jeudi 18 juillet 2013

சரியானவர்களை பிரதிநிதிகளாக தெரிவு செய்வதே ஜனநாயகமாகும்.தரமான வேட்பாளர்களை களத்தில் இறக்குங்கள்’

எதிர்வரவுள்ள மாகாண சபைத் தேர்தலில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய தரமான வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டுமெனத் தேர்தலைக் கண்காணிக்கும் குழுவான கபே அமைப்பு அனைத்துக் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.  செப்டெம்பர் மாதம் மத்திய, வடமேல் மற்றும் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வேட்புமனுத் தாக்கலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில் தரமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென  அக்கட்சியிடம் நாம் கோருவதாக கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் தெரிவித்தார். மக்களுக்கு சேவையாற்றக்கூடிய,  மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்யவேண்டும். ஜனநாயக முறைப்படி சரியானவர்களை பிரதிநிதிகளாக தெரிவு செய்வதே ஜனநாயகமாகும். இதற்கு இடமளிக்கும் வகையில் ஊழல், மோசடி உட்பட மற்றும் குற்றச் செயல்களில் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களை வேட்பாளராக  நிறுத்தவேண்டாமென்றும் அனைத்துக் கட்சிகளையும் கோருகின்றோம்.  அத்துடன் தேர்தல் ரீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெறுவதற்கு வேட்பாளர்கள் வன்முறைகள்,  சட்டவிரோத பிரசாரங்களை நிறுத்த வேண்டுமெனவும் கோருகின்றோம் என  தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் மேலும் தெரிவித்தார்

mercredi 17 juillet 2013

சாப்ரா : பீகாரில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 11 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். 48 பேர் சிகிச்சை

சாப்ரா : பீகாரில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 11 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் தர்மசதி கந்தவான் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. நேற்று மதியம் வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டது. சாதம், பருப்பு மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவை உணவாக வழங்கப்பட்டன. இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே சில மாணவர்கள் இறந்தனர். மருத்துவமனையில் சிலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். மொத்தம் 11 மாணவர்கள் இறந்தனர். மேலும், 48 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்தால் பீகாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். சாப்பாட்டில் விஷம் கலக்கப்பட்டதா என தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவம் பற்றி உயர்நிலை விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். சம்பவம் நடந்த கிராமம், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் சாப்ரா மக்களவை தொகுதிக்குள் உள்ளது.

காங்கோ நாட்டில் அரசுப் படைகள் தாக்குதலில் 120 போராளிகள் சாவு

காங்கோ நாட்டில் அரசுப் படைகள் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் போராளிகள் 120 பேர் கொல்லப்பட்டனர்.அரசை எதிர்த்து எம்23 என்ற கிளர்ச்சிப் படை கடந்த ஒராண்டுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறது. இரு தரப்புக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்து விட்டன.காமாவின் வடக்குப் பகுதியில் உள்ள சில கிராமங்கள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்குள்ள கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
திஙக்ள்கிழமை காலையில் தாக்குதலை தொடங்கியது. இரு தரப்புக்கும் கடுமையான சண்டை நடைபெற்றது. ராணுவ தாக்குதலில் 120 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் 12 பேர் உயிரிழந்தனர் என்று, அரசு செய்தித் தொடர்பாளர் லாம்பர்ட் மென்டலின் தெரிவித்தார்.

