ஈழத் தமிழர் பிரச்னைக்காக டெசோ அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கிறார்.
கடந்த ஜூலை 16-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழீழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கூட்டத்தில், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்ததைத் தடுக்க வேண்டும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி, திருச்சியில் பொருளாளர் மு.க. ஸ்டாலின், மதுரையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கோவையில் சுப்புலட்சுமி ஜெகதீசன், காஞ்சிபுரத்தில் துரைமுருகன், தஞ்சாவூரில் நடிகை குஷ்பு, தேனியில் வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், நாமக்கலில் நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டெசோ அமைப்பு அறிவித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire