நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் பள்ளி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ஆசிரியர் உள்பட 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதில் அனைவரும் அரசு பள்ளியில் தங்கி படித்தவர்கள் ஆவர். இது போல் பள்ளிகளை குறி வைத்து தாக்குவது இங்குள்ள பயங்கரவாதிகளுக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரத்து 600 பேர் உயிர் தப்பினர். யோப் மாகாணம் மமுடோ டவுண் பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு பலரும் தங்கி படித்து வந்தனர். அதிகாலை நைஜீரிய நேரப்படி 3 மணிக்கு பயங்கரவாதிகள் இந்த பள்ளிக்கு வந்து துப்பாக்கியால் சுட்டனர் .தொடர்ந்து பள்ளி கட்டடத்திற்கு தீ வைத்தனர். இதில் ஒரு ஆங்கில ஆசிரியர் மற்றும் 29 குழந்தைகள் உயிரிழந்தனர், சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அடையாளம் காண முடியவில்லை . தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது. இங்கு பாதுகாப்பு இல்லாத குறைபாடே இது போன்ற தாக்குதலுக்கு காரணம் என இப்பகுதியினர் கூறினர்.
கடந்த 2010 முதல் நைஜீரியாவில் ஏற்பட்ட தாக்குதலில் இதுவரை ஆயிரத்து 600 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire