dimanche 12 juillet 2015

மீண்டும் தேசியப்பட்டியல் மூலம் எம்.பி. பதவி கருணாவுக்கு

கருணாவை தேசியப் பட்டியல் மூலம் எம்.பியாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சம்மதிததுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும் இதற்கான சம்மதத்தை வழங்கினர் என கருணா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் கட்சியின் சார்பில் போட்டியிடுவுள்ளதாக கருணா குறிப்பிட்டுள்ளார்....                                                      நன்றி கருடன்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நான்கு வகையான திட்டம் நாசா

1239செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்திய  வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இடம் பெற்றுள்ளதாக நாசா  அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் லட்சியமான செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை  அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செயல்படுத்தி  வருகிறது. அவ்வகையில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நான்கு வகையான  திட்டத்தை கையில் எடுத்துள்ள நாசா 2030 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய்  கிரகத்தில் மனிதர்களை தரையிறக்க திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக 2017 –ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும்  ராக்கெட்டை நாசா உருவாக்கி வருகிறது. இந்த சாதனை பயணத்திற்காக சுனிதா  வில்லியம்ஸ், ராபர்ட், டக்லஸ் ஹர்லி ஆகியோரை தேர்வு செய்துள்ள நாசா  அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

அதிகாரத்தில் இருந்துகொண்டே ரனில் தேர்தல் வெடி

Ranilஇலங்கை தமிழர்களுக்கு, மறு சமரச நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அதிகார பகிர்வு அளிக்கப்படும்,'' என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வாக்குறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் கடந்த, 2009ல் நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டனர். அதன் பின், தமது பகுதிகளுக்கு அதிகாரபகிர்வு அளிக்கப்பட வேண்டுமென, தமிழர் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை பார்லிமென்டுக்கு வரும் ஆகஸ்ட் 17ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி, யு.என்.பி., எனப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் சிறப்புக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது:ஒருங்கிணைந்த இலங்கையில், தமிழர்களின் புனர் வாழ்வுக்கென மேற்கொள்ளப்பட்டு வரும், மறு சமரச நடைமுறைகளின் ஒரு பகுதியாக, மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும். உள்நாட்டு போரின்போது, ராணுவ தேவைக்காக கையகப்படுத்தப்பட்ட தமிழர் நிலங்கள், தேர்தலுக்கு பின் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே பேசினார்.
யு.என்.பி., சிறப்புக் கூட்டத்தில், 'சிறந்த நிர்வாகம், ஜனநாயகத்தை பேணுவதற்காக, பரந்த அரசியல் முன்னணியாக, யு.என்.பி., திகழ வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த சிறிசேன மைத்ரிபாலா, அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு பக்க பலமாக யு.என்.பி., செயல்பட்டது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவை, 'ஊழல் அரசியல்வாதி' என, சிறிசேனா முத்திரை குத்தி வந்தார். மாறாக, தற்போதைய பார்லிமென்ட் தேர்தலில் ராஜபக் ஷே போட்டியிட, இலங்கை அதிபர் சிறிசேன அனுமதி அளித்தது, யு.என்.பி., வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ராஜபக் ஷேவின் ஆதரவாளர்களுக்கும், தேர்தலில் போட்டியிட சிறிசேன, சீட்கள் வழங்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள யு.என்.பி.,யும் சிறிசேனவின் சிவில் சமூக ஆதரவாளர்களும், சிறிசேனா மோசம் செய்து விட்டதாக புலம்பி வருகின்றன. சிறிசேனாவின் ஆதரவாளர்கள் பலர், யு.என்.பி.,யில் சேரப்போவதாக தெரிவித்துள்ளனர்.

samedi 11 juillet 2015

வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்க மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே போட்டி

Résultat de recherche d'images pour "பிள்ளையான்"திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல கட்சிகள் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகள் துண்டாடப்படுவதை என்னைப்பொறுத்தவரையில் ஒரு தமிழனாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே போட்டியிடும் என தெரிவித்த அவர்,இணைந்து போட்டியிடுவதா,தனித்து போட்டியிடுவதாக என்பது தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் கிழக்கு மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் கட்சி.கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் வீதசாரம் மிகவும் குறைவாகவுள்ளது.ஆகக்கூடிய இரண்டு ஆசனங்களை இங்கு பெறமுடியும்.மட்டக்களப்பில்தான் தமிழர்கள் ஆககூடுதலாக நான்கு ஆசனங்களை பெறக்கூடியதாகவுள்ளது.அம்பாறையில் ஒரு ஆசனத்தினை மட்டுமே பெறமுடியும்.

ஆதனால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல கட்சிகள் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகள் துண்டாடப்படுவதை என்னைப்பொறுத்தவரையில் ஒரு தமிழனாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.அங்கு சிறந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தமிழர்களுக்கு சேவையாற்றக்கூடியவர்கள் பாராளுமன்றம் அனுப்பப்படவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் தேசிய வாதிகளின் பேச்சுகளுக்கு பின்னால் இழுபட்டுச்செல்லாமல் மக்களுக்கு ஆக்கபூர்வமான விடயங்களை செய்யக்கூடிய பாராளுமன்றம் செல்லும்போது அங்கு பார்வையாளராக இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய நிலையில் இருக்கவேண்டும் என்பது கொள்ளையாகவுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலமடைந்து அவர்களின் இனம் பலமடைந்துசெல்லும்போது நாங்கள் இன்னும் அதனை பார்த்துக்கொண்டிருக்கும் நிலைமையை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தக்கூடாது என்பது எமது நோக்கமாகும்.

அதற்கான நகர்வுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்துவருகின்றோம்.எமது கட்சியின் அடிமட்ட போராளிகள் தனித்துவமாக படகுச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அதேவேளையில் மகிந்த ராஜபக்ஸவும் ஜனாதிபதி மைத்திரிபால ஒன்றிணைந்துள்ள ஐக்கிய சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதிலும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இன்னும் சரியான முடிவுக்கு வரவில்லை.எதிர்வரும் 10ஆம் திகதி இது தொடர்பில் எமது கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என்றார்.

தன்மானத்தை காத்துக் கொள்வதற்காக கணவனை கவுரவக்கொலை செய்த இளம்பெண்

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடிக்கடி பிற சாதிக்காரர்களை காதலிப்பவர்களையோ, திருமணம் செய்தவர்களையோ அவர்களது குடும்பத்தினர் கொன்று விடுவது வாடிக்கையாகி விட்டது. குடும்பத்தின் கவுரவம் பறிபோகாமால் காப்பாற்றவே இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களை செய்ததாக அவர்கள் கூறுவதால் இவ்வகையிலான கொலை ‘கவுரவக்கொலை’  என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படுகின்றது.
தொடர்ந்து, எத்தனை காலத்துக்குதான், ஆண்களே பெண்களை கவுரவக்கொலை செய்வது? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக துருக்கி நாட்டை சேர்ந்த ஒரு பெண் இதற்கு மாறாக தனது கவுரவத்தையும், தன்மானத்தையும் காத்துக் கொள்வதற்காக கணவனையே சுட்டுக் கொன்றுள்ளார்.
சிலெம் காராபுலுட்(28) என்னும் அந்த பெண், அவரது கணவர் ஹாசன் காராபுலுட்(33) என்பவரை வீட்டிலிருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்காக போலீசார் கைது செய்தனர். ஒன்றரை வயது பெண் குழந்தையின் தாயான சிலெம், இதுபற்றிய தகவல் கொடுத்துவிட்டு தானே முன்வந்து போலீசாரிடம் சரணடைந்தார்.
அவர்களிடம் சிலெம் அளித்த வாக்குமூலத்தில், எப்போதும் ஏன் பெண்களே கொல்லப்பட வேண்டும்? நான் என்னுடைய கவுரவத்தைக் காத்துக்கொள்ளும் முயற்சியில் என் கணவரைக் கொலை செய்தேன்’ என துணிச்சலுடன் கூறியுள்ளார்.
அவர் என்னை தொடர்ந்து அடித்து, உதைத்து சித்ரவதை செய்துகொண்டு இருந்தார். இதுதவிர, போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் போவதாக மிரட்டி வந்தார். இந்த வழிகளில் சென்றால் எனது கவுரவம் பாழாகி விடும் என்று தீர்மானித்து அவரை சுட்டுக் கொன்றேன் எனவும் தனது வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல காலமாக, பெண்கள் அவர்களது கணவராலோ அல்லது உறவினராலோ கொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு மட்டும் 286 பெண்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து இதுவரை 160 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றுக்கு நேர்மாறாக கொடுமைக்கார கணவனை மனைவியே சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

mercredi 8 juillet 2015

தமிழின அழிப்பு! "தமிழ் தேசியவாதிகள்" இருட்டடிப்பு!; கலையகம்

ஈழப்போரின் இறுதியில் நடந்த தமிழின அழிப்பில், அமெரிக்கா, IMF, உலகவங்கி ஆகியவற்றின் பங்களிப்பை பலர் ஆராய்வதில்லை. தாம் மட்டுமே தமிழினத்தின் பாதுகாவலர்கள் என்பது போன்று வேஷம் போடும் போலித் தமிழ் தேசியவாதிகள், அப்படி ஒரு கருதுகோளை கனவிலும் நினைத்துப் பார்ப்பதில்லை. 
தமது அமெரிக்க அடிவருடித்தனத்தை மறைப்பதற்காக, தமிழ் மக்களுக்கு உண்மையை மறைக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் ஆய்வாளர்களும் இன்றைக்கும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எப்படியாவது புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, IMF ம், உலகவங்கியும் மகிந்த ராஜபக்சவின் சிங்களப் பேரினவாத அரசுக்கு பக்கபலமாக நின்று உதவின. அதற்கான ஆதாரம் தற்போது வெளியாகி உள்ளது.

உலக முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான IMF, உலகவங்கி ஆகியன, மிக நீண்ட காலமாகவே இலங்கைக்கு கடன் வழங்கி வந்துள்ளன. ஈழப்போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலங்களிலும், சிறிலங்கா படையினரால் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப் பட்ட போதிலும், IMF, உலகவங்கி கடன்கள் குறையாமல் வந்து கொண்டிருந்தன. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு அமைப்புகள், அந்தக் கடனை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தன. ஆனால், அவர்களது கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகியது.

IMF, உலகவங்கி மட்டுமல்ல, எந்தவொரு மேற்கத்திய நாடும், இலங்கை அரசுக்கு வழங்கிய கடனில் ஒரு ரூபாய் கூட குறைக்க முன்வரவில்லை. விதிவிலக்காக சில நாடுகள் நடந்து கொண்டாலும், அது வர்த்தக நோக்கில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவே அமைந்துள்ளது. அதாவது, இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை காரணமாகக் காட்டி, கடன் "உதவியை" நிறுத்தப் போவதாக பயமுறுத்தின. அதன் மூலம், அரசு நிறுவனங்களை தனியாரிடம் கொடுப்பதற்காக திரை மறைவில் பேரம் பேசப் பட்டது. அதைத் தவிர, எந்த நடவடிக்கையும் தமிழ் மக்கள் சார்பாக அமையவில்லை.

2009 ம் ஆண்டு, இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், இலங்கைக்கான IMF கடனை நிறுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அப்போது வன்னியில் நடந்து கொண்டிருந்த, ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை பலி கொண்ட போரின் கொடுமைகளை கண்டதால், ஹிலாரி அப்படி ஒரு யோசனையை முன்வைத்திருக்கலாம். அன்றைய அமெரிக்க நிதித்துறை துணை அமைச்சர் Timothy Franz Geithnerஉடனான உரையாடலில் அது தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஹிலாரியின் யோசனையை, IMF மிகக் கடுமையாக கண்டித்திருக்கும் என்பது, IMF வரலாறு தெரிந்தவர்களுக்கு வியப்புக்குரிய விடயம் அல்ல. உலக நாடுகளில் நடந்த, நடந்து கொண்டிருக்கும், பல உள்நாட்டுப் போர்களிலும், இனப்படுகொலைகளிலும் IMF நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ பங்களித்துள்ளது. ஹிலாரி கிளிண்டனின் மூத்த ஆலோசகர் Burns Strider அனுப்பிய மின்னஞ்சல் அதைத் தான் நிரூபிக்கின்றது. அண்மையில் அமெரிக்க அரசினால் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்களில் அது கண்டுபிடிக்கப் பட்டது.

ஹிலாரி கிளிண்டனுக்கான மின்னஞ்சலில், அவரது ஆலோசகர் Burns Strider பின்வருமாறு எழுதியுள்ளார்: "புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப் பட வேண்டும் என்றே IMF, உலகவங்கியில் உள்ளவர்கள் நம்புகிறார்கள். அதற்கான நடவடிக்கையில், மகிந்த ராஜபக்ச அரசினால் ஏற்படுத்தப்படும் மனித அழிவுகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை தான்!"

இதற்குப் பிறகும், "அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும், தமிழ் மக்களுக்கு ஐ.நா.வில் தமிழீழம் வாங்கித் தரப் போகின்றன..." என்று சொல்லிக் கொண்டு திரியும் அமெரிக்க விசுவாசிகள், உண்மையில் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்கள், தம்மை "தமிழ் இன உணர்வாளர்கள்" என்று கூறிக் கொண்டாலும், அவர்கள் உண்மையில் "டாலர் பண உணர்வாளர்கள்".

அதனால் தான், அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்கள் அவர்களை "போலித் தமிழ் தேசியவாதிகள்" என்று அழைக்கிறார்கள். ஒரு பக்கம் தமிழ் தேசியம் பேசிக் கொண்டே, மறுபக்கம் தமிழினப் படுகொலையில் பங்களித்த அமெரிக்காவையும், IMF யும் ஆதரிப்பவர்களை வேறெப்படி அழைக்க முடியும்?

ஹிலாரி கிளிண்டனுக்கு Burns Strider அனுப்பிய மின்னஞ்சல் இது:

From: Bums Strider
To: H
Sent: Mon May 04 09:36:17 2009
Subject: Some intel for you...

This is about Sri Lankan Govt and the Tigers... I have a good source. This was shared to me at my and Karen's Derby Party yesterday (can you believe the 50 to 1 odds winner?).

There was a meeting held with Geitner asked for and led by IMF... They told him you were intruding into his domain by ordering/telling IMF to suspend funding to Sri Lakan Govt.

UNCLASSIFIED
U.S. Department of State Case No. F-2014-20439
Doc No. C05761169
Date: 06/30/2015

My take is that the people on the ground both with World Bank and IMF believe the Tigers need to be completely defeated and any collateral damage inflicted on private people by SL govt in process is ok... They also believe Tigers are better at propaganda than SL govt...

I have no idea what reality is... I know all about the conflict because there's been so much written over time but no idea of reality on ground.

My point is that IMF/World Bank is hoping to get Geitner to intervene and they recently played to his sense of who is US point person on IMF... So, that's what I know. I'll keep my ears open.

dimanche 5 juillet 2015

கஞ்சிக்கு வழியின்றித் தவிக்கும் முன்னாள் போராளி! (காணொளி இணைப்பு)

முன்னாள் போராளிகளை இணைத்துக் கொண்டு இது வரைக்கும் சல்லிக்காசு கூட உதவி செய்யாத அரசியலில்  களமிறங்கும் சந்தர்ப்பவாத கோடிஸ்வரர்களையும்  அரசியள் வாதிகளையும்  இனம் கானுவோம் .

samedi 4 juillet 2015

சப்ரா"என்ற நிதி நிறுவனத்தை புலிகளின் நிதியில் நிறுவி 80 களில் பல கோடிகளை சுருட்டிய வித்தியாதரன் மீண்டும்

உதயன் - சுடர் ஒளி நாளிதழ்களின் ஆசிரியர் ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, எனினும் அவர் அந்த தகுதியை தக்கவைத்து கொள்ளாமல் இன்று அரசியலில் இறங்கியிருப்பது ஜீரணிக்க
முடியாத ஒரு விடயமாகவே உள்ளது.

உதயன் பத்திரிகையின் முதலாளி ஈ. சரவணபவன் யாழ்பாணத்தில் சப்ரா" என்ற நிதி நிறுவனத்தை நிறுவி 80 களில் பல கோடிகளை சுருட்டிக்கொண்டு நாட்டை ஓடி லண்டனில் இருந்துவிட்டு திரும்பி வந்து உதயன் பத்திரிகையை ஆரம்பித்து அதில் மறண அறிவித்தல்கள் மட்டும் பல கோடிகளை ஈட்டியவர்.

சரவணபவன் உதயனில் புலிகள் சார்பான செய்திகளை போட்டு அவர் செய்த நிதி மோசடியில் இருந்து புலிகளின் ஆதரவை பெற்றவர்.    

அவரின் மனைவியின் தம்பியான வித்தியாதரனை ஆசிரியராக நியமித்து அதில் வெற்றியும் கண்டவர், பின்னர் தனது பத்திரிகை பலத்தை வைத்து கூட்டமைப்பில் மந்திரியானவர்.

வித்தியாதரன் புலிகளை என்றும் ஆதரித்து செய்திகளை எழுதியதால் அவர் பிரபாகரனின் அன்புக்கு பாத்திரமானவரானார், ஒருமுறை அவரை அழைத்து விருந்தும் அளித்து கௌரவம் செய்தார், இது பழைய கதை.

இந்த பின்னணியோடு அன்டன் பாலசிங்கத்தோடு நெருங்கிய உறவை வித்தியாதரன் பேணியிருந்தார், இந்த பின்னணியை வைத்து கடந்த வடக்கு மாகாணசபை தேர்தலில் முதலமைச்சராக போட்டியிட மாவை சேனாதிராஜாவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோதும் அதை சம்பந்தன் தடுத்தார்.

இந்த பின்னணியில் வித்தியாதரனுக்கு உதித்த சிந்தனைதான் முன்னாள் போராளிகளை இணைத்துக் கொண்டு அரசியலில் களமிறங்குவது, அதை கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்த்தியும் காட்டியுள்ளார்.

இன்று ஜனநாயக போராளிகள் கட்சி என்ற ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் போரில் விழுப்புண் கண்டு வாழ்க்கையில் வறுமையில் வாடும் போராளிகளை பலி பீடத்துக்கு மீண்டும் கொண்டு செல்வதுதான் அவரின் நோக்கமா?      நீங்கள் மேல் பார்த்த படங்கள் .பிரபாவுடன் வித்தியாதரன்.பாலசிங்கத்துடன் வித்தியாதரனின் குடும்பம்...இலங்கை அமைச்சர் ராஜிதவுடன் வித்தியாதரன்.. 

jeudi 2 juillet 2015

புலிகள் தளபதிகளில் ஒருவர் பேட்டி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதன் பின்னணி குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டன் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் கசிந்து உள்ள தகவல்கள் பேரதிர்ச்சி தருபவையாக உள்ளன. புலிகள் இயக்கத்தில் முன்னிலைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய குமணன் என்பவர் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கி இருக்கக் கூடிய பேட்டி ஒன்றின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் ஆச்சரியத்தைக் கொடுக்கின்ற போதிலும் நம்பிக்கைக்கு உகந்தனவாக உள்ளன என்று இந்த ஆவணத்தில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

இரா. சம்பந்தன் முதலான அரசியல்வாதிகள் மீது புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒருபோதும் சிறிய நம்பிக்கைதானும் வைத்திருக்கவில்லை என்றும் குழப்பவாதிகளும், சுய நலவாதிகளுமான இவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற நோக்கத்திலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆரம்பித்தார் என்றும் முன்னாள் போராளி குமணன் தெரிவித்தார் என்று இதில் உள்ளது.

தமிழ் அரசியல்வாதிகளில் பலர் திருத்த முடியாத ஜென்மங்கள் என்று கண்டு கொண்ட தலைவர்கள் இவர்களுக்கான தண்டனையாகவே எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் போய் தமிழ் தேசியம் பேசித் திரியுங்கள் என்று உத்தரவிட்டார், ஆனால் இந்த அரசியல்வாதிகள் புலிகளின் புலனாய்வுத் துறையால் மிக நெருக்கமாக எப்போதும் கண்காணிக்கப்பட்டு வந்திருக்கின்றமையுடன் புலிகளின் பிஸ்டல் குழுவால் எந்நேரமும் மரண தண்டனை பெறக் கூடியவர்கள் பட்டியலில் முன்னிலை வகித்தும் காணப்பட்டனர், இது இந்த அரசியல்வாதிகளுக்கும் மிக நன்றாகவே தெரிந்து இருந்தது, ஆனால் இவர்கள் தமிழ் தேசியம் பேசுகின்றமை மூலம் புலிகளின் மரண தண்டனையில் இருந்து பாவ விமோசனம் கிடைக்கும் என்று விசுவாசித்தார்கள் என்றும் குமணனை மேற்கோள் காட்டி இதில் உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய புலிகளின் தலைவரே இதன் பதவி நிலை முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் ஆகியோரை பெயரிட்டு நியமித்து வந்திருக்கின்றார், இவர்கள் அடிக்கடி வன்னிக்கு வரவழைக்கப்பட்டு புலிகளின் தலைவரால் அறிவுறுத்தப்பட்டனர், அப்போதெல்லாம் இவர்கள் கை கொட்டி, வாய் பொத்தி தலைவரின் அறிவுறுத்தல்கள், உத்தரவுகள் போன்றவற்றை செவிமடுப்பார்கள் என்றும் குமணனால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களின் நடத்தை குறித்து தலைவருக்கு புலனாய்வுத் துறை அறிவித்துக் கொண்டே இருக்கும், இதற்கமைய இவர்கள் புலித் தலைமையால் தண்டிக்கப்பட்டும், கண்டிக்கப்பட்டும், எச்சரிக்கப்பட்டும் வந்திருக்கின்றனர், ஆனால் மாவை சேனாதிராசா விடயத்தில் மாத்திரம் விட்டுக் கொடுப்போடு பல சந்தர்ப்பங்களில் தலைமை நடந்து கொண்டது, ஏனென்றால் இவரை வைத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வண்டவாளங்களை அறிந்து வந்திருக்கின்றார்கள், இவரும் மிகுந்த உற்சாகத்துடன் போட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டு வந்திருக்கின்றார் என்றும் குமணன் கூறி இருக்கின்றார்.
இக்காரணங்களால் புலிகளின் அழிவுக்காக இவர்கள் காத்திருந்தனர், புலிகள் இயக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடக்கப்பட்டபோது உள்ளூர மகிழ்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் என்று தெரிவித்து உள்ள குமணன் புலிகள் இயக்க தலைமையை அழிவில் இருந்து காப்பாற்ற கிடைத்த சந்தர்ப்பங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டும் என்றே தவற விட்டது என்று கோடி காட்டு உள்ளார்.

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதை வரவேற்று, பாராட்டி சம்பந்தன் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார், புலிகள்அழிக்கப்பட்ட பிற்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கில் வெளிப்படையான மாற்றம் ஏற்பட்டது, புலிகளால் விரோதிகளாக, துரோகிகளாக, வேண்டத் தகாதவர்களாக, தீண்டத் தகாதவர்களாக பார்க்கப்பட்ட தென்னிலங்கை பிரமுகர்களோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறவு கொண்டாடி வருகின்றது, ஸ்ரீலங்காவின் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டது, சலுகைகளுக்காக ஸ்ரீலங்கா அமைச்சர்களின் வீடுகளில் கால் கடுக்க நிற்கின்றது என்று சொல்லி குமணன் பொருமி இருக்கின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு வந்தால் தமிழினம் இன்னும் பேரவலங்களை சந்திக்க நேரும் என்றும் குமணன் தெரிவித்து இருக்கின்றார்.

80.காலப்பகுதியில் எமது ஆதரவாளர்கள் டயர்களில் எரிக்கப்பட்டார்கள். சிறை சென்றார்கள்.94 இல் நான் மனிதத்தன்மையை கொண்டுவந்தேன்; சந்திரிகா

chandrika-kumaratunga3எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் நாட்டின் நன்மைக்காக எந்த மோதலையும் நாம் எதிர்கொள்வோமென சூளுரைத்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நீதிமுறைமை சரியாக செயற்பட்டால் பிரதமர் பதவிக்கு வலியுறுத்தல் விடுக்கும் சில ஆட்கள் இப்போது சிறையிலிடப்படவேண்டியவர்கள் என்று கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரியங்கள் கடந்த 10 வருடங்களாக தவறான வழியில் சென்றதை ஏனைய கட்சிகளுடனும் அமைப்புக்களுடனும் இணைந்து சரியான வழிக்குக்கொண்டு வந்து யுகமாற்றத்தை ஏற்படுத்தினோம்.அட்டைகள் போல் மக்களின் இரத்தங்களைக் குடித்துக்கொண்டிருந்த தலைவர்களை மக்கள் கிளர்ந்தெழுந்து வீட்டுக்கனுப்பி பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பாகும் என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.முன்னாள் மாநகர சபை உறுப்பினர் லலித்டென்சில் பெர்னாண்டோவினால் ஏற்பாடு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பிறந்த தின வைபவம் நீர்கொழும்பு மாநகர மண்டபத்தில் இடம்பெற்றது.இங்கு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு ஆசிர்வதித்து டொக்பொஸ்கோ நிறுவன பணிப்பாளர் பிதா பின்டோ ஆசிர்வாதம் செய்தார். 70 வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே மாகாண சபை உறுப்பினர் லலித் வணிகரத்ன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிமல் குறேரா உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தொடர்ந்து உரையாற்றுகையில்;நான் 13 வருடங்கள் ஸ்ரீ.ல.சு.க. தலைமையில் இருந்துள்ளேன். எனது தாயாரின் காலத்தில் உத்தியோகப்பற்றற்ற முறையிலும் பின்னர் உத்தியோகபூர்வமாகவும் தலைமை வகித்தேன். இக் கட்சியில் 5 பேர் தலைமைத்துவத்தில் இருந்துள்ளனர்.
மைத்திரி உட்பட 4 பேர் கட்சியின் தலைமைத்துவத்தை முன்மாதிரியாக நடத்திக்காட்டினார்கள். கட்சி அல்லது அமைப்புக்கள், நிறுவனங்களின் தலைமைத்துவத்தை ஏற்பவர்கள் அந்த நிறுவனத்தை நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்லவேண்டும். முன்னைய தலைவர்கள் பிரதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் தமது பணத்தை செலவழித்து பிச்சைக்காரர்களாக மாறினார்கள்.நாட்டின் வளங்களை களவாடும், சூறையாடுவோர் தலைமைத்துவத்தை ஏற்கமுடியாது. ஸ்ரீ.ல.சு.க. பொதுமக்களின் கட்சி. பொதுமக்களுக்காக சேவை செய்த கட்சி 1956 பின் ஸ்ரீ.ல.சு.க.  ஜனநாயக கட்சியாக மக்களின் சுதந்திரத்தை, மனித உரிமைகளை நிலைநாட்டிய கட்சி. அண்மைக்காலத்தை தவிர எமது கட்சி கட்சி நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வழிநடத்தப்பட்டுள்ளன.
மது எதிரிகள் எம்மை பல வருடங்களாக அடித்து துன்புறுத்தினார்கள். 80 காலப்பகுதியில் எமது ஆதரவாளர்கள் டயர்களில் எரிக்கப்பட்டார்கள். சிறை சென்றார்கள். 94 இல் நான் மனிதத்தன்மையை கொண்டுவந்தேன்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரியங்கள் கடந்த 10 வருடங்களாக தவறான வழியில் சென்றதை ஏனைய கட்சி மற்றும் அமைப்புகளுடன் இணைந்து சரியான வழிக்குக் கொண்டுவந்து யுகமாற்றத்தை ஏற்படுத்தினோம்.சட்டம் சரியாக அமுல்படுத்தப்படாததினாலும் நீதிமன்றங்கள் உரிய முறையில் இயங்காததினாலும் தவறு செய்த தலைவர்கள் சிறையில் இருக்காமல் அமைச்சுப் பதவிகளை கேட்கிறார்கள். தலைமைத்துவத்தை கேட்கிறார்கள். இவர்களை மீண்டும் தலைமைத்துவத்திற்கு வர இடமளிக்கக்கூடாது.தவறு செய்தவர்கள் எந்தத் தரத்தில் இருந்தாலும் வீட்டுக்கு செல்லவேண்டும்.நாட்டில் வாயை மூடி அமைதியாக இருக்கவேண்டும். சட்டத்தை மாற்றி மூன்றாவது முறையும் என்னை வரச்சொல்லியும் நான் முடியாது எனக் கூறினேன். வீட்டிற்குச் சென்று அவர்களின் இன்னல்களுக்கு உள்ளாகியிருந்தேன்.அரசின் தலைவராக இருந்துகொண்டு அட்டைகள் போல் மக்களின் இரத்தத்தை குடித்துக்கொண்டிருந்தவர்களை மக்கள் கிளர்ந்தெழுந்து வாக்களித்து வீட்டிற்கு அனுப்பினார்கள். இதன் மூலம் பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பதும் மக்களின் பொறுப்பாகும். வெள்ளை வான் கலாசாரத்தை நிறுத்தியுள்ளோம்.ஆட்கடத்தல் இடம்பெறுவதில்லை. தற்போது அவர்கள் முதலில் வெட்டித்தின்னுவது என்னைத்தான். அதற்கு நான் அஞ்சவில்லை. இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். நான் இருமுறை மாற்றத்தை செய்தேன்.பிரேமதாஸ யுகத்தையும் மாற்றினோம்.நாம் இப்போது முக்கிய சந்தியில் இருக்கிறோம். கட்சி, இன, மத, பேதமின்றி ஒன்றுபட வேண்டும். இது காலத்தின் தேவையாகும். எந்த அரச நிறுவனத்திலும் எனது பெயர் பலகையையோ, கட்டவுட்களையோ போட நான் இடமளிக்கவில்லை.1998 இல் கல்வி அபிவிருத்தியை ஆரம்பித்து உலகின் சிறந்த கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினேன்.ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்தேன். தற்போது கல்வித்திட்டம் சரிந்து விழுந்துள்ளது.சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக சிறுவர் பாதுகாப்புப் பிரிவை ஆரம்பித்து ஐ.நா. சபையின் பாராட்டைப் பெற்றேன். தற்போது சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துக் காணப்படுகின்றது.ஆசிரியர்கள் தற்போது வகுப்பறையில் கற்பிப்பதில்லை. ரியூசன் வகுப்புகளுக்கு வரச் சொல்கிறார்கள் .நான் நவீன முறையில் கல்வி போதிப்பதற்காக 88 பயிற்சி நிலையங்களை ஆரம்பித்தேன். பிரதேச செயலக மட்டத்தில் 350 நவோதய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.சிறந்த அதிபர்களை நியமித்தேன். தற்போது அதிபர்கள், அமைச்சர்களை சந்தித்து நகர்புறங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றனர்.நான் தற்போது முதுமையை அடைந்துகொண்டு செல்கிறேன். இளைஞர்களுக்கும் பொறுப்புக்களை ஒப்படைப்போம் எனக் கூறினார். பிரதியமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயும் இங்கு உரையாற்றினார்.

கிராபிக்ஸ் ஷங்கரின் எந்திரன்- 2

ஷங்கரின் அடுத்த படம் தொடங்கியது- ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கபடுபவர் ஷங்கர். இவர் ஐ படத்திற்கு பிறகு அடுத்து எப்போது படம் இயக்குவார் என அனைவரும் காத்திருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. இதில், ஷங்கர் அடுத்து எந்திரன்- 2 படத்தை தான் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, இசை ஏ.ஆர். ரகுமான், ஹீரோ சொல்லவா வேண்டும் சூப்பர் ஸ்டார் தான். இப்படம் 2016ல் தொடங்கப்படவுள்ளது, இருந்தாலும் கிராபிக்ஸ் வேலைகள் தற்போதே ஆரம்பித்து விட்டதாம்.

காகம், கழுகின் மீது சவாரி அதைவிட ஆச்சர்யம் கழுகிடம் எந்த மாற்றமும் இல்லாததுதான்;சான்

வானத்தில் இடி இடித்தால் மற்ற பறவைகள் இடிக்கு அஞ்சி நடுங்கும் போது, அந்த இடியை விட அதிக உயரத்தில் பறக்கும் கழுகின் மீது புத்திசாலி காகம் ஒன்று லிப்டு கேட்டு(?) சவாரி செய்த புகைப்படம், சமூக ஊடகங்களில் தற்போது தீயாகப் பரவி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான பூ சான் (50) சமீபத்தில் வாஷிங்டன் கடற்கரையில் வானத்தை மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது வானில் வட்டமடித்து வந்த பெரிய கழுகின் மீது சிறிய காகம் ஒன்று சவாரி செய்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்த சான், அதை அப்படியே தனது ஒளிப்படக்கருவியில் தத்ரூபமாகப் புகைப்படம் எடுத்து, இணைய தளங்களில் அதனை வெளியிட்டார். இந்தப் புகைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் புகைப்படம் குறித்துச் சான் கூறுகையில், “ஒரு இரை தேடிக்கொண்டிருக்கும் கழுகைப் படம் பிடிக்க கேமராவின் கண்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, நான் பார்த்துக் கொண்டிருந்த கழுகின் அருகே காகம் ஒன்று பின்புறம் பறந்து வந்தது. முதலில் நான் அது, கழுகிற்குப் பயந்து முந்திக் கொண்டு பறந்து விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்க்காத தருணத்தில் அந்தக் காகம் தரையில் இறங்குவது போல கழுகின் முதுகுப்பகுதியில் போய் இறங்கியது. ஒரு சில வினாடிகள் அந்தக் காகம், கழுகின் மீது இலவச சவாரி செய்தது. எதிர்பாராமல் நடந்த இந்த காகத்தின் செயல் எனக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், அதைவிட ஆச்சர்யம் கழுகிடம் எந்த மாற்றமும் இல்லாததுதான்.” என்று கூறி சிரிக்கிறார் சான்.

இரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார் திமுகஸ்டாலின்


தமிழக சட்டமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை ஸ்டாலின் இனியாவது காப்பாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், வெற்று விளம்பரத்திற்காகவும் 1.7.2015 அன்று சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்த ஸ்டாலின், அந்த இரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த செய்தியும், காட்சியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். இது போன்று அநாகரிகமாக நடந்துகொள்வது சட்டமன்ற உறுப்பினருக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது இடங்களில் எல்லோருக்கும் சம அளவு உரிமை உள்ளது என்பதையும், யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்பதையும் உணர்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை ஸ்டாலின் இனியாவது காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் உரிய அக்கறை செலுத்தாமல், நான்காண்டுகளில் 3 சதவீதப் பணிகளே முடித்த முந்தைய திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், அப்போதைய துணை முதலமைச்சர் ஸ்டாலினும், தற்போது முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து பயணிகள் சேவை துவக்கப்பட்டுள்ள இந்த புகழுக்கு, எந்த விதத்திலும் சொந்தம் கொண்டாட முடியாது, அரசியல் ஆதாயமும் தேட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

mardi 23 juin 2015

உயிரினங்கள் பெரிய அளவில் அழியும் புதிய ஆய்வு ஒன்று

உயிரினங்கள் பெரிய அளவில் அழியும் ஒரு கால கட்டம் பூமியில் உருவாகி வருவதாகவும், இந்த கால கட்டத்தில் மனித இனமும் அழியும் வாய்ப்பு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விலங்கினங்கள் அதிர்ச்சியளிக்கும் அதிக வேகத்தில் அழிந்துவருவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. மனிதத் தலையீடு இல்லாமல் சாதாரணமாக விலங் கினங்கள் அழியும் வேகத்தோடு ஒப்பிடுகையில், தற் போது நூறு மடங்கு அதிக வேகத்தில் உயிரினங்கள் அழிந்துவருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விலங்கினங்களுடைய வாழ்விடங்கள் மாறிப்போவதும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும், காலநிலை மாற்றமும் இந்த அழிவிற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இத்தனை உயிரினங்கள் அழியக் காரணமாக இருப்ப தால், தனக்கு வாழ்வாதாரமாக விளங்கிவரும் கட்டமைப் பையும் மனித இனம் தானாகவே அழித்துக்கொள்கிறது என இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவர் கூறுகிறார். ஆறரை கோடி வருடங்களுக்கு முன்னால், பெரும் விண்கல் பூமியில் விழுந்து டைனோசர்கள் உட்பட ஏராளமான உயிரினங்கள் அழிந்த காலகட்டத்துக்குப் பிற்பாடு, மிக அதிக வேகத்தில் உயிரினங்கள் அழிவது தற்போதுதான் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுற்றுலா பயணிகளை கவரும் சுமார் நாற்பதாயிரம் மக்கட்தொகை கொண்ட மொசுவா இனத்தவர்கள்;கலையகம்

புராதன காலத்தில் பெண்களால் தலைமை தாங்கப் பட்ட தாய் வழிச் சமுதாயம் இருந்ததாக கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அந்த சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை சீனாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் நேரில் காணலாம். தென் மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் பெருமளவு சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகும்.

சுவிட்சர்லாந்து போன்ற அழகான இடங்களைக் கொண்ட லிஜியான் நகரத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் மொசுவோ மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. சீனாவின் அங்கீகரிக்கப் பட்ட தேசிய இனங்களில் அதுவும் ஒன்று.

சுமார் நாற்பதாயிரம் மக்கட்தொகை கொண்ட மொசுவா இனத்தவர்கள், தீபெத்தோ- பர்மிய இனக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். திபெத்திய, பர்மிய மொழிகளுக்கு இடைப்பட்ட தனித்துவமான மொழியைப் பேசுகின்றனர். இன்றைய நவீன காலத்திலும் பாலின சமத்துவம் நிலவுவது அந்த இனத்தின் சிறப்பம்சம் ஆகும். அந்தச் சமுதாயத்தில் பெண்கள் தான் தலைமை வகிக்கின்றனர். வயலில் இறங்கி கடின வேலைகளை செய்வதும் பெண்கள் தான்! ஆண்கள் எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றிப் பொழுதுபோக்குவார்கள்.

மொசுவோ மக்கள் இன்றைக்கும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டிற்குள் வாழ்கின்றனர். வயது வந்த பெண்களுக்கு மட்டும் தனியான அறை ஒதுக்கப் பட்டிருக்கும். ஒரு பருவமடைந்த பெண், தனக்கான ஆண் துணையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவர் விரும்பும் ஆண், அன்றைய இரவு அவருடன் தங்கலாம். விடிந்தவுடன் அந்த உறவு முடிந்து விடுகின்றது. மொசுவா மக்கள் இதனை "நடக்கும் திருமணங்கள்" என்று அழைக்கின்றனர்.

அந்த மக்களின் வாழ்க்கை முறையை வெளியில் உள்ளோர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மொசுவா பெண்களின் பாலியல் சுதந்திரம் என்பது, தினசரி ஓர் ஆடவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதல்ல. ஓர் உறவானது, ஒரு நாள் மட்டுமல்லாது வருடக் கணக்காகவும் நீடிக்கலாம். அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம். எந்தக் கட்டுப்பாடும் இன்றி, தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கவும், மாற்றிக் கொள்ளவும் அந்தப் பெண்ணுக்கு உரிமை உண்டு.

ஒரு குழந்தை பிறந்தவுடன், அந்தப் பெண்ணுடன் உறவு கொண்ட எந்த ஆணும், தானே தந்தை என்று சொந்தம் கொண்டாடுவதில்லை. அந்தக் குழந்தையை பெற்று வளர்ப்பது, முழுக்க முழுக்க பெண் வீட்டார் பொறுப்பு. இவர் தான் தந்தை என்று யாராவது இனம் காணப் பட்டாலும், குழந்தைக்கு பரிசுப் பொருட்களை கொடுப்பதுடன் அவரது கடமை முடிந்து விடுகிறது. தொடர்ந்து, தாயான பெண்ணின் சகோதரர்கள் தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்தக் குழந்தையை வளர்ப்பார்கள். மொசுவா மொழியில் "அப்பா என்ற ஒரு சொல்" கூடக் கிடையாது!

வேலைக்குப் போவதும், குழந்தை பெற்று வளர்ப்பதும் பெண்களாக இருந்தாலும், அது ஒரு பெண்ணாதிக்க சமுதாயமாக இருக்கவில்லை. மாறாக எல்லாக் கட்டத்திலும் பால் சமத்துவம் பேணப் படுகின்றது. சிலநேரம், ஒரு குடும்பத்தில் பெண்களின் எண்ணிக்கை கூடி விட்டால், ஆண்கள் அதிகமாக உள்ள இன்னொரு குடும்பத்துடன் குடும்ப உறுப்பினர்களை பரிமாறிக் கொள்வார்கள்.

மொசுவா சமுதாயத்தில் பாலியல் சுதந்திரம் சர்வ சாதாரணமான விடயம் என்பதால், அங்கு யாரும் புறம் பேசுவதில்லை. ஒருவரது "கள்ள உறவு" பற்றிய கிசு கிசு கதைகளை யாரும் பேசுவதில்லை. அது மட்டுமல்ல, யாரும் யார் மீதும் பொறாமை கொள்வதில்லை. 

அந்தச் சமுதாயமானது, புராதன கால பொதுவுடைமைச் சமூக- பொருளாதார உற்பத்திகளை இன்று வரைக்கும் தொடர்ந்தும் பேணி வருகின்றது.  "இது எனது உடைமை... எனது சொத்து..." என்று யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. அதனால், சண்டை, சச்சரவு, திருட்டு, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை போன்ற எந்த விதமான சமூகவிரோத செயல்களும் அங்கு இல்லை. 

சீனா முழுவதும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றியதும், மொசுவா மக்களை தனியான தேசியமாக அங்கீகரித்தனர். கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் மாத்திரம், நடக்கும் திருமண முறையை கைவிட்டு விட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டனர். உண்மையில் அன்றிருந்து பலர் நீடித்த திருமண உறவுகளை பின்பற்றத் தொடங்கினார்கள். கலாச்சாரப் புரட்சி முடிந்த பின்னர், மரபு வழித் திருமணங்கள் மீண்டும் அதிகரித்தன.

தொண்ணூறுகளுக்குப் பிறகு ஒட்டு மொத்த சீனாவின் பொருளாதாரம் மாற்றமடைந்தது. சீன ஆட்சியாளர்கள் முதலாளித்துவத்தை ஊக்குவித்தார்கள். அது மொசுவா மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கியது. பொதுவாக, அழகான மலைப் பிரதேசங்களை கொண்ட யுன்னான் மாகாணத்திற்கு, சீன உல்லாசப் பிரயாணிகள் படையெடுத்தார்கள். சுற்றுலா துறை நிறுவனங்கள், மொசுவா பிரதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.

"மகளிர் தேசம்" என்ற விளம்பரத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் கவர்ந்திழுக்கப் பட்டனர். பாரம்பரியமாக தந்தை வழி சமுதாயத்தில் வந்த சீனர்களுக்கு, "பெண்களின் தேசம்" பற்றிய தகவல்கள் புதுமையாகத் தோன்றின. பலர் அங்கே சுதந்திரமான பாலியல் தொழில் நடப்பதாக தவறாகப் புரிந்து கொண்டனர். சுற்றுலா நிறுவனங்களும், "நடக்கும் திருமணத்தில் ஒரு நாள் மணமகனாவது எப்படி?" என்று விளம்பரம் செய்து சீன ஆண்களை கவர்ந்தார்கள்.

அனேகமாக, மொசுவோ பற்றிய கற்பனையான கிளுகிளுப்பூட்டும் கதைகளை மட்டுமே கேள்விப் பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. சுற்றுலா நிறுவனங்கள் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்துள்ளன. மொசுவா பிரதேசத்தில் ஒரு சிவப்பு விளக்குப் பகுதியை உருவாக்கி அங்கு சில மொசுவா பெண்களை பாலியல் தொழிலாளர்களாக அமர்த்தினார்கள்.

தமது சமுதாயத்தைப் பற்றிய தவறான கதைகள் பரப்பப் படுவதையிட்டு, மொசுவா மக்கள் பலர் எரிச்சலுற்றுள்ளனர். இருப்பினும், ஒரு சிலர் சுற்றுலாத் துறை கொண்டு வரும் வருமானத்தை இழக்கவும் விரும்பவில்லை. பாரம்பரியமாக பெண்கள் தலைமை தாங்கிய, அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்த மொசுவோ சமுதாயத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டானது. புதிதாகத் தோன்றிய முதலாளித்துவ பொருளாதாரம் காரணமாக, மொசுவா ஆண்கள் நன்மை அடைந்தனர்.

சுற்றுலா ஸ்தலங்களில், சேவைத் துறையில் உள்ள பல வேலைகளை பெண்களே செய்தாலும், ஆண்கள் தொடர்பாளர்களாகவும், முகவர்களாகவும் பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். இருப்பினும் இத்தகைய பொருளாதார மாற்றமானது, அந்தப் பிரதேசத்தின் பின்தங்கிய வறுமையான கிராமங்களை மட்டுமே பாதித்து வருகின்றது. பெரும்பான்மையான மொசுவா பெண்கள், இப்போதும் வயலில் வேலை செய்து கொண்டே, பாரம்பரிய தாய் வழி குடும்ப உறவுகளை கட்டிக் காத்து வருகின்றனர்.

lundi 22 juin 2015

களனி பொலிஸ் வலயத்தின் 42 பேர் கைது!


களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

100 பொலிஸ் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது சட்டவிரோத சாராய உற்பத்தியாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

mercredi 10 juin 2015

சர்வதேச திரையிடப்பட்ட விழாவில் கான்பிக்கப்பட ஆவணப்படம் அறிமுக நிகழ்ச்சி 14/06/2015 மாலை 4 மணி

Ramesh Yanthra இன் புகைப்படம்.                                                                                                        கூகிள் வழியாக ரமேசு
தொடர்ந்த முயற்சி :https://groups.google.com/forum/#!topic/mintamil/baDpirqw3moவலைத்தளம் : http://gudiyamcaves.rameshyanthra.com/விக்கிபீடியா : http://ta.wikipedia.org/s/4e65பார்த்தீபன் பதிவு : http://bodhiparthi.blogspot.fr/2010/08/blog-post.htmlபிபிசி தமிழ் ரமேசின் பேட்டி : http://www.bbc.com/tamil/india/2015/05/150525_gudiyamcavesதினமணி :http://www.dinamani.com/…/%E0%AE%9A%E0%A…/article2457004.ece
மேலதிக விபரணங்கள் : http://udhayan-photos.blogspot.fr/2014/06/5.html



இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் வாழ்ந்த சென்னைக்கு அருகிலுள்ள குடியம் குகைகள் குறித்த...
www.bbc.com    ‘புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ப்ரூஸ், முதன்முதலா இந்தக் குகைகளை ஆராய்ந்து எழுதியிருக்கார். அதுக்கப்புறம் இந்திய - தமிழக ஆய்வாளர்கள் நிறைய பேர் இந்தக் குகைகளைப் பத்தி தொல்பொருள் ஆய்வுகள், புவியியல் ஆய்வுகள் செஞ்சு விளக்கமா எழுதியிருக்காங்க. ஆனா, 1965க்குப் பிறகு இந்தக் குகைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் எதுவுமே நடக்கல. யாரும் வராததால இந்த ஏரியாவே புதர் மண்டிப்போச்சு.
இப்போ இந்த குகை இருக்கிற இடத்தை புலிக்குன்றம் ரிசர்வ் ஃபாரஸ்ட்னு சொல்றாங்க. ஒரு  அகழ்வாராய்ச்சி சைட்டாவோ, சுற்றுலாத் தலமாவோ இல்லை. கற்கால மியூசியமாஇருக்க வேண்டிய இடம், ஏன் இப்படி காடாச்சு? யாருக்குமே தெரியல!’’ என்கிற இவர், தானே முன்வந்து இங்கு சில ஆராய்ச்சிகள் செய்து அதை ஆவணப்படத்தில் இணைத்திருக்கிறார்.‘‘இந்தப் படத்துக்கு கேமரா பண்ணினது என் ஃப்ரெண்ட் வசந்த். திரைப்படக் கல்லூரியில படிச்சவர்.
எக்கச்சக்க நேரத்தையும் பணத்தையும் ரெண்டு பேருமே இதுக்காக செலவு பண்ண வேண்டியிருந்துச்சு. நாங்க அலசின வரைக்கும் இங்க வாழ்ந்த மக்கள், தனித்தனியா உணவு சேகரிக்கும் குழுவா வாழ்ந்திருக்காங்க. வேட்டைக்காக கல் ஆயுதங்களை உருவாக்கியிருக்காங்க.
மத்தபடி, விலங்குகள் மாதிரியான வாழ்க்கைதான். வெறும் தொல்பொருள் ஆய்வு மட்டுமில்லாம குகைகளையும் பாறைகளையும் புவியியல் கோணத்துலயும் அலசி யிருக்கு இந்த ஆவணப்படம். அந்தந்த துறை அறிஞர்கள், நிபுணர்கள் கருத்தோட ஆதாரபூர்வமாதான் பேசுறோம். அதனாலதான் கேன்ஸ் விழாக் குழுவுல ஏத்துக்கிட்டிருக்காங்க. அங்க திரையிடப்படுற 6 இந்தியக் குறும்படங்கள்ல இதுவும் ஒண்ணு                                                   

காசாப் பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலின் போது அபு ரிடா என்ற 74 வயது முதிய பாட்டி

இஸ்ரேலுக்கும், காஸாமுனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான போரில் இஸ்ரேல் 51 நாட்கள் நடத்திய போரில் 2200 பாலஸ்தீனியர்கள் கொல்லபட்டனர் 11 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.பின்னர் ஐநா தலையீட்டின் பேரில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. கடந்த கோடை காலத்தில்,காசாப் பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலின் போது இஸ்ரேலிய வீரர் ஒருவர் அங்குள்ள ஒரு ஹாலியா அபு ரிடா என்ற 74 வயது முதிய பாட்டி தாகத்தால் தவித்து உள்ளார். அவருக்கு தனது போத்தலில் இருந்த தண்ணீரை கொடுத்து உள்ளார்.
இதனை அவர் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் ஒரு மீட்டர் தூரத்தில் இருந்து அந்த முதிய பெண்ணின் நெற்றியில், துப்பாக்கியை வைத்து சுட்டு உள்ளார் என பாலஸ்தீன தகவல் மையம் செய்தி வெளியிட்டு உள்ளது. அல் அக்ஸா டிவி செய்தியாளர் அகமது குதா இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது தான் கண்ட காட்சி என இதை வர்ணித்து உள்ளார். ஹாலியா அபு ரிடா குஸா பகுதியில் கான் யூனிஸ் நகரின் கிழக்குபகுதியில் வசித்து வாந்தார். இஸ்ரேலிய படைகளின் ஆக்கிரமிப்பில் அவர் சுட்டு கொல்லபட்டது குறித்து தகவல் சேகரிக்க அந்த பகுதியில் நான் முகாமிட்டு இருந்தேன் .
ஆக்கிரமிப்பின் போது ஒரு இஸ்ரேல் வீரர் ஒரு முதிய பெண்ணை அணுகி தண்ணீர் கொடுத்தார். அதை மற்றொரு வீரர் புகைப்படம் எடுத்தார். பின்னர் அவர் அந்த பெண்ணின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுட்டு உள்ளார் என கூறினார்.

முதன் முறை: கல்லூரி முதல்வராக திருநங்கை

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட திருநங்கை மனாபி பந்தோபாத்யாய் நேற்று தனது பணியை துவக்கினார்.

கடந்த மாதத்தில் உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்ட திருநங்கை மனாபி பந்தோபாத்யாய், நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் பெண்கள் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்க நேற்று வந்தபோது, பல்கலைக்கழக பேராசியர்களும், மாணவர்களும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளுடன் அவரை வரவேற்றனர்.

முதல்வராக பொறுப்பேற்ற பின் பேசிய மனாபி கூறுகையில், சமூகத்தை விட மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து எனக்கு இப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது என்றார்.

dimanche 7 juin 2015

"அணைப்பும் கைகோர்த்தலும்... காமமல்ல !"மீனா சோமு

சிறுவயதில் ஏனோ இந்த ஸ்பரிசத்தால் உணரும் அன்பை அனுபவிக்க நிறைய மனத்தடை இருந்தது. 20 வருடங்களுக்கு முன் அண்ணாவின், அக்காவின், தோழியின், கைகளை கோர்த்துக் கொண்டு கதைக்கனும்னு தோணும். ஆனால் செய்ததில்லை. செய்ய முடிந்ததில்லை. தொடுதலில் ஏன் இத்தனை தயக்கமும் கட்டுப்பாடும் ? இது எப்படி என்னுள் விதைக்கப்பட்டதுன்னு தெரியல. ஒரு 10வயசுக்கு அப்புறம் தொடுதல் குறித்த அதிகபட்ச கட்டுப்பாடுகள் வளர்ப்பில் நுழைக்கப்பட்டதா ஞாபகம் இல்லை.

குட் டச், பேட் டச் பற்றி பேசுமளவு மாறிய காலத்தில் தொடலுக்காக ஏங்கிய சிறுபெண்ணின் மனநிலையை சொல்லுவது ஒருவிதத்தில் இன்றைய பெற்றோர்களுக்கு தேவைப்படுமா என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த பதிவை எழுதவேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்திருந்தேன். தொடுதல் காமம் சார்ந்த ஒன்றாகவே பார்க்கப்பட்ட காலத்தில் பிறந்ததாலோ என்னவோ ஸ்பரிச பரிமாற்றம் என்ற இயல்பான ஒன்று தவறாகவே திரிக்கப்பட்டிருந்தது.அன்னையின் மடி கூட ஒருவயதுக்கு பின் கிட்டவில்லை. எளிமையான உணர்வுகளை தேவைகளை என் பெற்றோர் காலம் தடைசெய்து காமாலை கண்களோடு பழகி விட்டிருந்தது.

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களால் பன்முகத்தன்மையோடு மேற்கத்திய பண்பாடுகளையும் கொண்ட கல்லூரியில் படித்தபோது.. முதல் செமஸ்டர் விடுமுறையில் அணைப்போடு விடைகொடுத்த தோழியின் அணைப்பிற்குள் நெளிந்து விலகியது இன்றும் ஞாபகமிருக்கிறது. கை குலுக்கக்கூட இன்றுவரை ஒரு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.

நேசம் குறித்த புரிதல் தெளிவு தேவை எல்லாம் தெளிந்தபின்னும் ஊறிக்கிடக்கும் இந்த மனத்தடை இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு தானிருக்கிறது. என் தோழி சட்டென்று சகதோழிகளை அணைத்து கைகுலுக்கி அன்பை வெளிப்படுத்துவதை பார்க்கும்போது கொஞ்சம் பொறாமை எட்டிப்பார்ப்பதுண்டு. மிக நெருக்கமான கல்லூரி தோழிகள் ஓரிருவர் தவிர யாரிடமும் ஸ்பரிசத்தினை பகிர்ந்ததில்லை என் தங்கை உட்பட. இதில் சகோதரர்கள் ஆண் நட்புகள் எல்லாம் எங்கே ?!

"முத்தம் என்பது காமமல்ல" என ஆண், தன் பெண்குழந்தைக்கு முத்தமிடும்போது உணர்ந்ததாக சொல்லும் அந்த வரிகள் என்னை வசீகரிக்கவில்லை. மாறாக கோபம் வந்தது. அந்த வரிகள் அருவருப்பாக, இந்த சமூகத்தின் போலி பிம்பத்தை பல்லித்துக் காட்டியது. அன்னையை தந்தையை சகோதரியை சகோதரனை தோழியை தோழனை யாரையும் முத்தமிடவோ அணைக்கவோ கைகோர்த்து கதைபேசவோ அனுமதிக்காத பண்பாட்டு சிறையான இந்த சமூகத்தில், தொடுதலினால் பகிர்வது காமமாக மட்டுமே இருப்பது அருவருப்பானதும் உண்மைக்கு விரோதமானதுமாகும். இயற்கையான தேவை காமம் மட்டுமல்ல. இப்படி அன்பானவர்களோடு பகிரும் அணைப்பும் கூட தான்.

இப்போது ஓரளவு இந்த தயக்கங்கள், பண்பாட்டு தடைகள் மீறிய சமூகம் உருவாகி வருகிறது. இருந்தாலும் பெரிய மாற்றங்கள் இல்லை. இயல்பான இத்தேவைகளை மதிக்காத இந்த சமூகத்தில், காமத்தை மட்டுமே பூதாகரமாக்கி மற்ற ஆண்-பெண் உறவை கொச்சை படுத்துகிறோம். இது ஒரு ஆரோக்கியமான மனநிலையா ?

ஆனால் நம் கலாச்சார காவலர்கள் பொங்கி வகுப்பெடுப்பார்கள் ஆணையும் பெண்ணையும் எவ்வளவு தூரத்தில் பழக வேண்டுமென்று. முரண்பாடான சமூகமிது ஒழுக்கம். ஆண் - பெண் நட்பை அனுமதிக்காமல் சிறு வயதிலிருந்தே தனிதனிப்பள்ளிகள் , கல்லூரிகள் என பிரித்து பிரித்து ஆரோக்கியமான உறவு உணர்வுகளை வளர்க்க, மதிக்க கற்றுத்தருவதில்லை.இதில் அதற்கு அடுத்த படிநிலையான அன்பின் பரிமாற்றமான தொடுதலின் வழியை எங்கே உணர்த்த ? கமலின் கட்டிபுடி வைத்தியமாக கிண்டலடிப்படலாம் !

இதை பற்றி எழுத முக்கிய காரணமுண்டு, தொடுதலை அணைப்பை கைகோர்ப்பை இயல்பாக உணரவும் வெளிப்படுத்தவும் அனுமதிக்கப்பட்டால்... பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. ஸ்பரிசம் என்பது காமத்தின் தேவை மட்டுமல்ல அன்பின் பரிமாற்றமும் என்ற உணர்தல் ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும்.

ஆனால் இப்போது காலம் மாறிவருகிறது... கொஞ்சம் தளர்ந்திருக்கிறது. நானும் கூட தான். என் சிந்தனைகள் என்னில் புகுத்தப்பட்டிருந்த தடைகளை தளர்த்தி இருக்கிறது போலும். அண்மையில் சித்தியின் மகளான என்குட்டிதங்கையின் வயிற்றில் கைபோட்டு மென்மையாய் அவளை அணைத்தபடி உறங்கினேன். அந்த பாசப் பகிர்வுக்கு, ஆயிரம் வார்த்தைகள் ஈடில்லை !