யாழ் தேவி’ ரயில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 29 ரயில் நிலையங்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிர்மாணிக் கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.யுத்தத்தினால் அழிவடைந்த வடபகுதி ரயில் பாதைகள் இந்திய இர்கொன் கம்பனியினூடாக மீளமைக்கப்பட்டு வருகிறது. கொழும்பில் இருந்து வவுனியா வரையே இடம்பெற்ற யாழ் தேவி ரயில் சேவை தற்பொழுது ஓமந்தை வரையே இடம்பெறுகிறது.
நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அடுத்த வருட முடிவுக்குள் யாழ்ப்பாணம் வரை யாழ் தேவி ரயில் பயணம் செய்ய உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது. மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதையும் துரிதமாக அமைக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது புளியங்குளம், மாங்குளம், முறிகண்டி, முறிகண்டி கோயில், நாவற்குளி, பரந்தன், ஆனையிறவு, பளை, எழுதுமட்டுவாள், மிருசுவில், கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொக்காவில், கோண்டாவில், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, காங்கேசன்துறை அடங்கலான ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
Aucun commentaire:
Enregistrer un commentaire