mardi 9 juillet 2013

இந்தியா, சிறிலங்கா, மாலைதீவு பங்கேற்ற மாநாட்டில் முத்தரப்பு உடன்பாடு


இந்தியா, சிறிலங்கா, மாலைதீவு ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான இரண்டாவது மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

சிறிலங்கா தரப்புக்கு பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவும், இந்தியத்தரப்புக்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும், மாலைதீவு தரப்புக்கு, பாதுகாப்பு அமைச்சர் மொகமட் நசீமும் தலைமை தாங்கினர்.






இந்த மாநாட்டில் குறிப்பாக கடல்சார் ஒத்துழைப்புத் தொடர்பான பேச்சுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்வது தொடர்பாக எட்டப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து இது தொடர்பான முத்தரப்பு உடன்பாடும் கைழுத்திடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியத் தூதுவர் ஜஸ்வந்த் குமார் சின்ஹா, மாலைத்தீவு தூதுவர் ஹுசேன் சிகாப், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு செயலகத்தின் இணைச்செயலர் சௌரப் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன், புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம், பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச்செயலர் ஹெற்றியாராச்சி, கூட்டுப்படைகளின் தளபதி, தேசிய புலனாய்வுச் சேவையின் தலைவர், இராணுவ, கடற்படைத் தளபதிகள், கடலோரக் காவல்படையின் பணிப்பாளர், ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்

Aucun commentaire:

Enregistrer un commentaire