மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு செல்லவேண்டும் என்ற தமது கருத்தையும் வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா இந்திய உறவில் ஏற்பட்டிருக்கும் முனேற்றம் எதிர் வரும் செப்டம்பர் இல் நடைபெற இருக்கும் ஐகிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடரிலும் , அதனை தொடர்ந்து நவம்பர் இல் நடைபெற இருக்கும் பொதுநலவாய தலைவர்களின் மகாநாட்டிலும், இந்திய அரசு ஸ்ரீ லங்காவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் முதல் படி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர் .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஐந்து பங்காளி கட்சிகளும் தேர்தல் ஆசனங்களை எப்படி பகிர்ந்து கொள்ளுவது , யார் முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவது, கிடைக்கும் நிதியை பகிர்ந்து கொள்ள குழுக்கள் அமைப்பது போன்ற விடயங்களில் காட்டும் ஆர்வம் நீண்ட கால தமிழ் பேசும் மக்களின் நலன்கள் தொடர்பில் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வலுவடைந்து வருகின்றது.
Aucun commentaire:
Enregistrer un commentaire