mardi 16 juillet 2013

இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று லேன்டிங் செய்தபோது விபத்து! பைலட் பலி!!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று திங்கட்கிழமை காலை லேன்டிங் செய்தபோது, விபத்துக்கு உள்ளாகியது. விமானத்தை செலுத்திவந்த இந்திய விமானப்படை விமானி இந்த விபத்தில் உயிரிழந்தார்.
விபத்துக்குள்ளானது மிக்-21 பைசன் ரக விமானம். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உத்தர்லாய் விமானதளத்தில் விபத்து நடைபெற்றது. இந்த விமானத் தளத்தில் இருந்து பயிற்சி பறத்தலுக்காக இன்று காலை புறப்பட்டுச் சென்ற விமானம் திரும்பி வந்து தரையிறங்கியபோதே விபத்து நடந்தது.
விமானத்தை செலுத்தியவர், பிளைட் லெப்டினென்ட் தரத்திலுள்ள விமானி. விபத்தினால் ஏற்பட்ட படுகாயங்களால், இவர் மரணமடைந்தார் என பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் எஸ்.டி.கோஸ்வாமி தெரிவித்தார்.
கடந்த மாதமும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இதே மிக்-21 ரக விமானம் ஒன்று விழுந்து நொருங்கியது. அப்போது விமானம் பறந்து கொண்டிருந்த காரணத்தால், விமானி எஜக்ட் பண்ணப்பட்டு பாரசூட் உதவியுடன் உயிர் தப்பினார். இன்றைய விபத்து, லேன்டிங் செய்தபோது ஏற்பட்டதால், விமானிக்கு அந்த அதிஷ்டம் வாய்க்கவில்லை.
இந்திய விமானப்படையில் உள்ள இவ்வகை விமானங்கள், மிகப் பழையவை. இந்திய விமானப்படையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாவனையில் உள்ள விமானங்கள் இவை. ரஷ்யத் தயாரிப்பு. ஆபரேட் பண்ணுவதற்கு மிகவும் கடுமையான ரகமான விமானங்கள் இவை.
இந்திய விமானப்படை இதுவரை சுமார் 900 மிக்-21 ரக விமானங்களை வெவ்வேறு காலகட்டங்களில் வாங்கியுள்ளது. அவற்றில் பாதி எண்ணிக்கையான விமானங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் விபத்துக்கு உள்ளாகி அழிந்து விட்டன.
இந்த மிக் விமானங்களையே வேறு ரக விமானங்கள் மூலம் மாற்றீடு செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது, பிரான்சில் இருந்து இலகு ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த விமானங்கள் முழுமையாக வந்து சேர 2018-19 ஆண்டு ஆகிவிடும்.
அதுவரை மிக் விமானங்கள் இந்திய விமானப்படையில் உபயோகத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்திய விமானப்படைக்கு இந்த ஆண்டு விபத்துக்குள்ளான 6-வது விமானம் இது!

லங்காசிறி FM மீண்டும் புதுப்பொலிவுடன் இன்று முதல் 24 மணிநேர ஒலிபரப்புடன்

உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்காக மீண்டும் புதுப்பொலிவுடன் 24 மணிநேர நேரடி ஒலிபரப்பை இன்று முதல் லங்காசிறி FM வழங்குகிறது என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.புது தொழில்நுட்பங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய குரல்களுடனும, புத்தம் புது நிகழ்ச்சிகளுடனும் இன்று முதல் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது லங்காசிறி FM (சிங்கம்.fm) இன்றைய புதிய ஆரம்பத்திற்கு நேயர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று நிகழ்ச்சி முகமையாளர் தெரிவித்துள்ளார் 

ஜனாதிபதியை தனியாக சந்தித்த சம்பந்தே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக இளைப்பாறிய புதிய பூசாரி நியமனம்

தமிழ்த் தேசிய கூடமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் நியமனத்தில் இருந்துவந்த முட்டிமோதல் பேரம்பேசல்களுடன் முடிவுக்கு வந்திருக்கிண்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவை நியமிக்குமாறு கூட்டமைப்பில் இருக்கும் அனேகமானோர் கோரிக்கை முன்வைத்தபோதும் அவர்கள் அனைவரதும் கோரிக்கைகளை குப்பைக்கூடையில் வீசிய சம்பந்தனார் தன்னிச்சையாக திரு.விக்னேஸ்வரனைமுதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

