பாரிஸ்:பிரான்ஸ் நாட்டில், முஸ்லிம்கள் பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, தலைநகர் பாரிசில் வன்முறை சம்பவங்கள் நடந்து உள்ளன.
பிரான்ஸ் மதச்சார்பற்ற நாடு என்பதால், பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த வாரம், பாரிஸ் நகரில், பர்தா அணிந்து சென்ற பெண்ணை, போலீஸ்காரர் ஒருவர் எச்சரித்தார். இதனால், கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர், போலீசை தாக்கி உள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தையடுத்து, பாரிஸ் நகரில் உள்ள முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவரை விடுவிக்கும்படி கோரினர். இந்தப் போராட்டம் நேற்றும் நடந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சாலை ஓரங்களில் இருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். இதில், 20 கார்கள் எரிக்கப்பட்டன.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire