vendredi 20 septembre 2013

கோடீஸ்வரர் விக்னேஸ்வரன் முதலமைச்சராக வந்தால் என்ன என்ன எல்லாம் செய்வார் துண்டுப் பிரசுரங்கள் வடமாகாணம் எங்கும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் கோடீஸ்வரர் விக்னேஸ்வரன் முதலமைச்சராக வந்தால் என்ன என்ன எல்லாம் செய்வார் என்ற பட்டியலிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் வடமாகாணம் எங்கும் கட்டுக்கட்டாக விநியோகித்துள்ளனர் பொதுமக்கள்.

வாழ்நாளை நீங்களே கணக்கிட!

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அந்த மனிதனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது இதனை பயன்படுத்தி நீங்களும் உங்களுடைய ஆயுள் காலத்தை கணக்கிட்டுக் கொள்ளலாம் இதனை நீங்களும் கணக்கிட்டுக் கொள்ள.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60×24=1440)}
ஒரு மனிதனின் ஆயுளை கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.
ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விட்டால் 100 ஆண்டுகள் வாழலாம்.
ஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விட்டால் 93ஆண்டுகள் வாழலாம்.
ஒரு நிமிடத்திற்கு 17 முறை மூச்சு விட்டால் 87 ஆண்டுகள் வாழலாம்.
ஒரு நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விட்டால் 80 ஆண்டுகள் வாழலாம்.
ஒரு நிமிடத்திற்கு 19 முறை மூச்சு விட்டால் 73 ஆண்டுகள் வாழலாம்.
ஒரு நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விட்டால் 66 ஆண்டுகள் வாழலாம்.
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாமது ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

கிளிநொச்சி கிளாலி மீனவ துறைமுகம் கடற்றொழிலாளர்கிளிடம் கையளிப்பு.

kilazhiகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிளாலி மீனவத்துறைமுகம் 1997 ஆண்டு முதல் கடற்படையினரின் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் இன்று முதல்(18) தொழில் நடவடிக்கைகளுக்காக கடற்றொழிலாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 04 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதிதலைவருமான முருகேசு சந்திரகுமார் மற்றும் வட பிராந்திய கடற்படைத்தளபதி றியல் அட்மிரல் சரத் திஸ்ஸநாயக்க ஆகியோர் நாடாவினை வெற்றி கிளாலி கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்காக கையளித்துனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பச்சிலைப்பள்ளி கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச செயலாளர் நீக்கலம்பிள்ளை மர்சலின் அவர்கள்;;;:
கிளாலியில் நாங்கள் மீள்குடியேறியதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களிடம் கிளாலி மீனவ துறைமுகத்தினை மீண்டும் கடற்டிhபழிலாளர்களின் பயன்பாட்டிற்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தோம் அதனடிப்படையில் அவர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இன்று கடற்றொழிலாளர்களின் தொழி;ல் நடவடிக்கைகளுக்காக துறைமுகம் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் கிளாலி கடற்றொழிலாளர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்துச்சென்று அங்கு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களை சந்திக்கவைத்து எங்களின் நிலைமையினை எடுத்துரைத்ததோடு அமைச்சர் அவர்களை கிளாலிக்கு அழைத்து வந்து துறைமுகத்தினை நேரில் பார்வையிட வைத்தது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்றைய தினம் எங்களின் தொழில் நடவடிக்கைகளுக்காக பெற்றுத்தந்துள்ளார்.இதற்காக பளைபிரதேச கடற்றொழிலாளர்கள் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
மேலும் அன்மையில் விக்கினேஸ்வரன் ஜயா பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணக்க அரசியல் மூலம் ஒரு துண்டு நிலத்தை கூட பெற முடியாது என்று ஆனால் இன்று அமைச்சர் அவர்களின் இணக்க அரசியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் நீண்ட காலமாக இருந்து வந்த கிளாலி கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார் இவ்வாறே கிளாலியில் மக்களை மீள்குடியேற்றியது முதல் பாடசாலை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பளை பிரதேச செயலர் சத்தியசீலன்,கிளாலி கிராம அலுவலர் பிரபாகரன்,கிளாலி கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் சிவராஜா பளை கட்றறொழிலாளர் சங்கங்களின் தலைவர் தேசிங்கராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

யுத்தம் முடிந்து இப்பொழுதுதான் வட மாகாண மக்கள் கொஞ்சம் நிம்மதியான காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.வட மாகாண மக்களை வாழ விடுங்கள்;-எஸ்.ஹமீத்

பாவப்பட்டதும் பரிதாபத்திற்கும் உரிய ஒரு மாகாணம் இலங்கையில் இருக்குமென்றால் அது வட மாகாணத்தைத் தவிர வேறொரு மாகாணமாக இருக்க முடியாது. 30 வருடங்களுக்கு மேலாக யுத்தப் பேய் கடித்துக் குதறி சப்பித் துப்பிய மாகாணம் அது; இரத்த வாடை இன்னமும் வீசிக் கொண்டிருக்கும்- இழப்புகளின் ஓலம் இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கும்-மாகாணம் அது; அந்தகாரங்களுக்குச் சொந்தக்காரர்களாகிப் போன அபலைகளைக் கொண்டிருக்கும் மாகாணம் அது; அவயவங்களை இழந்து ஆறாத் துயரில் மூழ்கியிருக்கும் அப்பாவிகளைக் கொண்டிருக்கும் மாகாணம் அது. சொந்த ஊர்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் யுத்தத்தின் கோரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தாமாகவே வெளியேறிய தமிழ் மக்களையும் கொண்ட மாகாணம் அது!
இந்த மாகாணத்துக்குத்தான் இப்பொழுது சரித்திரத்தில் முதன் முறையாகத் தனியான தேர்தல் நடைபெறப் போகிறது. இந்தத் தேர்தல் இம் மாகாண மக்களைப் பொருத்தவரை அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பதில் எந்தவித சந்தேகங்களும் இல்லை.
சுயாட்சி என்றும் சுய நிர்ணயம் என்றும் உரிமைப் போராட்டம் என்றும் அதற்காக உயிர் கொடுப்போமென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் மேடைகளிலே உரத்துப் பேசி மக்களை உசுப்பேத்தி இருக்கிறார்கள். இதுவரை காலமும் காவு கொடுத்த அப்பாவி மக்களின் உயிர்கள் போதாதென்று இன்னமும் மரண தேவனுக்குத் தமது மக்களின் உயிர்களை அள்ளிக் கொடுக்கும் ஆவேசப் பேச்சுக்களை அரங்கேற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கென்ன..பதவிகளும் பஞ்சணைகளும் படாடோப வாழ்க்கை முறைகளும் பவிசான பயணங்களும் பாதுகாப்பும் இருக்கின்றன. இந்தத் தேர்தலில் மக்களை அடகு வைத்துஇ அதன் மூலம் இந்த அரசியல்வாதிகள் தமதும் தமது குடும்பத்தினரதும் சுகபோகங்களை மேலும்  உறுதிபடுத்திக் கொள்வார்கள். ஆனால் பாதிப்புக்குள்ளாகப் போவது என்னவோ பாமர மக்கள்தான்!
யுத்தம் முடிந்து இப்பொழுதுதான் வட மாகாண மக்கள் கொஞ்சம் நிம்மதியான காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன; தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. புனர் வாழ்க்கைக்கும் புது வாழ்க்கைக்கும் அத்திவாரங்கள் இடப்பட்டுள்ளன. கதியற்று எங்கெங்கோ இடம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள் மீளக் குடியேற ஆரம்பித்துள்ளார்கள். யுத்தத்திற்குப் பலிக்கடாவாக்கப்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் சராணகதியின் பின்னர் விடுதலை பெற்று தமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் மீண்டும் இரத்தக் களரியை ஏற்படுத்துமாப்போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசுவதும் செயற்படுவதும் மிகக் கேவலமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.
தாம் பதவிக்கு வர என்ன திருகு தாளங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யும் என்பது கடந்த காலங்களைப் பின்னோக்கிப் பார்த்தால் தெரியும். தமது பதவிகளைத் தக்க வைப்பதற்காக இவர்கள் அப்பாவிகளான ஜனங்களை கொடூர சாவுக்கும் இரை கொடுக்கத் தயங்காதவர்கள் என்பதையும் வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். அந்தக் குணங்களோடுதான் அவர்கள் இந்தத் தேர்தலிலும் செயற்பட்டு வருகிறார்கள்.
மூன்று தசாப்த யுத்த சூறாவளியில் எல்லாவற்றையும் இழந்து போன வட மாகாண மக்களை இனியாவது நிம்மதியாக வாழ விட்டுத் தமது சுயநல மூட்டைகளைக் கட்டிக் கொண்டு ஒதுங்கிக் கொள்வதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம் மக்களுக்குச் செய்யும் பேருதவியாகவும் பெரும் உபகாரமாகவும் இருக்கும்.
அரசின் மீதான எதிர்ப்புக் கோஷம் என்பதுஇ வட மாகாண மக்களை இன்னும் அதல பாதாளத்தில் தள்ளி விடுமென்பதுதான் யதார்த்தம். மிகப் பலம் வாய்ந்த படைகளையும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு யுத்தம் செய்து தமது மக்களின் 'விடுதலை'யை வென்றெடுக்க முடியாதவர்கள் வெறும் வெற்றுக் கோஷங்களின் மூலம் வென்றெடுக்க நினைப்பது வேடிக்கையிலும் வேடிக்கையாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய சூழலில் மக்களுக்குத் தேவை உணவு, உடை, உறையுள் என்பவற்றோடு அச்சமற்ற நிம்மதியான வாழ்க்கையே தவிர போராட்டங்களோ-யுத்தங்களோ அல்ல. கடந்த கால யுத்தத்தினால் மக்கள் மிகவும் களைத்துச் சோர்ந்து சுருண்டு போயுள்ளார்கள். தயவு செய்து அம் மக்களை வாழவிடுங்கள்!
இதுகாலவரை இம் மக்களின் துயர் துடைக்கப் பெரிய அளவில் திட்டங்கள் தீட்டிச் செயற்படாத சர்வதேசம் இனிமேலும் அவ்வாறுதான் நடந்து கொள்ளும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சர்வதேசம் என்னும் மாயையைக் காட்டி மக்களின் மதியை மயக்காதீர்கள்.
எதிர்ப்பு அரசியல் நடாத்தும் அளவுக்கு இன்றைய சூழலில் வட மாகாண தமிழ் முஸ்லிம் மக்களிடத்தே தெம்பும் இல்லை; அதற்கான மனோ நிலைமையிலும் அவர்கள் இல்லை என்ற யதார்த்தத்தை உணருங்கள்.அந்த உணர்வின் மூலம் இணக்க அரசியலுக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து செயற்படுத்துங்கள்.
தேர்தலில் வெல்ல வேண்டுமென்ற வெறித்தனத்தினால் இனங்களிடையே குரோதங்களை விதைக்காதீர்கள். சகல சமூகங்களும் இணைந்து ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் வாழும் வழி வகைகளைக் கண்டறிந்து செயற்படுங்கள்.
இதுவே இன்றைய சூழலில் அவசியமானதும் அவசரமானதுமாகும்!

dimanche 15 septembre 2013

செஞ்சோலை சிறுவர் இல்லத்துக்கு ராஜபக்ஷே விஜயம்!

இலங்கை கிளிநொச்சியில் முன்பு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டு வந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்துக்கு இன்று மதியம் விஜயம் செய்தார் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே.
முன்பு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டு வந்த செஞ்சோலை சிறுவர் இல்லம், தற்போது அதே இடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனால் நடத்தப்பட்டு வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இங்கு வைத்து பராமரிக்கப்படுகிறார்கள்.
இன்று கிளிநொச்சிக்கு ரயில் சேவை விடப்பட்டதையடுத்து அங்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே, செஞ்சோலை சிறுவர் இல்லத்துக்கும் விஜயம் செய்தார். அவரை செஞ்சோலை இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளும், இல்லத்தை நடத்தும் கே.பி.யும் வரவேற்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் முன்பு யுத்தத்தில் வெற்றிகளை பெற்ற தாக்குதல்கள் நடந்தபோது, அந்த இயக்கத்துக்கான ஆயுதங்களை அனுப்பி வைத்தவர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் (செல்வராசா பத்மநாதன்). இலங்கை வடபகுதியில் உள்ள ஆனையிறவு ராணுவ முகாமை விடுதலைப்புலிகள் கைப்பற்றியபின், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், “இந்த வெற்றிக்கு முக்கிய காரணமே, கே.பி. அனுப்பி வைத்த ஆயுதங்கள்தான்” என்று விடுதலைப்புலிகள் தளபதிகள் மத்தியில் பேசினார்.
இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே, கே.பி.யால் நடத்தப்படும் செஞ்சோலை சிறுவர் இல்லத்துக்கு விஜயம் செய்திருக்கிறார். கே.பி.யையும் சந்தித்திருக்கிறார்.
இது தொடர்பாக தமிழ் மீடியாக்களில் காரசாரமாக கருத்துக்கள் எழுதப்படும். ஆனால், செஞ்சோலை இல்லத்தில் உள்ள, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் குழந்தைகளுக்கு, ஏதாவது நல்லது நடந்தாலும் நடக்கலாம். எழுதுங்க சார் எழுதுங்க.. எழுதுவதற்கு முன் அந்தக் குழந்தைகளுக்கு ஒரு பென்சிலாவது வாங்கி கொடுத்துவிட்டு எழுதுங்க..!

தமிழ் சிங்கள பிரச்சனை கணவன் மனைவி பிரச்சினையாம் – விக்னேஸ்வரன்

கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன்தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை சுயலாபத்திற்காக பனய்படுத்திக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாhகணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவே தமிழக அரசியல்வாதிகள் முனைப்பு காட்டி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். பிரபல இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
The photo of Sampanthan and Ranil holding the Lion flag highlighted in the Colombo media [Photo courtesy: Daily Mirror]எங்களது பிரச்சினைகளை தமிழக அரசியல்வாதிகள் டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்தைப் போன்று பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தனி நாடே தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வு என சில தமிழக அரசியல்வாதிகள் குறிப்பிடுவதாகவும் இதனால் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகள் அச்சமடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் எங்களை நேரடியாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசியல்வாதிகளின் உணர்வுபூர்வமான கருத்துக்கள் இலங்கைத் தமிழர்களை மோசமாக பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பிரச்சினையில் அயல் வீட்டவர் நுழைய வேண்டிய அவசியமில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அயலவர்கள்(தமிழகம்) தலையீடு சேய்வது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் விவகாரத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் முரண்பட்டுக் கொள்ளும் தாம் மறுநாள் இணைந்து செறய்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகம் இலங்கைத் தமிழர்கள் மீது காட்டி வரும் அனுதாபம் வரவேற்கப்பட வேண்டிய அதேவேளை, தீர்வுத் திட்டம் என்பது உள்நாட்டு ரீதியில் எட்டப்பட வேண்டியதொன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.                                                                                          

இது எப்படியிருக்கு? தமிழீழ மாணவர் படை விடும் எச்சரிக்கை…                           முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் ஐயா விக்னேஸ்வரன் அவர்களே உங்கள் வயதிற்கும், உங்கள் அனுபவத்திற்க்குமே நாங்கள் மரியாதை செலுத்துகின்றோம்.

தமிழக உறவுகள் எப்போதும் ஈழத்தமிழர்களின் தொப்பிள் கொடி உறவுகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்களவர்கள் உங்கள் குடும்பத்திற்கு கணவன், மனைவி உறவாக இருக்கலாம் அது தப்பில்லை ஆனால் இந்த சிங்களவர்களின் கணவன், மனைவி உறவு உங்கள் குடும்பத்துடன் மட்டுமே தவிர ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களுடன் அல்ல…
ஏற்கனவே நீங்கள் முன்பு ஒரு முறை தமிழீழ தேசிய தலைவரை பயங்கரவாதி என்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத போராட்டம் என்றும் சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இன்றும் ஆறாத வடுவாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள் ஐயா.
சிங்கள, இந்திய ஊடகங்களுக்கு ஒரு கருத்தும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு கருத்தும் எப்போதும் தெரிவித்து கொண்டே இருக்கிறிர்களே…
உங்கள் நோக்கம் தான் என்ன…?
அன்றைய இளம் தலைமுறை பிள்ளைகளால் சுடப்பட்டவர் யார் என்று உங்களுக்கு நல்லா தெரியும்…
தமிழின துரோகி துரையப்பா…
இன்றைய தலை முறை பிள்ளைகளை ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளி அவர்களின் பசிக்கு துரோகி என்ற பட்டத்துடன் நீங்கள் இரையாக வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றோம்…
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
தமிழீழ மாணவர் படை

மனம் திறந்தார் கோத்தாபய! புலிகளின் ஆயுதக் களஞ்சியங்களை அழிக்க அமெரிக்காவே உதவியது

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களை ஆழ்கடல் பகுதியில் வைத்து 2006 இற்கும் 2008 இற்கும் இடையிலானகால கட்டத்தில் அழித்தொழிக்க அமெரிக்க அதன் பூரண ஆதரவை வழங்கியிருந்தது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.கடற்புலிகளின் ஆயுதவிநியோகக் கப்பல்களை இலங்கை கடற்படையால் மூழ்கடிக்க முடிந்தபோது இந்த யுத்தத்தில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

2006 இற்கும் 2008 இற்குமிடையில் புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களில் நாம் 12 ஐ அழித்தோம் இது எவ்வாறு சாத்தியமானது? அமெரிக்கர்கள் மிகமிக உதவியாக இருந்தனர். புலிகளின் ஆயுத கப்பல்கள் இருந்த இடங்களை அமெரிக்கா எமக்கு காட்டித்தந்தனர் என பாதுகாப்பு அமைச்சர் செயலாளர் அவுஸ்ரேலிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களில் பெரும்பாலானவை திறந்த சந்தையில் வாங்கப்பட்டவை 
என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் புலிகளால் வாங்கப்பட்ட ஆயுதங்களில் பீரங்கிகளில் அநேகமானவை வடகொரியா மூலத்தை கொண்துடன் அவர்களிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் இருந்தன இவை இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள போதுமானவையாக இருந்ததைவிட கூடுதலானவையாக இருந்தன.

அது மட்டுமல்ல புலிகளிடமிருந்த பீரங்கிகள் எமக்கு அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்தியது உண்மை இலங்கையில் போரிட அமெரிக்கர்கள் முன்னர் தடுமாறும் போக்கை கொண்டிருந்தாலும் அவர்கள் புலிகளை நியாயப்படுத்தவுமில்லை, இலங்கை படைகளுக்கு ஆயுதங்களை வழங்கவுமில்லை.

இருப்பினும் அமெரிக்காவுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்தும் இலங்கையால் ஆயுதங்களை வாங்க முடிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரபாகரன் தன்னை கொல்லப்போவதாக நினைத்தே ராஜீவ் கொலைக்கு உத்தரவிட்டார்'- குமரன் பத்மநாதன்

