இடதுசாரி செயற்பாட்டாளரும் காந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளராகவும் அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர் காந்தியம் அமைப்பின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக் களகம் – (PLOTE) அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான இவர் குமரன் என கழகத் தோழர்களால் அறியப்பட்டு இருந்தார்.
தமிழீமிழ மக்கள் விடுதலைக் கழகம் ஆயிரம் ஆயிரமாக உறுப்பினர்களை உள்வாங்கிய அக்காலப் பகுதியில் தளநிர்வாகப் பொறுப்பும் குமரனிடம் வழங்கப்பட்டு இருந்தது. யாழ் மாதகல் பகுதியைச் சேர்ந்த இவர் தளத்தில் இருந்து பின் தளமான இந்தியாவுக்கு உறுப்பினர்களை அனுப்புவதற்கும் பொறுப்பாக இருந்தவர். அதனால் ஓட்டி குமரன் என்றும் அறியப்பட்டவர்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டு உறுப்பினர்கள் வெளியேறிய போது குமரன் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவர் தனது பிற்காலங்களிலும் எந்தவொரு அரசியல் இயக்கத்திலும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை.
ஆயினும் பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்த பின்னர் அவரிடம் இருந்த விடுதலையுணர்வு அவரை தொடர்ந்தும் ஒரு அரசியல் செயல்பாட்டாளராக வைத்திருந்தது. அரசியல் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்த குமரன் தமிழ் மக்களின் விடுதலைக்கு தமிழ் மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தி வந்தார். அரசியல் ரீதியாக முரண்பட்டவர்களையும் ஒரே தளத்திற்கு கொண்டு வந்து ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் தன சக செயற்பாட்டாளர்களுக்கு வலியுறுத்தி இருந்தார்.
குமரன் தனது கடந்த கால அரசியல் செயற்பாடுகள் பற்றிய பதிவுகளையும் முழுமையாக எழுதி முடித்துள்ளார். அவற்றை ஒரு நூலாகக் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல் அவரிடம் இருந்தது. அதற்கு முன்னதாகவே அவர் இயற்கை எய்தியுள்ளார். அவருடைய பதிவுகளை அவருடன் இறுதிக்காலங்களில் செயற்பட்ட தோழர்கள் நூலுருவாக்குவாக்க உள்ளனர்.
குமரனுடைய இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தொடர்புகளுக்கு - 0033611486574
Aucun commentaire:
Enregistrer un commentaire