mardi 23 juillet 2013

நல்ல நேரம் பார்க்காது தேர்தலுக்கு முன்னர் 13இல் உள்ள அதிகாரங்களை நீக்க வேண்டும்; தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

news
மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் 13ம் திருத்தச் சட்டத்தில் இருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்குவதற்கு கூட்டமைப்பு தடங்கல் ஏற்படுத்தும் எனவே, நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்காது நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அதிகாரங்களை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  .
வடமாகாணசபைத் தேர்தல், பொதுநலவாய மாநாடு என்பன முடிவடைந்த பின்னர் அரசமைப்பில் அரசு திருத்தங்களை மேற்கொள்ளும் என வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து வெளியிம் போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொலிஸ் காணி அதிகாரங்களை நீக்காது அரசு வடமாகாணசபைத் தேர்தலை நடத்துமானால், அதைப் பயன்படுத்திக்கொண்டு ஈழத்தை உருவாக்குவதற்கான அரசியல் போரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும்.

வடமாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் 13 இலிருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்குவதென்பது முடியாத காரியமாகும். அரசின் முயற்சிக்குக் கூட்டமைப்பு நிச்சயம் தடங்கல் ஏற்படுத்தும் எனவே, நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்காது நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அதிகாரங்களை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆகவே, இந்தியாவைப் பற்றியோ அல்லது பொதுநலவாய மாநாடு குறித்தோ யோசிக்காது 13இல் இருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்கவேண்டும். சிங்கள மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசு உணரவேண்டும் என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire