இங்கிலாந்து இளவரசர் வில்லியம்–கதே தம்பதிக்கு பிறந்த அரச குடும்ப புதிய வாரிசுக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என பெயர் சூட்டி இருக்கிறார்கள். அதில் ஜார்ஜ் என்பது அரச குடும்பத்தில் கடந்த 300 ஆண்டுகளாக போற்றப்படும் பெயர் ஆகும். முன்பு ஜார்ஜ் பெயருடைய 6 மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல ராணி எலிசபெத்தின் தந்தை பெயர் ஜார்ஜ் ஆகும். லூயிஸ் என்பது இளவரசர் சார்லசின் நெருங்கிய உறவினர் லார்டு லூயிஸ் மவுண்ட்பேட்டன் பெயரை நினைவு படுத்தும் வகையிலும் சூட்டப்பட்டது. இவர் தான் இந்தியாவின் கடைசி வைசிராயாக இருந்தவர். அலெக்சாண்டர் என்பது அரச குடும்பத்தின் பொதுவாக விளக்கும் பெயராகும். இருப்பினும் புதிய வாரிசின் அதிகாரபூர்வ பெயர் ஜார்ஜ் என்றே அழைக்கப்பட இருக்கிறது. முன்னதாக அரச குடும்ப வாரிசு குறித்து ஏராளமானோர் சூதாட்டத்தில் பணம் கட்டினார்கள். அதில் ஜார்ஜ் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு சுமார் ரூ.2 1/2 கோடியை (2 1/2லட்சம் பவுண்ட்) சூதாட்ட நிறுவனம் வழங்கியது.
Aucun commentaire:
Enregistrer un commentaire