யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் குரலாகவே ஒலித்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த நிறைவின் பின்னர் இடம்பெயர் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு சோறுப் பொதியையேனும் வழங்கவில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காவிட்டாலும், தெரிவுக்குழுவின் பணிகளை தொடருமாறு அரசாங்கத்தை கோருவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாலைப் போன்று இயங்கி வருகின்றது என குற்றம் சுமத்தியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் கொள்கைகளை தற்போதைய நிர்வாகம் புறந்தள்ளியுள்ளதாகக் குறிப்பி;ட்டுள்ளார். வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதனை தடுக்கும் நேக்கிலேயே அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இன்று ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாலாக மாற்றியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire