எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ள முகமது முர்ஸியின் ஆதரவாளர்கள் சனிக்கிழமையும் தமது ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று உறுதிபட அறிவித்துள்ளனர்.
இராணுவத்தால் அதிபர் முர்ஸி ஆட்சியகற்றப்பட்டது, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் மூத்த தலைவர்கள் கைதுசெய்யப்பட்டது ஆகியவற்றைக் கண்டித்து வெள்ளியன்றும் இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.
முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும் அவரை எதிர்ப்பவர்களுக்கும் இடையில் வெள்ளியன்று ஏற்பட்ட கலவரத்தில் நாடெங்கிலும் பார்க்க முப்பது பேர் கொல்லப்பட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருந்தனர்.
கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் வெள்ளியிரவு நெடுநேரம் வரை மோதல்கள் நீடித்திருந்தன. இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களையும் கண்ணாடி பாட்டில்களையும் வீசித் தாக்கிக்கொண்டனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமையன்று முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக முர்ஸியை எதிர்க்கும் தரப்பினர் கூறுகின்றனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire