வார்களா?

mardi 6 août 2013

கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்மிக்கல்

கந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்மிக்கல்யாழ் கந்தரோடைப் பகுதியில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் பயன்படுத்திய அம்மிக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனோடு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண்சட்டி, பானைகளின் ஓட்டுத் துண்டுகள் மற்றும் கல் மணிகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கொக்குவிலில் அமைந்துள்ள ஆகோள் ஆய்வுமையத்தைச் சேர்ந்த நான்கு அகழ்வு ஆராட்சியாளர்களைக் கொண்ட குழுவினர் கடந்த நவம்பர் மாதம் கந்தரோடைப் பகுதியில் மேற்கொண்ட அகழ்வாராய்சியின் போது இவற்றைக் கண்டு பிடித்தனர்.
கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களில் அம்மியின் புகைப்படத்தையும் அம்மியின் ஒரு பகுதியையும் சில ஓட்டுத் துண்டுகளையும் எக்காலத்துக்குரியவை என்பதைக் கண்டறிவதற்காக தமிழ்நாடு தஞ்சாவ+ர் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் அம்மிக் கல் கிறிஸ்துவுக்கு முன் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஓட்டுத் துண்டுகள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
இவ் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தமிழியல் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி nஜ. அராங்கராஜ் இது தொடர்பாகத் தெரிவிக்கையில்,
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி எமது ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களான சுரேஷ், நெந்தூரன், நடராஜh ஆகியோர் கந்தரோடைப் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது இவ் அம்மிக்கல்லையும் வேறு சில மண் பாத்திர எச்சங்களையும் கண்டெடுத்தோம் என்று தெரிவித்தார்.
தரையிலிருந்து நாலடி ஆழத்தில் தோண்டும்போதே நான்கு கால்களையுடைய இந்த அம்மிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் கல் மணிகள், பானை ஓடுகள், ரோமானியர்களின் நாணயங்கள் இரண்டாயிரத்து 300 ஆண்டுகள் பழமையான சுடுமண்ணினால் செய்யப்பட்ட சீன நாட்டின் பானை ஓடுகள், தாழி ஓடுகள், கறுப்புச் சிவப்புப்பானை ஓடுகள் போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
கண்டெடுக்கப்பட்ட அம்மிக்கல் எக்காலத்துக்குரியது என எம்மால் உடனடியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் இதன் புகைப்படத்தினை தமிழ் நாடு தஞ்சாவ+ரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஆய்விற்காக அனுப்பி வைத்தோம். அங்கு கல்வெட்டுக்கள் மற்றும் தொல்லியல் பேராசிரியர் கலாநிதி மா. பவானி இதனை ஆய்விற்கு உட்படுத்தி இற்றைக்கு மூவாயிரம் (பெருங்கற்காலம்) ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டு பிடித்ததாகவும் தெரிவித்தார்.
இவ் அம்மிக்கல்லின் மாதிரியை இந்தியா, தமிழ் நாட்டில் கொடுமலை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய அம்மிக் கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது அவற்றுடன் இந்தக் கல்லும் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனாலேயே இவ் அகழ்வாராய்ச்சியின் முடிவை உடனடியாக அறிவிக்க முடியவில்லை. இவ்வாறு முன்னர் கண்டெடுக்கப்பட்ட இவ் அம்மிக்கல்லை ஒத்த அம்மிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் செ.கிருஷ்ணராஜhவிடமும் உள்ளது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

பலர் முன்னிலையில் வெள்ளை வேன் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளது குழுவொன்று

கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர தனியார் பேருந்து நிலையத்திற்குள் புகுந்த குழுவொன்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நேர காப்பாளர் ஒருவரை கடுமையாக தாக்கியதுடன், பலர் முன்னிலையில் வெள்ளை வேன் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளது.
இலங்கையில் பிரச்சனைகளுக்கு தீர்வு- துப்பாக்கிக் குண்டுகள் கண்மூடித்தனமான தாக்குதல்கள் வெள்ளைவான்கள்இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருந்த ஏ. காமினி என்ற நேர காப்பாளரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அங்கொட அம்பத்தலை பிரதேசத்தை சேர்ந்த காமினி கடந்த இரண்டு வருடங்களாக இந்த தொழிலை செய்து வந்துள்ளார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நடந்துனர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்தது எனவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். எனினும் எந்த பேருந்து சாரதியும், நடத்துனரும் இது குறித்து முறைப்பாடுகளை செய்யவில்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் 12 மணியளவில் குணசிங்கபுர பேருந்து நிலையத்தின் நேர காப்பாளரின் அலுவலகத்திற்குள் சென்ற ஒருவர், காமினியை சந்தித்து அவசர விடயம் ஒன்று குறித்து பேச வேண்டும் கூறி அலுவலகத்தில் இருந்து வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது வேகமாக சென்ற வேன் ஒன்று அலுவலகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. குழப்பம் விளைவிக்காமல் வேனில் ஏறுமாறு வேனில் வந்த ஒருவர் காமினியிடம் கூறியுள்ளார்.
வேனில் ஏற மறுத்த காமினியை வேனில் வந்த இரண்டு பேர் காமினியை தாக்கி, வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது ஏராளமான மக்கள் அந்த இடத்தில் இருந்த போதும், என்ன நடந்தது என்பதை நினைத்து கொள்ள முடியாதளவில் அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
புறக்கோட்டை ஆட்டுப்பட்டி தெரு காவற்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வியட்நாம் நாடு விண்ணிற்கு அனுப்பியுள்ள மைக்ரோ செயற்கைக்கோள்

வியட்நாம் நாடு சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு சிறிய செயற்கைக்கோளை நிறுவி உள்ளதாக நேற்று வெளிவந்த செய்தி தெரிவிக்கிறது. ஜப்பானின் வர்த்தக விண்கலமான குனோடோரி௪ன் மூலமா பிக்கோ டிராகன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளும், அமெரிக்காவின் 3 செயற்கைக்கோள்களும் விண்வெளி மையத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விண்கலத்தைச் சுமந்து செல்லும் எச்௨பி ராக்கெட் சனிக்கிழமை அன்று விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் குறைந்த அளவு சுற்றுப்பாதையில் இந்த ராக்கெட் ஐந்து நாட்கள் பயணம் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்கோ டிராகன் செயற்கைக்கோள், விண்வெளி சுற்றுச்சூழல் விபரங்கள், பூமியின் படங்கள் மற்றும் சோதனை தொடர்பு அமைப்புகள் போன்றவை குறித்த தகவல்கள் சேகரிக்க அனுப்பப்பட்டுள்ளதாக வியட்நாமின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செயற்கைக்கோள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு விண்வெளி மையத்தில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்த ஆண்டு மே மாதம், வியட்நாமின் முதல் தொலை உணர்வு செயற்கைக்கோள் விஎன்ஆர்ஈடிசாட்௧ பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரௌ தளத்திலிருந்து கோள்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.

சிகரெட் புகைப்பழக்கத்தை ஒழிக்க பேசும் சிகரெட் பெட்டி : லண்டன் ஆய்வாளர்கள்

சிகரெட் பாக்கெட்டை திறந்தாலே அது, “உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ என்ற, வாசகத்தை, புகைப்பவர்கள் கேட்கும் வகையிலான, பேசும் சிகரெட் பாக்கெட்டுகள், பிரிட்டனில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாசகம் லண்டனை சேர்ந்த, ஸ்டர்லிங் பல்கலைக் கழகத்தின், புகையிலை கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய ஆய்வாளர்கள் தான், இந்த பேசும் சிகரெட் பாக்கெட்டை கண்டுபிடித்துள்ளனர். இதில், “சிகரெட் பிடித்தால் உடல்நலத்திற்கு தீங்கானது’ என்ற வாசகம் மட்டுமின்றி, “புகைபிடித்தால், மலட்டுத்தன்மை’ ஏற்படும் என்பது போன்ற வாசகங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. சிகரெட் பாக்கெட்டில் இடம்பெற்றுள்ள தொலைபேசி எண்களை, புகைப்பவர் சுழற்றும் பட்சத்தில், புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து, மறுமுனையில் பேசுபவர் விளக்குவார். “இந்த சிகரெட் பாக்கெட் விற்பனைக்கு வந்தால், அது, புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்’ என, இதனை வடிவமைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.இளம்பெண்கள் : பிரிட்டனில், இளம் பெண்களில் ஏராளமானோர், புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால், 16 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இதுகுறித்த ஆய்வு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, சிகரெட் பாக்கெட்டை திறந்ததும் சொல்லப்படும் அறிவுரை, தங்களை சிந்திக்க வைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
நிறுவனங்களே… : புகைக்கு அடிமையான பெண்களை, இந்த இழிபழக்கத்திலிருந்து மீட்கும் வகையில், சிகரெட்டை தயாரிக்கும் நிறுவனங்களே, சிகரெட் பெட்டிகளை மிகவும் கவர்ச்சிகரமாகவும், ஒவ்வொரு முறையும், சிகரெட் பாக்கெட்டை திறக்கும்போது, வாசகங்கள் கேட்கும் வகையிலும், இவற்றை தயாரித்துள்ளன என்பது தான் இதன் ஹைலைட். தொழில்நுட்பம் நாம் பிறந்தநாள் கொண்டாடும்போது, மெழுகுவர்த்தியை ஏற்றினால், அதில் வரும் “ஹாப்பி பர்த்தடே டூ யு’ என்பது போன்ற தொழில்நுட்பம் தான், இந்த சிகரெட் பாக்கெட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாரிய உட்கட்டமைப்பு .பெரிய கப்பல்களுக்கு வசதியாக கொழும்புத் துறைமுகம் அபிவிருத்தி

இலங்கையில் கொழும்புத் துறைமுகம் பாரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான துறைமுகத்துக்குள் பெரிய கப்பல்கள் பிரவேசிப்பதற்கு வசதியாக இந்த விரிவுபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுக அபிவிருத்தி செயற்திட்டத்தின் முதற்கட்டமான தெற்கு- கொழும்பு முனையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை காலை திறந்துவைத்தார்.சுமார் 250 கோடி டாலர் மதிப்பிலான இந்த செயற்திட்டத்தின் 85 வீத செலவினத்தை சீன அரசு வழங்கியுள்ளது. மிகுதி 15 வீதத்தை இலங்கை அரசு செலவிட்டுள்ளது.
பெரியளவான கொள்கலன்களை ஏற்றிய கப்பல்கள் தரித்துநிற்பதற்கு வசதியாக இந்த தெற்கு துறைமுக முனையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும் அண்டை நாடுகளிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதாக இந்தியாவுக்கு கவலைகள் உள்ள நிலையில், இலங்கையின் மற்றுமொரு துறைமுக செயற்திட்டம் சீனாவின் உதவியில் நடந்துள்ளது.
ஆனால், இந்தத் துறைமுகத்தை இராணுவத் தேவைகளுக்காக வெளிநாட்டுச் சக்திகள் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.
கொழும்புத் துறைமுக அபிவிருத்தியின் மூலம் இந்தியத் துணைக் கண்டப் பிராந்தியத்துக்குள் பெருமளவிலான கப்பல் போக்குவரத்துக்களை ஈர்க்க முடியும் என்று இலங்கை அதிகாரிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சந்திரிகாவின் பாதுகாவலர்கள் 9 பேருக்கு நான்கரை வருட கடுழியச் சிறைத்தண்டனை!

கடும் அங்கவீனனுக்கு நான்கரை வருடம் சி்றை! ரூகாந்த வழக்கில் தீர்ப்பு! (காணொளி இணைப்பு)

2000 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி ரூகாந்த குணதிலக மற்றும் சந்திரலேக்கா பெரேரா தம்பதியினர் வசித்து வந்த மத்தேகொடவில் அமைந்துள்ள வீட்டுக்கு ஆயுததாரிகள் புகுந்து அவர்களுக்குத் தொல்லை கொடுத்து , தங்க ஆபரணங்களையும் ஜீப் வாகனமொன்றையும் கடத்திச் சென்றது உள்ளிட்ட 9 குற்றங்களின்பேரில் சட்ட மா அதிபர் பாணந்துறை மேல் நீதிமன்றில் இந்த வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். 

குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகக் கடமைபுரிந்த பொலிஸ் அதிகாரிகள் 9 பேருக்கு நான்கரை வருட கடூழிய சிறைத் தண்டனை பாணந்துறை நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி கடும் அங்கவீன நிலையில் இருப்பதனால் அவருக்கு தளர்த்தப்பட்ட நான்கரை வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட ரூகாந்த மற்றும் சந்திரலேக்காவுக்கு ரூபா 2 இலட்சம் வீதம் 10 குற்றவாளிகளும் ரூபா 20 இலட்சம் செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கிற்கு 13 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கிய பாணந்துறை மேல்நீதிமன்ற நீதிபதி குஸலா சரோஜினி வீரவர்தன குறிப்பிடுகையில், ‘ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு மட்டுமே’ என்று குறிப்பிட்டார்.

அவ்வாறிருக்க, அவர்கள் தங்களது கடமையிலிருந்து விலகி, குற்றமிழைத்துள்ளதுடன் இது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதெனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கும் போது குறிப்பிட்டார்.

இவ்வாறு நீதியான தீர்ப்பு வழங்கப்பட்டமை குறித்து, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் பாடகர் ரூகாந்த தனது நன்றியைத் தெரிவித்ததுடன், ‘...இதனால் ஏற்பட்ட இழப்புக்கள் இவ்வளவுதான் என்று குறிப்பிட முடியாதுள்ளது. ஒரு ஆணாக நின்று என்னால் சமாளிக்கமுடியுமாக இருந்தாலும், சந்திரலேக்காவுக்கு அவ்வாறு முடியாது. இந்நிகழ்வினால் நாங்கள் நிறையவே மன உளைச்சலுக்கு ஆளாகினோம். என்றாலும், எங்களுக்கு நீதியான தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்பியிருந்தோம் என்றாலும் தீர்ப்பு என்று வழங்கப்படும் என்று அறிந்திருக்கவில்லை எனவும் பாடகர் ரூகாந்த குறிப்பிட்டார்.

lundi 5 août 2013

அதிகாரங்களை என்னிடமிருந்து எவரும் பறிக்க முடியாது – ஜனாதிபதி

MRமுப்பது வருட கால ஏகாதிபத்திய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எமது அரசாங்கம் வடக்கில் மக்கள் ஜனநாயக ரீதியில் ஆளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. புலிகளின் மறைவிற்குப் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஜனநாயக ரீதியில் அம்மக்கள் செயற்பட சந்தர்ப்பத்தை வழங்கினோம்.
இப்போது வட மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படுகிறது. மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் எமது அரசாங்கம் வடக்கில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது.
யுத்தத்தின்போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட சுமார் 14,000 புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வளித்து சமூகத்தில் அவர்களை இணைத்துள்ளோம்.
தமிழ்க் கூட்டமைப்பு வடமாகாண சபையைக் கைப்பற்றி காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கோரினால் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி
சட்டப்படி காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்னிடமே உள்ளன. அரசியலமைப்பிலும் அது மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் என்னிடமிருந்து இந்த அதிகாரங்களை இலகுவில் எவராலும் பறித்துவிட முடியாது. எனது வரலாற்றில் அத்தகையதொரு மாற்றம் ஒருபோதும் ஏற்படாது.
வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்து வருவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி
இலங்கை கடல் எல்லைக்குள் வெளியார் வந்து மீன் பிடித்தால் கைது செய்யுமாறு நாம் உத்தரவிட்டுள்ளோம். அவ்வாறு நாம் நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பங்களில் எமது கடற்படையினர் அப்பாவிகளான தமது நாட்டு மீனவர்களைக் கடலில் வைத்துத் தாக்குவதாகப் பொய்ப்பிரசாரம் செய்கின்றனர். இது குறித்து இந்திய அரசிற்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
யுத்த காலத்தில் எமது மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் கட்டுப்பாடுகள் இருந்தன. அதனை இந்திய மீனவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்தமையே உண்மையான வரலாறு. இப்போது யுத்தம் முடிந்து விட்டதே.
எமது மீனவர்கள் எமது கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதையே அவர்கள் தடுக்க முனைகிறார்கள். முடிந்தளவு சமரசமாகச் செல்வோம்,
எல்லை தாண்டி வந்தால் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று எமது மீனவர்களும் எல்லை தாண்டிச் சென்றால் கைது செய்யுமாறு இந்திய அரசிற்கு அறிவித்துள்ளோம்.

தடை மதவாத கட்சிக்கு வங்காளதேச கோர்ட்டு

வங்காளதேசத்தில் ஜமாத் இ–இஸ்லாமி என்ற மதவாத கட்சி செயல்படுகிறது. இக்கட்சியை அந்நாட்டு கோர்ட்டு தடை செய்து சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.இதனால் இனிவரும் தேர்தல்களில் அக்கட்சி போட்டியிட முடியாது. அதை தொடர்ந்து அக்கட்சிக்கான அங்கீகாரத்தை வங்காளதேச தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.இதையடுத்து கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து ஜமாத் இ–இஸ்லாமி கட்சியினர் நேற்று தலைநகர் டாக்காவில் தெருக்களில் பேரணி நடத்தினார்கள்.ஜமாத் இ–இஸ்லாமி கட்சி மற்றும் அதன் மாணவர் அணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி டாக்காவில் மொகாகலி மேம்பாலத்தில் சென்றபோது திடீரென வன்முறை வெடித்து கலவரமாக மாறியது. அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதில் பஸ்களும், பல வாகனங்களும் தீப்பிடித்தன.
போக்ரா பகுதியில் போலீசார் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. எனவே அவர்களை கலைக்க போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இந்த கலவரத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சமாதானத்துக்கான சர்வதேச விருது கிளிநொச்சி 49 வயது தவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம் தெரிவு


தவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம்தவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம்இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உழைத்து வருகின்ற பெண் ஒருவர் சர்வதேச சமாதான விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
கிளிநொச்சி மாவட்டம் திருநகர் வடக்கைச் சேர்ந்த 49 வயது தவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம் இந்த விருதுக்காகத் தெரிவாகியிருக்கின்றார்.கிராமிய மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும், பிரதேச செயலக மட்டத்திலான பெண்கள் அபிவிருத்தி சம்மேளனத்தின் பொருளாளராகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்னம் பணியாற்றி வருகின்றார்.
இறுதி யுத்தத்திற்கு முன்பே கணவன் இவரை விட்டுப் பிரிந்து சென்றதனால், தனது பிள்ளைகளுடன் ஆண் உதவியின்றி இவர் வாழ்ந்து வருகின்றார்.
கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வந்த இவர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்பும் தன்னைப் போன்று ஆண் துணையற்ற பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் உதவும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
இவருடைய பொதுச் சேவையைப் பாராட்டி, அரச நிறுவனங்கள் மகளிர் தினத்தின்போது பாராட்டி கௌரவித்திருக்கின்றன. அந்த வகையில் இவருக்கு இந்த சர்வதேச விருது கிடைத்திருக்கின்றது.

விருதின் பின்னணி

இந்த விருதானது, தனது சமூகத்தில் பாதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்களுக்கும், உதவியற்றவர்களுக்கும் தொடர்ந்து பணியாற்றுவதற்குத் தன்னை ஊக்குவித்திருப்பதாக அவர் கூறுகின்றார்.
ஆசிய பிராந்திய நாடுகளில் அடிமட்டத்தில் இருந்து தேசிய மட்டத்தில் கணிக்கக் கூடிய வகையில் சமாதானத்தையும், மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களையும் ஏற்படுத்துவதற்காக உழைக்கும் தலைவர்களான பெண்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'என்' சமாதான விருது வழங்கப்படுகின்றது.
'என்' (N) சமாதான வலையமைப்பின், இந்த விருது வழங்கும் நடவடிக்கையானது, ஆசிய பிராந்தியத்தில் ஐநா மன்றத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் (யுஎன்டிபி) கீழ் செயற்பட்டு வருகின்றது.
இந்தோனேசியா, சிறிலங்கா, திமோர் லெஸ்டே, நேபாளம், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சிறந்த தலைமைத்துவத்தின் மூலம் சமாதானத்தை உருவாக்குவதன் ஊடாக சமூகத்தை வலுவூட்டுகின்ற பெண்களை இனங்கண்டு, அவர்களுக்கு இந்த நிறுவனம் விருது வழங்கி வருகின்றது.
பெண்கள் மட்டுமல்லாமல், பெண் சமத்துவத்திற்காக உழைக்கின்ற ஆண்களையும் இனங்கண்டு இந்த நிறுவனம் விருது வழங்கி கௌரவிக்கின்றது.
இம்முறை – 2013 ஆம் ஆண்டுக்கான இந்த சமாதான விருதுக்காக ஆப்கானிஸ்தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், சிறிலங்கா, இந்தோநேசியா, திமோர் லெஸ்டே, பிலிப்பைன்ஸ் ஆகிய 7 நாடுகளில் இருந்து ஆளுமைமிக்க 7 பெண்களும், பெண்களின் சமத்துவத்திற்காகப் பாடுபட்ட இந்தோனேசியாவைச் சேர்ந்த உதவி அமைச்சராகிய ஆண் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

vendredi 2 août 2013

சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு


சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து, அந்த விவகாரம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான இந்த விசாரணைக் குழுவை இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க நியமித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெலிவேரிய நகரில் பொதுமக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்துள்ளனர்.
சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய பிரதேச மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களை பல தரப்பினரும் கண்டித்துள்ளனர்.
மக்கள் அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு உள்ள ஜனநாயக உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டுமென்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வெலிவேரிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நடந்த போராட்டத்தை பொலிசாரும் இராணுவத்தினரும் அடக்க முற்பட்டபோது, போராட்டம் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையிலான மோதலாக மாறியுள்ளது.

'கத்தோலிக்கத் திருச்சபைக்குள் தாக்குதல்'

'கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நுழைந்த படையினர் தாக்குதல் நடத்தினர்'
'கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நுழைந்த படையினர் தாக்குதல் நடத்தினர்'
பிரதேசத்தில் கழிவுநீரைக் கொட்டுகின்ற தொழிற்சாலை ஒன்றை மூடிவிடுமாறு கொழும்பு கண்டி வீதியில் பெலும்மஹர என்ற இடத்தில் கடந்த ஒரு வாரமாகவே போராட்டம் நடந்துவந்துள்ளது.
அந்தப் போராட்டம் பொலிசாரால் அடக்கப்பட்ட நிலையிலேயே, அது வேலிவேரிய பகுதியில் பெரும் கலவரமாக மாறிப்போனது.
வெலிவேரிய பகுதிக்குச் சென்று பார்வையிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர், இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
வெலிவேரியவில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபை ஒன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர், அங்கு தஞ்சம் புகுந்திருந்தவர்களையும் தாக்கியதாக நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.
இதேவேளை, வெலிவேரிய சம்பவத்தின் பின்னணியில் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் கும்பலே இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.
'அரசியல் வெற்றி ஏதும் இல்லாமல் காத்திருக்கின்ற எதிர்க்கட்சியினர் இப்படியான சம்பவங்களைத் தூண்டிவிட்டு அரசியல் லாபம் தேட முயன்றுவருகிறார்கள்' என்று கூறினார் இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும.
இதேவேளை, பெற்றோல் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த வந்தவர்கள் மீதே தாம் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

தோழர்களுடன் சேர்ந்து நான்கு நூல்கள், மூன்று கூட்டங்கள், இரு நாடுகள்; யமுனா ராஜேந்திரன்

நான்கு நூல்கள், மூன்று கூட்டங்கள், இரு நாடுகள்  நண்பர்களுடன் அல்லது தோழர்களுடன் சேர்ந்து இலண்டனிலிருந்து  பாரிஸ் செல்வதற்கான மதுரமான வழி பேருந்துப் பயணம்தான். சென்று திரும்பும் பயணநேரம் 17 மணிநேரங்கள் என்றாலும், வழியில் யூரோ டன்னல் அல்லது பெஃரி என மூன்று மணி நேரங்கள் போய்விடும். இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்குள் எனப் போகவர பேருந்து நிற்கும் நான்கு அரை மணிநேரங்கள் சேர்த்தால் மொத்தமாகப் பேருந்திற்கு வெளியில் ஐந்து மணி நேரங்கள் கழிந்து விடும்.  சென்று சேர 6 மணிநேரமும் வந்து சேர 6 மணிநேரமும் என 12 மணிநேரங்களை நீங்கள் நண்பர்களுடன் அந்தரங்கமாகவும் விச்ராந்தியாகவும் பேசியபடி பேருந்தில் இருந்தபடி பயணம் செய்யலாம். தோழர்.பி.ஏ.காதர் அவர்களுடன் பாரிஸ் சென்றுவர இப்படியானதொரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. தோழர். காதர் என்னுடைய ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரபுப் புரட்சி : மக்கள் திரள் அரசியல் மற்றும் எஸ்.என்.நாகராசனின் நேர்காணல் தொகுப்பான ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது என மூன்று நூல்களின் இரு வெளியிட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். இலண்டன் கூட்டம் விம்பம் கலை இலக்கிய திரைப்பட அமைப்பின் அனுசரணையில் சூலை மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமையும், பாரிஸ் கூட்டம் அசை கோட்பாட்டிதழ் மற்றும் சர்வதேச சமூகப் பாதுகாப்பு மையம் என இரண்டு அமைப்புகளின் அனுசரணையில் சூலை மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையும் நடைபெற்றது. விம்பம் அமைப்பின் பின் ஓவியர் கிருஷ்ணராஜாவும், பாரிஸ் கூட்டத்தின் பின்  அசை தொகுப்பாளர் அசோக் யோகனும் தோழர். வரதனும் இருந்தார்கள்.
நான் கலந்து கொண்டு பாரிசல் நடைபெற்ற பிறிதொரு கூட்டம் கவிஞர் வாசுதேவனின் பிரஞ்சுப் புரட்சி நூல் குறித்த அறிமுகக் கூட்டம். சூன் 24 ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றவென இலண்டனிலிருந்து நண்பர் மு.நித்தியானந்தனையும் என்னையும் நூலாசிரியர் வாசுதேவன் அழைத்திருந்தார். எனது நூல்களின் இலண்டன் அறிமுகக் கூட்டத்திற்கு இ.பத்மநாப ஐயரும், பாரிஸ் கூட்டத்திற்கு தோழர். சிவநேசனும் தலைமையேற்றார்கள். தோழர்.சிவநேசன் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டவர். தோழர். சண்முகதாசனுடன் இணைந்து சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர். இலண்டன் கூட்டத்தில் நண்பர்கள் பி.ஏ.காதர், நேமிநாதன், இதயச்சந்தின், சேனன், வி.சிவலிங்கம், சசீவன் மற்றும் தோழர். வேலு போன்றவர்கள் உரையாற்றினார்கள். நண்பர் சபேசன் விவாத அமர்வை நெறிப்படுத்தினார். பாரிஸ் கூட்டத்தில் எனது இரு நூல்களை தோழர். பி.ஏ.காதர் அறிமுகப்படுத்த, சுஜந்தனின் நிலம் பிரிந்தவனின் கவிதை நூலை கவிஞர் அருந்ததி அறிமுகப்படுத்திப் பேசினார்.
எனது நூல்களின் இரு அறிமுகக் கூட்டங்களும் மிகுந்த நெருக்கடியின் இடையிலும் தயக்கத்தின் இடையிலும்தான் நடந்தன. முதல் கூட்டத்திற்கு முதலில் பேச்சாளர்களது ஒப்புதலைப் பெற்றுவிட்டேன். கூட்டத்திற்கான அழைப்பிதழை நண்பர்களுக்கு அனுப்பியபோது அன்றைய தினம் மட்டுமே அரசியல் நிகழ்வுகள், மணநிகழ்வுகள், கலைநிகழ்வுகள் என 7 நிகழ்வுகள் இலண்டனில் இருத்ததனையும், ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்ட அந்த நிகழ்வுகளுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் நூல் வெளியீட்டு நிகழ்வில் தமது கலந்துகொள்ள இயலாமையைத் தெரிவித்தவர்கள் 25 பேர் வரையிலும் இருந்தார்கள். கூட்டத்தில் பங்குபற்ற விரும்பிய சில நண்பர்கள் கூட்டத்தைப் பிறிதொரு திகதியில் வைப்பதற்கான தமது ஆலோசனையையும் தெரிவித்தார்கள். ஓப்புதல் தெரிவித்த பேச்சாளர்கள் 8 பேரையும் மறுபடியும் பிறிதொரு நாளில் திரட்டுவது என்பது சாத்தியமற்ற சூழலில், கூட்டத்தைத் திட்டமிட்டபடி நடத்துவது எனப் பிற்பாடு தீர்மானித்தோம்.
பாரிஸ் கூட்டமும் இவ்வாறனதொரு சூழலியே நிகழ்ந்தது. கூட்டம் திகதி அறிவிக்கப்பட்டு ஊடகங்களிலும் அறிவிக்கப்பட்ட நிலைமையில், அசோக் யோகனதும் வரதனதும் நெருங்கிய தோழரான குமரன் அவசரப்பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் இருந்தார். அசோக் மிகவும் மனச்சஞ்சலத்துடன் இருந்தார். கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தோழர்.குமரன் மரணமுற்றார். கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது தொடர்பான சம்சயம் தோழர்கள் அசோக் யோகனுக்கும் வரதனுக்கும் இருந்தது. தோழர். குமரனது இறுதிச் சடங்கும் கூட்டத்திகதிக்கு இருநாட்களின் பின்பு என உறுதி செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலுமானவர்கள் கூட்டம் நடக்காது எனவே கருதினார்கள். நானும் காதரும் பாரிஸ் சென்று சேர்ந்த நிலையில், ஏற்கனவே கூட்டம் தொடர்பான செய்தி ஊடகங்களில் பரவிய நிலையில் கூட்டத்தை நடத்துவது எனும் முடிவை பாரிஸ் நண்பர்கள் எடுத்தார்கள்.
ஓப்புக்கொண்டபடி இரண்டு கூட்டங்களுக்கும் பேச்சாளர்கள் சமூகமளித்தார்கள். இலண்டன் கூட்டத்தில் 25 பேரும், பாரிஸ் கூட்டத்தில் 45 பேரும் கலந்துகொண்டார்கள். இலண்டன் கூட்டத்தில் விவாத அரங்கிற்கான நேரம் திட்டமிட்டபடி அமையவில்லை என்றாலும், பாரிஸ் கூட்டத்தில் பி.ஏ.காதர் அவர்களுடனான விவாத உரையாடல் 75 நிமிடங்கள் வரை நீடித்தது. பாரிஸ் கூட்டம் கச்சிதமாக முடிந்த, நேரம் கடைப்பிடித்;த கூட்டம் என்று சொல்லலாம். இந்த அனுபவங்களின் அடிப்படையில் பிற்பாடு நானும் விம்பம் கே.கிருஷ்ணராஜாவும் உத்தேசித்திருந்த பாபா சாகேப் அம்பேத்கர் தமிழ்மொழி வடிவத் திரையிடல் மற்றும் ஆவணப்பட இயக்குனர் சொர்ணவேல் அவர்களுடனான சந்திப்பு என இரண்டையும் மறுதிட்டமிடலுக்கு உட்படுத்த வேண்டி நேர்ந்தது. கோடைகால உச்சத்தில் வரும் சூலை, ஆகஸ்ட் மாதக் கூட்டங்கள் சார்ந்த அமெரிக்க அனுபவமும் இத்தகையதுதான் என இயக்குனர் சொர்ணவேலும் எமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நான்கு நூல்கள், மூன்று கூட்டங்கள், இரு நாடுகள்  ஈழம், அரபுலகு அதனோடு உலக அரசியல் சார்ந்து ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக நான் தொடர்புபட்ட மூன்று நூல்களும் இருந்தன. நான் கலந்துகொண்டு விமர்சித்த வாசுதேவனின்  பிரஞ்சுப் புரட்சி நூலும் என்னளவில் மேலே குறிப்பிட்ட மூன்று நூல்கள் எழுப்பும், விவாதிக்கும் பிரச்சினைகளையே உள்ளுறையாகக் கொண்டிருந்தது. எனது நூற்கள் சார்ந்து வேறுபட்ட அரசியல் பார்வைகளும் கருத்தியல்களும் கொண்டிருந்த ஏழுபேரே விமர்சன அரங்கில் கலந்துகொண்டனர். இந்த வேறுபட்ட பன்முகப் பார்வைகள் வெளிப்பட வேண்டும், இதற்கிடையில் உரையாடல் நிகழவேண்டும் என்பதற்காகவே இந்தக் குறிப்பிட்ட நண்பர்களை நூல்கள் குறித்துப் பேச நான் அழைத்திருந்தேன்.
பி.ஏ.காதர், வி.சிவலிங்கம், சேனன், இதயச்சந்திரன் மற்றும் தோழர் வேலு போன்றவர்கள் அடிப்படையில் மார்க்சியப் பகுப்பாய்வையே முன்வைத்தாலும் நடைமுறை அரசியல் சார்ந்து இவர்கள் வேறுவேறு பார்வை கொண்டவர்கள். கல்வித்துறைசார் அறிவுப் பின்புலத்துடன் கோட்பாட்டையும் நடைமுறையையும் அணுகும் பிறிதொரு தலைமுறையைச் சார்ந்தவர் சசீவன். நேமிநாதன் ஈழப் பிரச்சினையில் இடதுசாரிகளின் செயல்பாடு குறித்த கடுமையான விமர்சனங்கள் கொண்ட தமிழ்தேசிய மரபினர். இந்த ஏழு பேச்சாளர்களில் மூன்றுவிதமான அணுகல்களை என்னால் மதிப்பிட முடிந்தது.
கல்வித்துறைசார் மரபுடன் அறிவியல்சார் ஆதாரங்களை முன்வைத்து கோட்பாட்டை அணுகும்முறை முதலாவது. கல்வித்துறைசார் அணுகுமுறையுடன் நடைமுறை அரசியல் ஆதாரங்களை இணைத்துப் பார்க்கும் நோக்கு இரண்டாவது. ஆதாரங்கள் திரட்டிக் கொள்ளப்படாமல் கோட்பாட்டு அடிப்படைகளை விடவும் நடைமுறை அனுபவங்களை முன்வைத்து அரசியலைப் பார்க்கும் பார்வை மூன்றாவது. சோவியத் யூனியன் தகர்வின் பின்னும், முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னும் அனுபவவாதமாகவே தேங்கிப்போன ஈழ வரலாறெழுதியல் என்பது கோட்பாடு, ஆதாரம், நடைமுறை போன்றனவற்றை கல்வித்துறைசார் ஆய்வுநெறியுடன் இணைத்து நோக்கப்பட வேண்டும் என்பதனையே நான் எனது நூல்களில்  வலியுறுத்துகிறேன். இந்த அணுகுமுறைக்கு தன்னுணர்வு சார்ந்த மிகை நம்பிக்கைகள் ஒருபோதும் சாதகமானதல்ல.
எனது நூல்களில் முன்வைத்த இதே பார்வையை பிரஞ்சுப் புரட்சி தொடர்பான வாசுதேவனின் நூல் விமர்சனத்திலும் நான் கைக்கொண்டேன். கோட்பாடு, நடைமுறை, கல்வித்துறைசார் ஆய்வு முறையியல் என்பது தன்னளவில் தற்சார்பு அற்றதோ அல்லது இடதுவலது என அரசியல் சார்புகள் கடந்ததோ அல்ல. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், பிரஞ்சுப் புரட்சி குறித்த நண்பர் மு.நித்தியானந்தனது பார்வையும் எனது பார்வையும் அன்று ஒருபடித்தானாக இருக்கவில்லை. நாங்கள் எமது ஆதாரங்களாக முன்வைத்த வரலாற்றாசிரியர்களது அரசியலும் ஒருபடித்தானது இல்லை.