திரு.விக்னேஸ்வரன் அவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர் என்றும் அவரை ஏன் கிழக்கு மாகாணசபையில் போட்டியிடவைத்திருக்கலாம்தானெ என கூட்டமொன்றில் சம்பந்தனை நோக்கி சொற்கணை ஒன்று ஏவப்பட்டிருக்கின்றது. இக்கேள்விக்கு ஆவேஷத்துடன் பதிலளித்த சம்பந்தன் மாவிட்டபுரத்தை சேர்ந்த சேனாதிராசா அம்பாறையில் தேர்தலில் நிற்கமுடியுமானால் விக்னேஸ்வரன் வடமாகாணத்தில் போட்டியிடுவதில் என்ன தவறென் கேள்விக்கணை தொடுத்துள்ளார். 

அண்மையில் ஜனாதிபதியை தனியாக சந்தித்த சம்பந்தனிடம் விக்னேஸ்வரனையே முதன்மை வேட்பாளராக நியமிக்குமாறு மகிந்தராஜபக்ஸ கூறியதாகவும் எனவே ஜனாதிபதியை பகைக்க விரும்பாத சம்பந்தன் விக்னேஸ்வரனையே நியமிக்கவுள்ளதாகவும் மின்னல் ரங்கா சிலனாட்களாக மின்னிவருவதும் கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயமாகியுள்ளது. 

இந்தியாவுக்கும் மேற்குலகிற்கும் தன்னை ஓரு தமிழ்த் தேசியவாதியாகக் காடிக்கொள்ளும் சம்பந்தன் தனது சுய தேவைகளுக்காக ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ பகைத்துக்கொள்ளமாட்டார் என்பதனை இனியாவது வடக்கு கிழக்கு மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

தேர்தலுக்கு முன்னரே சுரேஸ் சம்பந்தன் உடன்பாடு

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பெரும்பாலானோர் சேனாதியை நியமிக்குமாறு ஒன்றுபட்டிருந்த நிலையில், பதவிக்காக எதனையும் செய்யக்கூடிய மண்டையன் குழுத்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சம்பந்தனை இரகசியமாக சந்தித்து ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளார். அதாவது மாகாண சபையை கைப்பற்ற முடிந்தால்; கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக தொழில் புரியும் தனது தம்பி சர்வேஸ்வரனுக்கு வடமாகாண சபையில் மிக முக்கிய அமைச்சு பதவியை தர தயார் என்றால் நீங்கள் சொல்கின்ற வேட்பாளரை ஏற்க நானும் தயார் என்றுள்ளார். 
சும்பந்தனார் தலை அசைக்கவே டீல் முடிவுக்கு வந்துள்ளது. கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளை உதறித்தள்ளிவிட்டு சம்பந்தன் விருப்பப்படியே திரு.விக்ணேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க ஆதரவு வழங்குவதாக தலையாட்டியுள்ளார் பிரபல மதுபான வியாபாரி சுரேஸ் பிரேமச்சந்திரன். 

எது எவ்வாறாயினும் தனது உறவினரான விக்னேஸ்வரனை எப்படியாவது முதலமைச்சர் ஆக்கவேண்டும் எண்ற ஆதங்கத்தில் சுரேஸின் கோரிக்கைக்கு தலையாட்டியுள்ள சம்பந்தனால் அதை நிறைவேற்ற முடியாது போனாம் வேதாள் முருங்கையில் ஏறும் என்பது நான்சொல்லவேண்டிய தேவை இல்லை..
இலங்கை; இந்தியா மற்றும் சர்வதேசநாடுகள் எல்லாம் சுற்றித்திரிந்து தமிழ் மக்களை பகடைகளாக வைத்து பணம் சம்பாதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பின் சுய நலங்களும் பதவிமோகங்களும் எமது அப்பாவித் தமிழினத்திற்கு என்று புரிகின்றதோ அன்றுதான் தமிழனுக்கு உண்மையான விடுதலை கை கூடும்.

எஸ்.எஸ்.கணேந்திரன்

dimanche 14 juillet 2013

யாழை குறிவைக்கும் பப்பிலிக் புறோக்கர் கூட்ட‌ங்கள்.மணப்பெண் தேடும் அமைச்சர்

யாழில் சுதந்திரக் கட்சி சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா 'யாழை விட்டு போக விரும்பவில்லை. இங்கு ஒரு பெண் பார்க்கவும்' என பொது மக்களிடம் கோரியுள்ளார்.

யாழ்.குருநகர் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'யாழ் மாவட்டத்திற்கு நான் பல தடைவகள் வருகை தந்திருக்கின்றேன். இந்த முறை நான் வருகை தந்தததை என் வாழ்நாளில் மறக்கமுடியாது.  

எனது பழைய நண்பர்கள், நான் திரிந்த இடங்கள் எல்லாம் சுற்றி வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிருக்கின்றது. எனக்கு யாழை விட்டு போகவே விருப்பவில்லாமல் இருக்கின்றது. இதனால் எனக்கு இங்கு ஒரு ' மணப்பெண் தேவை' என்று அவர் கோரிக்கை விடுத்ததோடு ' என்னைக் கண்டு நீ வாழ உன்னைக் கண்டு நான் இன்பம் பொங்கும் இன்பத்தீபாவளி' என்ற பாடலைப் பாடி அங்கு கூடியிருந்த மக்களை மகிழ்வித்துள்ளார்.

ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம்

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இலங்கை அரசியல் 13வது சட்டத்திருத்தம் குறித்து குறிப்பிட்டுள்ளார். தமிழர் விவகாரத்தில் 13வது அரசியல் சட்டத்திருத்தம் கவலை தரக் கூடியதாக உள்ளது. சட்டத்திருத்தத்தில் சிங்களருக்கு இணையாக தமிழருக்கு அந்தஸ்து அளிக்கப்படவில்லை.
இனப்பாகுப்பாடு தொடர்வது குறித்து பலமுறை நினைவூட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் பிரச்சனையின்றி வாழ வழிவகை செய்யப்படவில்லை.
தனி ஈழம் குறித்து சர்வதேச கருத்து கணிப்பு நடத்த வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இலங்கையைச் இராணுவத்தைச் சேர்ந்த பெண்கள்

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இலங்கையைச் இராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் இணைந்து கொள்வதற்காகப் பயிற்சிகளை நிறைவுசெய்த இலங்கையைச் சேர்ந்த 100 பெண் படையினர் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளனர். அமைதி காக்கும் படையில் பெண் படையினரை இணைத்துக் கொள்ளும் இந்த நடவடிக்கை 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது .
ஏற்கனவே இலங்கை இராணுவ வீரர்கள் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இணைந்துள்ளனர். இவர்கள் லெபனான், ஹெய்டி போன்ற நாடுகளில் பணியாற்றி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்

பல்லாயிரம் பெரை பலியிட்ட அரச முகமூடி சம்மந்தே முதலமச்சருக்கு யாரை நியமிப்பது என்ற அறலைவேந்த நிலையில் அரச சந்த்திப்பு

இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்துவைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் இன்று காலை அவரை சந்தித்துப் பேசினார்.
பிரிபடாத- ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் சாத்தியப்படக்கூடியதுமான நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வுத்திட்டம் பற்றி ஆராய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக இதன்போது மகிந்த ராஜபக்ஷவிடம் சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியதாக அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, காணி விடயங்கள், மக்களை அவர்களின் ஆரம்ப இடங்களிலேயே மீளக்குடியேற்றுதல் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் இராணுவத்தை முகாம்களுக்குள்ளேயே முடக்குதல் அரசியல் கைதிகளை விடுவித்தல் உள்ளி்ட்ட விடயங்கள் பற்றியும் பேசப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் உடனிருந்துள்ளனர்.
இந்த சந்திப்பு சினேகபூர்வமாக அமைந்திருந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

முஷரபுக்கு எதிராக மற்றொரு வழக்கு! இக்கட்டான கட்டத்தில் முஷரவ்

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரபுக்கு எதிராக, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஹாரூன் ரசீத் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 3-ந் திகதி முஷரப்பின் உத்தரவின் பேரில் லால் மஜீத்தில் இராணுவம் நடவடிக்கை எடுத்ததில் எனது தந்தை மற்றும் பாட்டி கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

ரசீதின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி நூருல் ஹக் குரோஷி இது தொடர்பாக முஷரப் மீது வழக்கு பதிவு செய்யவும் என உத்தரவிட்டார். எனவே அடுத்தடுத்த வழக்குகளால் முஷரப்புக்கு கடும் நெருக்கடி உருவாகி வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரபுக்கு எதிராக, பெனாசிர் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், குறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

samedi 13 juillet 2013

குழந்தை பலி 88 பேர் மீட்பு ஆஸி. கடலில் படகு கவிழ்ந்ததில்

புகலிடக் கோரிக்கையாளர்களைச் ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் குழந்தையொன்று பலியாகியதுடன் 88 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது என்று அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேசன் கிளயார் தெரிவித்துள்ளார்.
குறித்த படகில் இருந்தவர்களில்  88 பேர் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த படகில் உள்ளவர்கள் நேற்று வெள்ளிக்கிழமையே தமக்கு ஆபத்து என உதவி கோரியதாகவும் அதன்படி அவர்களை பாதுகாக்கச் சென்ற அதிகாரிகள் இன்று காலையே அங்கு சென்றதாகவும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த படகில் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் அமைச்சர், இந்த படகில் 97 பேர் பயணம் செய்திருக்கலாம் என்றும் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கண்காணிப்பார்களை ஈடுபடுத்தப் போவதாக தேர்தல் ஆணையாளர்

voteவட மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பார்களை ஈடுபடுத்தப் போவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முக்கியமான தேர்தல்களின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவது வழமையானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்களில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டும் அல்லது ஈடுபடுத்தக் கூடாது என எந்தவிதமான நியதிகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.’

செங்டு நகரில், 19 லட்சம் சதுர அடியில் உலகின் மிகப்பெரிய கட்டடம் திறப்பு

உலகின் மிகப் பெரிய கட்டடம், சீனாவின், செங்டூ நகரில் திறக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையம், உலகின் மிகப் பெரிய கட்டடமாக, இதுவரை கருதப்பட்டது. தற்போது இதை, பின்னுக்கு தள்ளும் வகையில், சீனாவின் செங்டு நகரில், 19 லட்சம் சதுர அடியில், பிரமாண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்துக்குள், இரண்டு, ஐந்து நட்சத்திர ஓட்டல்களும், 14 திரையரங்குகளும், ஒரு பல்கலைக் கழகமும், 5,000 சதுர மீட்டரில் செயற்கை கடலும் உள்ளன.
இது மட்டுமல்லாமல், ஏராளமான கடைகளும் உள்ளன. இந்த கட்டடத்துக்குள் செல்ல, 16 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த, வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கட்டடத்துக்குள், 244 லிப்டுகள் உள்ளன. இந்த வார துவக்கத்தில், இந்த கட்டடம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

டான் ரீவி தயா மாஸ்ரரை நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது;இயக்குனர் திரு. குகநாதன்

புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளராக இருந்தவர் தயா மாஸ்ரர் எனப்படுகின்ற தயாநிதி. இவர் வன்னியில் புலிகள் மண் கவ்வியதை தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்ததடன் யாழ்பாணத்தில் இயங்கி வருகின்ற டான் தொலைக்காட்சியில் இணைந்து கொண்டார். தற்போது இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகஅறிவித்துள்ளார். 

இவ்வறிவிப்பை தொடர்ந்து டான் ரீவி தயா மாஸ்ரரை நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. டான் ரீவியின் இயக்குனர் திரு. குகநாதன் அவர்களால் இவ்வறிவித்தல் கடந்த செவ்வாய் கிழமை யாழ் ஊடக மையத்தில் வெளிவிடப்பட்டது. „ஒரு சுதந்திர ஊடகம் அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளரை தொடர்ந்தும் ஊழியாராக வைத்துக்கொண்டு நடுநிலைமையாக செயற்பட முடியாது என்ற காரணத்தினால்' தயா மாஸ்ரர் நீக்கப்பட்டுவதாக குகநாதன் தெரியப்படுத்தியுள்ளார். 

இவ்வறிவித்தலை விடுத்து அங்கு ஊடகவியலாளர்களுக்கு குகநாதன் தொடர்ந்து தெரிவிக்கையில் : „ டான் ரீவியில் தயாநிதி அவர்கள் இணைந்து 6 மாதங்கள் சேவையாற்றிய பின்னர், கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்று விடயத்தினை செய்தியாக தெரியப்படுத்தியதை தொடர்ந்தே யாழிலிருந்து செயற்படுகின்ற ஊடகங்கள் விடயத்தை செய்தியாக வெளியிட்டிருந்து. ஆனால் நான் இன்று தயாநிதி எமது நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியையும் அதற்கான காரணத்தையும் உங்களிடம் தெரிவித்திருக்கின்றேன் அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்' என வேண்டுதல் விடுத்தார்

சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஒருவர் நிறுத்தவேண்டுமா?

சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் ஒருவர், அதனை நிறுத் துவதால், உடல் நிலை அதிக முன்னேற்றம் அடைகிறது. சிகரெட் பிடிப்பதை விடுவதால் நீங்கள் ஆரோக்கியமான வராக வாழப் போகிறீர்கள் என்பதை அடிக்கடி நினைத்துப் பாருங்கள்.

சிகரெட்டைப் பொறுத்தவரை உடனடியாக நிறுத்தக் கூடாது. அவ்வாறு நிறுத்தினால், ஒரு கட்டத்தில் மீண்டும் சிகரெட் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். எனவே, ஒரு நாளைக்கு 5 சிகரெட் பிடித்து வந்தீர்களானால், ஒரு வாரம் 4 ஆகக் குறைத்து, அடுத்த வாரம் 3 என தொடர்ந்து குறைத்து கடைசியாக சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதே சிறந்த வழியாகும்.

சிகரெட்டை விடும் போது, உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்கள். ஆப்பிள், இனிப்பு, சிப்ஸ் என எதுவாக இருந்தாலும், எப்போது எல்லாம் சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை எடுத்து சாப்பிடுங்கள்.

சிகரெட்டை நிறுத்த முடிவு செய்த பிறகு, அடுத்த ஒரு வேலையையும் நாம் செய்தே ஆக வேண்டும். அதுதான் உடற்பயிற்சி, சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அறவே ஒழிக்க இந்த உடற்பயிற்சி உதவும்.

சிகரெட்டுக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு வந்தவர்களின் அனுபவங்களை படிக்கலாம். இது உங்களுக்கு நிச்சயம் ஒரு உந்துதலை ஏற்படுத்தும்.

நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்த முடிவு செய்திருப்பதை உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் மற்றும் உங்களுடன் இருக்கும் உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உற்சாகமூட்டி அதற்கு உதவியும் செய்வார்கள். மேலும், சிலரும் உங்களோடு சிகரெட் பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்யலாம்.

சிகரெட் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம், அதற்கான காசை எடுத்து ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள். அந்த பணம் சேர்ந்து கொண்டிருக்கும் போது, அதனை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம், உங்களை சிகரெட் வாங்குவதில் இருந்து தடுக்கலாம். அந்த பணத்தை ஏதேனும் இல்லத்துக்குக் கொடுத்து உதவி செய்யுங்கள்.

சிகரெட் பிடிப்பதை நிறுத்தியதும், அதனை நினைவு கூறும் பொருட்களை தூக்கி எறியுங்கள். உங்களிடம் உள்ள ஆஷ் ட்ரே, லைட்டர் போன்றவற்றை சந்தோஷமாக தூக்கி எறியுங்கள்.

சிகரெட் பிடிப்பதை நிறுத்தி ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் ஆன பிறகு உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். வெகு நாட்களாக வாங்க நினைத்து வாங்காமல் இருந்த பொருளை வாங்குங்கள். அவ்வப்போது அதற்காக பெருமையும், சந்தோஷமும் அடைவீர்கள்.

சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபட தற்போது ஏராளமான மருந்துகள் வந்துவிட்டன. மருத்துவரின் உதவியோடு மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவ ஆலோசனை பெறாமல் அதைச் செய்ய வேண்டாம்.

பலருக்கும் குடிப்பழக்கம் தான் பல்வேறு கெட்ட பழக்க வழக்கங்களுக்கு காரணமாக இருக்கும். எனவே, சிகரெட் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள், குடிப்பழக்கம் இருந்தால், அதையும் விட்டுவிடுங்கள்.

அமெரிக்க சிறப்புப்படை திருகோணமலையில் சிறிலங்கா படையினருடன் கூட்டுப்பயிற்சி


அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவு ஒன்று சிறிலங்கா ஆயுதப்படைகளின் சிறப்புப் படைப் பிரிவுகளுடன் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 2ம் நாள் திருகோணமலை டொக்யார்ட்டில் இந்தப் பயிற்சி ஆரம்பமாகியுள்ளது.

பிளாஸ் ஸ்ரைல் கூட்டுப் பயிற்சி என்ற பெயரில், ஆண்டு தோறும் நடத்தப்படும், போரல்லாத கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழேயே இந்தப் பயிற்சிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படையின் சிறப்புப் போர்முறைச் சமூகத்துடன், சிறிலங்கா ஆயுதப்படைகளின் சிறப்புப் படைப்பிரிவுகள் இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சி வரும் 19ம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இதில், சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணி, அதிவேகத் தாக்குதல் படகு அணி, சுழியோடிகள், துரித மீட்பு அணி, என்பனவும், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்தி அணியும், சிறப்புப் படைப்பிரிவும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன.

அமெரிக்க கடற்படையின் சார்பில் சீல் எனப்படும் சிறப்புப் படைப்பிரிவு, சிறப்பு படகு அணி, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு இந்தப் பயிற்சியில் பங்கேற்கிறது.

போர்ப்பயிற்சி அல்லாத இந்தப் பயிற்சி, போரில் காயமுற்றவர்களை தந்திரோபாயமாக கவனித்தல், நீரில் வேகமான மீட்பில் ஈடுபடுதல், உலங்குவானூர்தி மூலம் மீட்புகளை மேற்கொள்ளல் என்பனவற்றையும் உள்ளடக்கியுள்ளது.


vendredi 12 juillet 2013

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா செல்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்;கருணாநிதி

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா செல்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஆஸ்திரேலியாவுக்குத் தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 17 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.23 ஆண்டுகள் இந்தியாவில் அகதிகளாக வாழ்வதாகவும், உறவினர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் சுதந்திரமாகவும் வசதியுடனும் வாழ்வதாகவும், இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்புவதில்லை என்றும் கைதாகியுள்ள அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் வாழ முடியாமல் இந்தியாவுக்கு வந்து அகதிகளாக பல ஆண்டுகளாக வாழும் அவர்களின் பரிதாபகரமான வாழ்க்கை நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்று வசதியுடனும், சுதந்திரமாகவும் வாழ முடியுமென்றால், அவர்களின் நல்வாழ்க்கையில் நாம் குறுக்கிடாமல், ஆஸ்திரேலியா செல்வதற்கு மத்திய, மாநில அரசுகள் தம்மால் இயன்ற உதவியைச் செய்ய முன் வரவேண்டும்.
இதற்கு மாறாக அவர்களைக் கைது செய்து, சிறையில் அடைப்பதால் பயன் ஒன்றுமில்லை.
எனவே, அகதிகள் பிரச்னையில் மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு நல்ல முறையில் தீர்க்க அரசு முன்வர வேண்டும்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது பல ஆண்டுகளாக தொடர்கதையாக நீடித்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கை அதிபர் ராஜபட்சவைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் விரைவான அரசியல் தீர்வு காண்பதற்கு, 13-வது அரசியல் சட்டத் திருத்தத்துக்கும் அப்பால், இந்திய அரசுக்கும், சர்வதேச சமுதாயத்துக்கும் அளித்த வாக்குறுதியினை இலங்கை பின்பற்றி அதிகாரப் பகிர்வு வழங்குவது அவசியம்.
இதை ராஜபட்சவிடம் சிவசங்கர் மேனன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்று நம்புகிறோம்.
இந்திய மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் தொடர்பாக ராஜபட்சவிடம் பேசப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் வன்முறையில் இறங்காமல் மனித நேய அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று இலங்கையால் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எந்த ஒப்பந்தத்தையும், உறுதிமொழியையும் இலங்கை காப்பாற்றவில்லை. சிவசங்கர் மேனனிடம் கொடுத்த வாக்குறுதியை எந்த அளவுக்குக் காப்பாற்றப் போகிறது என்பதுதான் பிரச்னை என்று அவர் கூறியுள்ளார்.

2 கோடி இந்திய ரூபா செலவில் பெண்னுக்கு மூக்கறுத்த கூட்டத்தால் பெண்களை அடிமைப்படுத்த சிலை

இலங்கையை ஆண்ட மன்னன் ராவணன் சீதையை சிறை எடுத்து அங்குள்ள அசோகவனத்தில் சிறை வைத்ததாக ராமாயண காவியத்தில் உள்ளது. எனவே, இலங்கையில் சீதைக்கு கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில அரசு செய்துள்ளது. இக்கோவிலை கட்ட இலங்கையில் உள்ள நகரங்களில் 50 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில் நுவரலியா அருகேயுள்ள திவுரும்பொல என்ற இடத்தில் சீதைக்கு கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ராவணனை வதம் செய்த பின் சீதையை ராமபிரான் மீட்டார்.
பின்னர் சீதையை அக்னி பிரவேசம் செய்ய வைத்தார். அந்த இடத்தில் தான் தற்போது கோவில் கட்டப்படுகிறது. இதற்காக இந்திய ரூ.2 கோடி செலவிடப்படுகிறது
.
இக்கோவில் தென்னிந்திய கட்டிட கலை நுட்பத்தில் கட்டப்பட உள்ளது. அதற்கான அலங்காரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த கட்டிட கலை நிபுணர் இதை வடிவமைத்துள்ளார். ஆனால் தனது பெயரை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இலங்கை மற்றும் மத்திய பிரதேச அரசுகளிடையே சுற்றுலா துறையை மேம்படுத்த இக்கோவில் கட்டப்படுகிறது. இதற்கான திட்டம்
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவதற்கு இலங்கையின் வரலாற்று நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற இடங்கள் மிகவும் அரியவகை கண்டுபிடிப்புகளாகும். இங்கு கட்டிடங்கள் கட்டுவதன் மூலம் அதன் வரலாற்று சிறப்புகள் அழியும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.
ஆனால் ராவண பாலயா என்ற சிங்கள புத்த மத அமைப்போ சீதையின் கோவில் முன்பு ராவணன் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
சீதைக்கு கோவில் கட்டு வதை எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் இலங்கையை ஆண்டதாக புராணத்தில் கூறப்படும் மன்னன் ராவணனை முதலில் அரசு கௌரவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஆசியாவின் வர்த்தக கேந்திரமாக கொழும்புத் துறைமுகத்தை மாற்றுவதற்கு சீனா தயார்

ஆசியாவின் வர்த்தக கேந்திரமாக கொழும்புத் துறைமுகத்தை மாற்றுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.
இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே, சீனத் தூதுவர் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.