jeudi 18 juillet 2013

சரியானவர்களை பிரதிநிதிகளாக தெரிவு செய்வதே ஜனநாயகமாகும்.தரமான வேட்பாளர்களை களத்தில் இறக்குங்கள்’

எதிர்வரவுள்ள மாகாண சபைத் தேர்தலில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய தரமான வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டுமெனத் தேர்தலைக் கண்காணிக்கும் குழுவான கபே அமைப்பு அனைத்துக் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.  செப்டெம்பர் மாதம் மத்திய, வடமேல் மற்றும் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வேட்புமனுத் தாக்கலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில் தரமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென  அக்கட்சியிடம் நாம் கோருவதாக கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் தெரிவித்தார். மக்களுக்கு சேவையாற்றக்கூடிய,  மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்யவேண்டும். ஜனநாயக முறைப்படி சரியானவர்களை பிரதிநிதிகளாக தெரிவு செய்வதே ஜனநாயகமாகும். இதற்கு இடமளிக்கும் வகையில் ஊழல், மோசடி உட்பட மற்றும் குற்றச் செயல்களில் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களை வேட்பாளராக  நிறுத்தவேண்டாமென்றும் அனைத்துக் கட்சிகளையும் கோருகின்றோம்.  அத்துடன் தேர்தல் ரீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெறுவதற்கு வேட்பாளர்கள் வன்முறைகள்,  சட்டவிரோத பிரசாரங்களை நிறுத்த வேண்டுமெனவும் கோருகின்றோம் என  தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் மேலும் தெரிவித்தார்

Aucun commentaire:

Enregistrer un commentaire