ஈழ, புகலிட நிலைமைகளில் இன்று நிலவும் சிந்தனைப்போக்குகள் குறித்து அவதானிப்பை மேற்கொள்வது இங்கு பொருத்தமானதாக இருக்கும். ஈழத்தில் மூன்று ‘பிரதான’ அரசில் போக்குகள் என காணி காவல்துறை அதிகாரம் வடகிழக்கு இணைவு எனும் பாராளுமன்ற தேசியவாத அரசியல் எனவும், கடந்த காலத்தை முற்றிலும் நிராகரித்த அபிவிருத்தி மற்றும் இணக்க அரசியல் எனவும், இலங்கை அரசுடன் சமகாலத்தில் உறவும் முரணும் கொண்ட முஸ்லீம் தேசியவாதம் எனவும் நாம் வரையறுக்கலாம். தேர்தல் அரசியலை நிராகரித்த தீவிர தேசியவாதம், பிரதேசவாதம், தலித்தியம், தமிழ் முஸ்லீம் ஒற்றுமை அரசியல், மார்க்சிய அரசியல் போன்றனவற்றை ‘ஓரநிலையிலுள்ள’ அரசியல் போக்குகள் எனவும் வரையறுக்கலாம்.
தென்னிலங்கை அரசியலில் இரு பிரதான அரசியல் போக்குகளே இருக்கின்றன. சிங்கள பௌத்த தேசியத்தை யாப்படிப்படையிலான சர்வாதிகார அரசியலை நிலைநிறுத்தும் ஆளும் கட்சி அரசியல் எனவும், கருத்தியல் அளவில் இவர்களோடு முரண்படாத தேர்தல் எதிர்க்கட்சி அரசியல் எனவும் நாம் வரையறுக்கலாம். தென்னிலங்கை இடதுசாரிகளுக்கு எனக் ‘குறிப்பான’ எந்தத் திட்டங்களும் இல்லை. விக்ரமபாகு கருணாரத்ன தவிர தமிழர்களின் ஒன்றுபட்ட வடகிழக்கு பூர்வீகநிலம் என்பதனை ஒப்புபவர் எவரும் இல்லை. இன்று இவர்களிடையில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு ‘சிறுபான்மைப் போக்கு’  தமிழர் தேசியத்தை சிறுபான்மை இனவாதம் எனவும், சிங்கள பௌத்த தேசியவாதத்தை பெரும்பான்மை இனவாதம் எனவும் ‘பொதுமைப்படுத்தும்’ போக்கு. வடக்கு மற்றும் தென்னிலங்கையின் இந்த வேறுபட்ட அரசியல் போக்குகளுக்கு இடையில்தான் புகலிட ஈழ அரசியல் என்பதும் தனது நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
புகலிடத்தில் ஸ்தூலமாக ‘மூன்று’ அரசியல் போக்குகள் இருக்கின்றன. இவற்றில், முன்னாள் விடுதலைப் புலிகளின் தனித்தேசம் என்பதற்கே மக்கள்திரள் சக்தி இருக்கிறது. இதுவே வேறுபட்ட தாரைகளுக்கு இடையிலும் பிரதான புகலிடத் தமிழ் அரசியலாக இருக்கிறது. இவர்களுக்கிடையில் எந்தவிதமான ஆழமான அரசியல் கருத்தியல் விவாதங்களும் நடப்பதில்லை. பிற இருபோக்குகள் ’ஓரநிலைப்’ போக்குகள் ஆகும். இந்த இரு போக்குகள் சார்ந்தவர்களே புகலிடத்தில் கருத்தரங்குகளும், புத்தக வெளியிடுகளும், இலக்கிய விவாதங்களும் நடத்துகிறவர்கள். விடுதலைப் புலிகளின் நடைமுறைகள் பாலான கடுமையான விமர்சனப் பார்வை இவர்களது பொதுப்பண்பு.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பாக இவர்கள் இரு துருவமாகப் பிளவுபட்டிருக்கிறார்கள். முதல் பிரிவினர் விடுதலைப் புலிகளின் நடைமுறைகள் பற்றிய விமர்சனங்களோடு, இலங்கை அரசு சிங்கள பௌத்தவாத அரசு எனவும், தமிழ் சமூகத்தினுள் சாதியம், பெண்ணுரிமை தொடர்பான ஜனநாயகப்படுத்தல் நிகழவேண்டும் எனவும் சொல்பவர்கள். ஓடுக்கும் இலங்கை அரசுக்கும் ஒடுக்கப்படும் தமிழருக்கும் இருக்கும் முரண்பாட்டைத் தெளிவாக இனம் கண்டு இலங்கை அரசை எதிர்த்துப் போராடுவதைத் தமது கடமை எனவும், சமநேரத்தில் தமிழ்சமூகத்தினுள் புரையோடியுள்ள சாதியம் மற்றும் பெண்ணடிமைத்தனம் போன்றவற்றையும் எதிர்த்துப் போராட வேண்டும் எனவும் அவர்கள் கோருகிறார்கள்.
இந்தத் தமது அரசியலை அவர்கள் வெளிப்படையாகவும் முன்வைக்கிறார்கள். இந்த நோக்கிலிருந்து இலங்கை அரசுடன் இணைந்து செயல்படும் தமிழ்க் குழுக்களை இவர்கள் நிராகரிக்கிறார்கள்.
பிறிதொரு போக்கினர் விடுதலைப் புலிகளால் ‘மௌனமாக்கப்பட்ட’ சாதியப் போராட்டத்தைத் தமிழ் சமூகத்தில் தொடர்ந்து நிகழ்த்துவதை தமது முதன்மை அரசியலாக முன்வைப்பவர்கள். தெளிவாக இந்த அரசியலை இவர்கள் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இலங்கை அரசு, அதனது ராணுவம், சிவில் சமூகம், தென்னிலங்கை அரசியல் போக்குகள், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் போன்றவை குறித்த விவாதங்களை இவர்கள் தமது உரையாடலில் ’மௌனிக்கச்’ செய்துவிடுகிறார்கள். மறுதலையில், வட இலங்கை அரசியலில் இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்குபவர்கள், பிரதேசவாதிகளுடன் இணைந்தே தமது ’அரசியலை’ இவர்கள் முன்னெடுக்கிறார்கள்.
இவர்கள் இன்றைய இலங்கை நிலைமை தொடர்பாக வெளிப்படையாகச் சொல்வதெல்லாம் இதுதான் : ‘இலங்கையில் விடுதலைப் புலிகள் வீழச்சியின் பின் ஒரு ஜனநாயக இடைவெளி கிடைத்திருக்கிறது‘. விடுதலைப் புலிகளின் கீழான கடந்து முப்பதாண்டு தமிழ்ப் பிரதேச நிலைமையை இன்றைய நிலையுடன் ஒப்பீட்டளவில் வைத்துப் பார்ப்பவர்கள் இதனை மறுதளித்துவிடமுடியாது. ஆனால், இந்த ‘ஜனநாயக இடைவெளியின்‘ குணரூபம் எத்தகையது, இதில் இலங்கை ராணுவம், யாப்பு போன்றவற்றின் இடம் என்ன என்பது குறித்த ஆழமான விசாரணைகளுக்குள் இவர்கள் செல்வதில்லை. இது பெரும்பான்மையினத்துக்கு இசைவான ஜனநாயகம் என்பதனையோ, சிறுபான்மையினத்தைப் பிளவுபடுத்துவதன் மூலம் தனது அதிகாரத்தை இறுக்கும் ஜனநாயகம் என்பதனையோ இவர்கள் முன்வைப்பதில்லை. 
சாதியெதிர்ப்புப் போராட்டம் என்பதனை தமிழர்களுக்களிடையில் ஒரு மோதல் நிறைந்த பகைமைப் போராட்டமாகவே இவர்கள் முன்னெடுக்க விளைகிறார்கள். பரந்துபட்ட அளவில் அரசு, யாப்பு, சட்டவாக்கம், அதில் தமிழருக்கு உள்ள உரிமைகளின் வரையறைகள் என்பதாக இவர்கள் இதனை முன்னெடுக்க விழைவது இல்லை. இந்த முரண் புகலிடத்தில் தமக்கான எதிரிகளை தமது முன்னாள் புலி எதிர்ப்பு நேசசக்திகளுக்கிடையிலேயே கட்டமைப்பதாகவும் அல்லது தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றின் முகாந்தரத்தில் தமது இலங்கை அரசு ஆதரவு அரசியலை வைத்துச் செயல்படுவதற்கான யத்தனமாகவும் வெளிப்படுகிறது. 
இத்தகைய அரசியல் போக்குக் கொண்டவர்கள் தமது நிகழ்வுகளில் பேசப்படுபவற்றையோ அல்லது தமது அரசியல் நிலைபாடுகளையோ ஒருபோதும் ஆவணப்படுத்துவது இல்லை. எழுத்தில் வெளிப்படுவதெல்லாம் ஏச்சுக்களாக, வசவுகளாக, தூஷணங்களாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. இந்த நிலைமையில் அரசியல் உரையாடல் என்பது புகலிடத்தில் நிழல் யுத்தமாகவே நிகழ்ந்து வருகிறது.

அசை கோட்பாட்டிதழும் சமூகப் பாதுகாப்புக்கான செயற்பாட்டு மையமும் இணைந்த பாரிசில் நடத்திய கூட்டத்தில் ஈழப் பிரச்சினை குறித்த வரலாற்றுப் பார்வையை முன்வைத்துப் பேசிய பி.ஏ.காதர் அவர்கள் இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பாகவும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவும் தமது கருத்துக்களை முன்வைத்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் முன்வைத்த வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீக நிலம் எனும் வரையறை முக்கியமானது என்றார். அந்த நிலத்தை உறுதிப்படுத்துவது இன்று பிரதானமானது என்றார். விடுதலைப் போராட்ட அனுபவங்களை முற்றிலும் மறுத்த நிலை இன்றைய மேட்டுக்குடித் தமிழ்த் தலைமையினரின் தேர்தல் அரசியலில் இன்று முகம் காட்டுகிறது என்றார்.
சாதி எதிரப்புப் போராட்டம் நடத்தப்பட வேண்டியது எனக் குறிப்பிட்ட அவர், அந்த நிலைபாடு இலங்கை அரச அதிகாரத்துடன ஒத்தோடுவதாக இருக்க முடியாது என்றார். விடுதலைப் புலிகளின் தவறுகளை இலங்கை அரச ஒடுக்குமுறையை நியாயப்படுத்த உபயோகிக்க முடியாது என்றார். சாதியப் போராட்டத்தின் அவசியத்தையும் விடுதலைப் புலிகளின் தவறுகளையும் முன்வைத்துப் பேசியவர்கள் இலங்கை அரசு தொடர்பான மதிப்பீடுகள் எதனையும் முன்வைக்கவில்லை என்பதோடு, பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதியை எவ்வாறு யாப்புரீதியிலான சர்வாதிகாரி என வகைமைப்படுத்த முடியும் என்ற கேள்வியோடு தமது வாதத்தை முடித்துக் கொண்டார்கள். காதர் அவர்கள் இட்லர் தமது அதிகாரத்துக்கு பாராளுமன்ற முறையைப் பயன்படுத்தியதை அவர்களுக்கு நினைவூட்டினார்.
சாதியமும் விடுதலைப் புலிகளும் தொடர்பான விவாதம் இலண்டன் கூட்டத்திலும் வந்தது. எனது ஈழம் குறித்த நூலிலுள்ள கட்டுரை பிரச்சார வகையில் எழுதப்பட்டுள்ளது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அக்கட்டுரை எந்த நிலைபாடுகளுக்கு எதிராக எழுதப்பட்டது என்பதையோ அது தனது வாதங்களுக்கு முன்வைக்கும் ஆவண ஆதாரங்களையோ குறித்து எந்தவிதமான மறுப்பையும் அந்த விமர்சனம் முன்வைக்கவில்லை. விடுதலைப் புலிகள் சாதியவாதிகள் இல்லை, அவர்கள் சாதியை குற்றத்தண்டனைசச் சட்டத்தினுள் கொண்டு வந்தார்கள், தீண்டாமையைக் கிரிமினல் குற்றம் என வகைப்படுத்தினார்கள் என்பதை ஆவண ஆதாரங்களுடன் முன்வைத்தது குறிப்பிடப்பட்ட கட்டுரை.
பிரதான ஒடுக்குமுறைக்கு எதிராக மார்க்சியர்கள் வர்க்கத்தை முன்னிலைப்படுத்தி பிற பிரச்சினைகளை ‘மௌனிக்கச்‘ செய்தது போல, விடுதலைப் புலிகளும் தேசிய இனத்தை முன்னிறுத்தி பிற பிரச்சினைகளை ‘மௌனிக்கச்’ செய்தார்கள் எனப் பேசுகிறது அக்கட்டுரை. விடுதலைப் புலிகள் அமைப்பு சாதியத்தைக் காக்கும் அமைப்பு எனும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்விணையாகவே அக்கட்டுரை வரலாற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டது.
நூல் நெடுகிலும் இதைப் போல வரலாற்றையும் ஆதாரங்களையும் முன்னிறுத்தி புரட்சிகர ஸ்தாபனம், மக்களுக்கும் இயக்கங்களுக்குமான உறவு, முஸ்லீம் பிரச்சினை, மாற்றுக் கருத்துக்கள் தொடர்பான இயக்க அணுகுமுறை, உளவமைப்பின் தன்மை போன்றவற்றை முன்வைத்து விடுதலைப் புலிகளின் தவறுகள், மனித உரிமை மீறல்கள் என விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நூலின் ஆதார எழுதுமுறை வரலாற்றை முன்னிலைப்படுத்தியதேயொழிய குறிப்பிட்ட எவருக்கும் முழுமையான சார்பு அல்லது மறுப்பு நிலை கொண்டதல்ல; அது நூலினது நோக்கமாகவும் இருக்கவில்லை.
பாரிஸில் நடைபெற்ற வாசுதேவனது பிரஞ்சுப் புரட்சி நூல் பற்றிய விமர்சனக் கூட்டத்திலும் எனது நூல்கள் தொடர்பான இலண்டன் கூட்டத்திலும் ரொபேஷ்பியர், ஸ்டாலின், மாவோ, குவேரா போன்றவர்களை அடுத்து பிரபாகரனது பெயரை உச்சரிப்பதோ முன்வைத்துப் பேசுவதோ ஒரு பாவம் என்பது போன்ற பார்வை முன்வைக்கப்பட்டது. ஆதங்கம் அல்லது தன்னுணர்வு எனும் நிலைபாட்டிலிருந்தே இத்தகைய நோக்குகள் முன்வைக்கப்பட்டன. ஆதங்கம், தன்னுணர்வு என்பதற்கு அப்பால், வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில், புரட்சிகர ஸ்தாபனம், கொரில்லாப் போர்முறை, மாற்றுக் கருத்துக்கள், புரட்சியில் வன்முறை போன்ற மையமான போராட்டப் பிரச்சினைகளை முன்வைத்து இத்தகைய ஒப்பீடுகளை நிகழ்;த்த முடியும், நிகழ்த்த வேண்டும் என்பதே எனது பார்வை.
ரொபேஷ்பியர், மாவோ, குவேரா போன்றவர்களை ஒப்பிட ஸ்டாலினை ஒரு சிந்தனையாளர் எனச் சொல்ல முடியாது. இரண்டாம் உலகப் போர்காலத்தில்  ஸ்டாலினது மாபெரும் செயல்களோடு பிறரை ஒப்பீடு செய்து பேசமுடியாது. குவேராவின் முழு மானுட விடுதலை சார்ந்த தத்துவத் தோய்வுகளோடு சிந்தனைத் தளத்தில் பிரபாகரனை ஒப்பீடு செய்ய முடியாது. ஆனால், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளான டேவிட் அய்யா தனது எழுநா நேர்முகத்திலும், மாணவர் பேரவை முன்னோடியான சத்திய சீலன் தனது தீராநதி நேர்முகத்திலும் சொல்வது போல, முப்பதாண்டுகாலப் போராட்டத்தில் அவரது தவறுகளோடு பிரபாகரனது கடப்பாடு கொண்ட தலைமையை கவனம் கொண்டு, பிற புரட்சிகளின் ஆளுமைகளோடு அவரை ஒப்பீடு செய்ய வேண்டிய தேவை, அதாவது பிறரைப் போல அவரையும் ‘வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை’ இருக்கிறது. இதனை இனியொருவில் வெளியான ஐயரது கட்டுரைகள் ஏலவே செய்தும் இருக்கின்றன.

சாதியப் போராட்டம், பெண்ணுரிமை, விடுதலைப் புலிகளின் தவறுகள் குறித்த விமர்சனம் என்பதோடு மட்டும் இலங்கை எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் முற்றுப்பெற்றுவிட முடியாது. அந்த முழுத் தீவு தழுவியும் தனது அதிகாரத்தைக் கொண்டிருக்கிற சிங்கள பௌத்த நிறுவனம், அரசு, சிவில் சமூகம், அதனைக் காவி நிற்கும் இடதுசாரிகள் என்பது குறித்த மதிப்பீடுகள் இன்றி இத்தகைய போராட்டம் முழுமை பெறவும் முடியாது. இதனை இன்று முஸ்லீம் சமூகமும் நேரடியாக முகம் கொடுக்கிறது.
சிங்கள இடதுசாரிகள் குறித்த நம்பிக்கைகள் மனோரதியத்தின் அடிப்படையில் இருக்க முடியாது. இலங்கை ராணுவத்தின் செயல்பாடுகளை எந்த இடதுசாரியும் காத்து நிற்கமுடியாது. அப்படிக் காத்து நிற்பவர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருக்கவும் முடியாது. தயான் ஜயதிலக நடந்து முடிந்திருப்பது 'தேசிய விடுதலை யுத்தம்' என்கிறார். தேசிய விடுதலை யுத்தம் என்பது ஆக்கிரமிப்பரளர்களுக்கும் காலனியவாதிகளுக்கும் எதிரான யுத்தம். விடுதலைப் புலிகள் அரசியல் தவறு செய்தார்கள் என்பது வேறு அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் அல்லது காலனியவாதிகள் என்று மதிப்பிடுவது வேறு. தயான் ஜயதிலக நடந்து முடிந்த யுத்தத்தை அப்படித்தான் வர்ணிக்கிறார்.
வாசுதேவ நாணயக்காரவுக்கு வடகிழக்கைப் பிரித்தது பிரச்சினையில்லை. அது தமிழரின் பூர்வீக நிலம் இல்லை என்பது அவரது நிலைபாடு. வடமாகாணத்தில் காணி, காவல்துறை அதிகாரத்தோடு அவரது தீர்வு முடிந்துவிடுகிறது. இவரை அடிமனநிலை இனவாதி எனக் குறிப்பிடுவது எவ்வாறு தவறாகும்? குளோபல் தமிழ் நியூஸ் இணையதளம் இன்று சிங்களத்திலிருந்து மொழிபெயர்ப்புகளைச் செய்து வெளியிடுகிற நம்பகத்தன்மையுள்ள ஊடகம். நிகழ்வுகளை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடுகிற ஊடக அறம் கொண்ட இணையதளம். வசவுகளாலும் தூஷணப் பின்னூட்டங்களாலும் நிறைந்த தளம் இல்லை அது. பிற அநாமதேய தமிழ் தளங்களைக் கேள்விக்கு உட்படுத்துவது போல அதனை, அதனது ஆதாரங்களை எவரும் சாதாரணமாகக் கேள்விக்கு உட்படுத்த முடியாது.

இறுதியாக, குறிப்பிட்ட அரசியல்சார் அமைப்புக்களின் பார்வையை அரசியல் சாராத பொது அமைப்புகள் அல்லது கலை இலக்கிய அமைப்புக்களின் மீது சுமத்தும் ஒரு அவலமான போக்கு குறித்த அவதானங்களுடன் எனது குறிப்புக்களை நிறைவு செய்ய விழைகிறேன். இன்று புகலிட நாடுகளில் பல்வேறு இயக்க அமைப்புக்கள், பல்வேறு அரசியல், கருத்தியல் சார் அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. பொதுவான கலை இலக்கிய அமைப்புக்களை இவ்வாறான இயக்கச் சார்புள்ள, அரசியல் சார்புள்ள, கருத்தியல் சார்புள்ள அமைப்பாக இருக்க வேண்டும் என எவரும் வலியுறுத்த இயலாது; அது கூடாவும் கூடாது.
கலையும் இலக்கியமும் அரசியல், கருத்தியல் சார்புகள் கொண்டிருந்தாலும் அதற்கென சுயாதீனத்தன்மையும் உண்டு. இந்த சுயாதீனத் தன்மையை எவரும் அங்கீகரிப்பதோடு இத்தகைய கலை இலக்கிய அமைப்புகள் பல்வேறு அரசியல், கருத்தியல் உரையாடலுக்கான பொது அமைப்பாகவே பேணப்பட வேண்டும். அந்த நோக்கிலேயே எனது நூல் விமர்சன அரங்குக்கும் நான் பல்வேறு அரசியல், கருத்தியல் கொண்ட விமர்சகர்ளை விம்பம் அமைப்பாளரிடம் பரிந்துரை செய்தேன். கலை இலக்கிய அமைப்புக்கள் தத்தமது அரசியல் கருத்தியல் காவிகளாகத்தான் இருக்க வேண்டும் என நினைப்பதும், அது இயலாபோது அவைகளின் மீது வசைகளை ஏவுவதும் கருத்துச் சுதந்திரத்திற்கான ஆதாரமாக இருக்க முடியாது. அரசியல் மற்றும் கருத்தியல் சார்ந்து இயங்குபவர்கள் இதனை மனதில் இருத்திச் செயல்பட வேண்டியது இன்று முக்கியமானதாக இருக்கிறது.

jeudi 1 août 2013

ஈ.பிஆர்.எல்.எவ் திருமதி ஞானசக்தி ஈ.பி.டி.பி வட வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

eprlf.mrs.sugu gnanaaaவட மாகாணசபைத் தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உட்பட புளொட்இ தமிழர் விடுதலைக் கூட்டணிஇ ரெலோ ஆகிய கட்சிகள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்த போதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணியினரின் கடும் எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டது.

இதனையடுத்து பத்மநாபா ஈ.பிஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரனின் துணைவியாரான திருமதி ஞானசக்தி (ஞானா) சிறீதரன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) வட மாகாணசபைத் தேர்தல் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

இதன்மூலம் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஆரம்பகாலம் முதல் முக்கிய உறுப்பினராகவிருந்த திருமதி ஞானசக்தி (ஞானா) அவர்களை ஈ.பி.டி.பியின் பக்கம் தள்ளிவிடுவதில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி வெற்றி கண்டுள்ளது.

சுரேஷ் அணியின் விடாப்பிடியான போக்கே இந்நிலைமை ஏற்படக் காரணமாக இருந்தது என யாழ் குடாநாட்டு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லையென்பதே அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரை வடமாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்பதற்கான காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி தெரிவித்திருந்தது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவமில்லாத யாரையும் கூட்டமைப்பின் வேட்பாளராக இணைத்துக் கொள்ள முடியாது என்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி குறிப்பிட்டிருந்தது.

ஆனால் வட மாகாணசபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சீ.வீ. விக்கினேஸ்வரன் எந்தக் கட்சியையும் சாராதஇ அரசியல் சாராத தனிநபர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தலிபான் தாக்குதல்: 300 கைதிகள் விடுவிப்பு

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதி பாகிஸ்தானின் பழங்குடியினர் வாழும் தெற்கு வரிசிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்குள்ள சிறைச்சாலையில் 5000 கைதிகள் உள்ளனர். இவர்களுள் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள் ஆவர். நேற்று மாலை காவல்துறை சீருடையில் வந்த 150க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் சிறையின் மீது வெடிகுண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர். இவர்களுள் தற்கொலைப் படையினரும் கலந்திருந்தனர். இந்தத் தாக்குதலினால் சிறையின் வெளிப்புறச் சுவர் இடிந்து விழுந்தது. உள்ளே பணியில் இருந்த சிறைத்துறைக் காவலர்களுக்கும், போராளிகளுக்கும் நீண்ட நேரம் துப்பாக்கித் தாக்குதல் நடந்தது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத காவல்துறை, பாகிஸ்தானிய ராணுவத்தை உதவிக்கு அழைத்துள்ளது.
ஆயினும், தலிபான்கள் 300க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துள்ளனர் என்று சிறைத்துறையின் ஆலோசகர் மாலிக் காசிம் கட்டாக் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் ஏராளமான கைதிகளும், நான்கு சிறைக்காவலர்களும், இரண்டு போராளிகளும் இறந்துள்ளனர் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைக்கு மின்சாரம் அளிக்கும் இரண்டு டிரான்ஸ்பார்மர்களையும் போராளிகள் வெடி வைத்துத் தகர்த்ததால் இடமே இருளடைந்ததாக அதிகாரிகள் கூறினர். மேலும், அங்கிருந்த வாகனங்கள் அனைத்தையும் குண்டுகள் மூலம் தகர்த்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு டெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. கைதிகளை விடுவிக்க தாங்கள் தற்கொலைப் படையினர் உட்பட, 150 போராளிகளை அனுப்பியதாகவும், அவர்கள் வெற்றிகரமாக 300 கைதிகளை விடுவித்துள்ளதாகவும் தலிபான் அமைப்பின் புதிய தகவல் அதிகாரியான ஷாஹிதுல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார்.

தினசரி செல்போன் பேசினால் புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்

தினசரி செல்போன் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர். அதன்படி, அதிக நேரம் செல்போன் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களிடமும், செல்போன் பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.அவர்களில், அதிக நேரம் செல்போன் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது. செல்போன் பேசும் போது காதுகளின் அடியில் உள்ள சுரப்பிகள் மற்றம் திசுக்கள் பாதிக்கப்பட்டு மரபணு கோளாறினால் புற்று நோய் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை ஒரே இரவில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றினர்;நிராகரிக்க வேண்டும் tnaயை;இன நல்லு றவுக்கான ஒன்றியம்

எல்.ரீ.ரீ.யினரின் இன சுத்திகரிப்பிற்கு உறுதுணையாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டுமென வவுனியா மாவட்ட இன நல்லு றவுக்கான ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. வடமாகாண முஸ்லிம்களை ஒரே இரவில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றினர் எனவும், எல்.ரீ.ரீ. யினரின் இன சுத்திகரிப்பிற்கு த.தே.கூ உறுதுணையாக செயற்பட்டது என ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முஸ்லிம்கள் மீது திடீர் அக்கறை ஏற்ப்பட்டுள்ளது எனவும், இந்த அக்கறை தேர்தலை இலக்காக வைத்த கபட நாடகமென அவர் குறிப்பிட்டுள்ளார். எல்ரீரீஈ பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலும் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்யும் செயற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இவ்வாறான நிலையில் நல்லாட்சிக்கான அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது. அவர்களது தீர்மானம் முஸ்லிம் மக்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது. மன்னாரிலும் , முல்லைத்தீவிலும், வவுனியாவிலும் முஸ்லிம்களின் பூர்விக நிலங்களில் அவர்களை மீள குடியேறவிடாது தடுக்கும் செயற்ப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு திட்டமிட்டு செயற்படுகிறது. பல முஸ்லிம் கிராமங்கள் தற்போது தமிழ் பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றன.இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம். இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது முஸ்லிம்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியுமென வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றன;ஒபாமா

obama2அமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அமெரிக்காவின் சட்டனூகா நகரில் செவ்வாய்க்கிழமை மக்களிடையே ஆற்றிய உரை வருமாறு: நாம் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், முதலீடுகளையும் மேற்கொள்ளா விட்டால், இந்தியா, ஜெர்மனி, சீனா உள்பட உலக நாடுகளுக்கு நாம் வெள்ளைக் கொடியை காட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் அவை முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அந்த நாடுகள் பின்தங்கப் போவதில்லை.

இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருகின்றன. எனவே அமெரிக்காவும் சும்மா இருக்க முடியாது. நாம் எதையும் செய்யாமல் இருப்பது, மத்திய நடுத்தர வகுப்பினருக்கு உதவாது. நல்ல சம்பளத்துடன் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நாடு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம் எதிர்கால வளர்ச்சிக்கு வழி அமைக்க முடியும்.

அமெரிக்காவில் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் இருந்து பார்த்தால், இப்போதுதான் முதல் முறையாக உற்பத்தி சார்ந்த வேலைகள் குறையவில்லை. அவை அதிகரித்து வருகின்றன. வர்த்தகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு அரசு அமைப்புகளை இணைக்கக் கூடிய 45 உற்பத்தி மற்றும் புத்தாக்க நிறுவனங்களை நாடாளுமன்றம் சட்டமியற்றி உருவாக்க வேண்டும்.

அதேபோல், காற்றாலை, சூரியசக்தி, இயற்கை எரிவாயு உள்பட எரிசக்தித் துறையிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். புதுமையான எரிசக்தி ஆதாரங்கள், எரிசக்தி விலைகளைக் குறைப்பதோடு, அபாயகரமான கரி மாசு மற்றும் வெளிநாட்டு எண்ணெயை நாம் சார்ந்திருப்பது ஆகியவற்றையும் குறைக்கும். எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், இயற்கையான எரிபொருள்கள், மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்கள் ஆகியவற்றை இரட்டிப்பாக்கவும், எண்ணெய் இல்லாமல் வாகனங்களை இயங்கச் செய்வதற்கான ஆராய்ச்சிக்கு பணம் செலவழிக்கவும் வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாம் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும். அமெரிக்கப் பொருள்களை உலகெங்கும் அனுப்பவே நாம் விரும்புகிறோம். ஓராண்டுக்கு முன் கொரியாவுடன் நான் புதிய வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டேன். ஏனெனில், அவர்கள் ஏராளமான ஹுண்டாய் கார்களை இங்கு விற்பனை செய்கின்றனர்.

ஆனால், நாம் அவர்களது நாட்டில் நிறைய ஜி.எம். கார்களை விற்பதில்லை. அந்த உடன்பாட்டில் நாம் கையெழுத்திட்ட காரணத்தால் இனி நம் நாட்டின் 3 பெரிய வாகன உற்பத்தியாளர்களும் கொரியாவில் முன்பை விடக் கூடுதலாக 18 சதவீதம் அதிகமான கார்களை விற்க முடியும் என்றார் ஒபாமா.