KumaranPathmanathan1""தன்னைக் கொல்ல இந்தியா முயல்வதாகக் கருதியதால்தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு உத்தரவிட்டார்'' என்று அந்த அமைப்பின் சர்வதேசப் பிரிவுத் தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவின் தலைவராக இருந்தவர் குமரன் பத்மநாதன். "கே.பி' என்று அழைக்கப்படும் இவரை, போர் முடிந்த மூன்றாவது மாதத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
வெள்ளிக்கிழமை "தி ஆஸ்திரேலியன்' பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கும்போது, ""இந்தியா தன்னைக் கொல்ல முயல்வதாக பிரபாகரன் கருதினார். எனவே, அதற்கு முன்னதாகவே ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு மனிதர்களை வெடிகுண்டாகப் பயன்படுத்தும் யோசனை பிரபாகரன் மூளையில் உதித்ததுதான். 1980-களில், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய காமிகழ் தற்கொலைத் தாக்குதலைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, பிரபாகரன் மனித வெடிகுண்டுகளைப் பயன்படுத்தலாம் என்று யோசனை கூறினார். அதுமட்டுமில்லாமல், பொதுநோக்கத்துக்காக தமிழ்நாட்டில் தீக்குளிப்பது என்பது வழக்கமான ஒன்றுதான்'' என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் உதவி:
இதனிடையே, இலங்கை இறுதிப் போரின்போது, அமெரிக்காவின் கப்பற்படை தங்களுக்கு முக்கிய உளவுத் தகவல்களை வழங்கி உதவியதாக "தி ஆஸ்திரேலியன்' பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபட்ச கூறியுள்ளார்.
""2006 முதல் 2008 வரை, ஆயுதங்களை ஏற்றி வந்த விடுதலைப் புலிகளின் 12 கப்பல்களைப் பற்றிய முக்கிய தகவல்களை தனது செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைக் கொண்டு அமெரிக்கா வழங்கியதால், அவற்றைத் தாக்கி அழிக்க முடிந்தது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிற்கு இன்றுவரை வடக்கு கிழக்கில் உத்தியோக பூர்வமான அலுவலகமும் கிடையாது. ஆளுக்காள் தங்களது வியாபாரங்களை தொடர்வதற்க்காக கடைகள் பரப்பி இருக்கிறார்கள்; – சாந்தன்

TNA Cartoonவடமாகாண சபை தேர்தல் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்த அரசாங்கம் என்ன செய்தது அல்லது என்ன செய்யும் என்பது பற்றியதல்ல. மாறாக TNA யினர் என்ன செய்கின்றனர்?  நடை முறையில் என்ன செய்யப்போகின்றனர் என்பது பற்றியதே!
 ஒளிவு மறைவு இன்றி இந்த அரசாங்கம் அதிகார பரவலாக்கம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்திருக்கின்றது.  சுருக்கமாக சொல்வதானால்; அதிகாரப்பரவலாக்கம் பிரிவினைக்கு இட்டு செல்லும் என்றும் நாட்டை பிளவு படுத்த விடமாட்டோம் என்பதுமே ஆட்சியாளர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
அரசாங்கம் TNA இனருடன் பல சுற்றுக்கள் பேசியிருக்கின்றது எனவே சாதாரண பொதுஅறிவுள்ள அனைவருக்குமே தெரிந்த இந்த விடயம் TNA இனருக்கும் நன்றாகவே தெரியும்.
அரசின் இந்த நிலைப்பாட்டை நிர்ணயிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது விமல் வீரவன்சா, சம்பிக்க, பொது பல சேனா போன்ற சக்திகளின் அடிப்படைவாதமே என்பதுவும் தெரிகின்றது.
அரசாங்கத்தின்   தீர்வு தொடர்பான போக்கு அரசில் அங்கம் வகிக்கும் LSSP, CP, வாசுதேவா, EPDP மற்றும் ராஜித போன்றவர்களுக்குமே திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை என்பதை வெளிப்படையாகவும் தொடர்ச்சியாகவும் தெரிவித்து வந்திருக்கின்றனர்.
பெரும்பாலான தமிழ் மக்களுக்கும் அரசின் அதிகார பரவலாக்கம் தொடர்பான தற்போதைய நிலைப்பாடு திருப்தியாக இல்லை.  இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான நியாயமாக சிந்திக்கும் சிங்கள முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களுக்கு கௌரவமான தீர்வு ஒன்று வேண்டும் என்றே கருதுகிறார்கள்.
மொத்தத்தில் அரசியல் தீர்வு தொடர்பாக காத்‌திரமான நகர்வுகளை  இன்றைய UPFA அரசு துணிவுடன் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தமிழ் வாக்காளர்களுக்கு இல்லை என்பதும் உண்மையே.
அதே நேரம் தமிழ் மக்களை பொறுத்த வரையில் தங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான TNA யினர் இது தொடர்பாக என்ன செய்தார்கள், செய்கின்றார்கள் என்பதே இன்றுள்ள முதன்மையான கேள்வியாகும்.
கடந்த தேர்தல்களில்  பெரும்பான்மையாக தெரிவு செய்யப்பட்ட  TNA யினர் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து தமிழ் மக்களை   கௌரவாமான தீர்வை நோக்கி சமயோசிதமாக முன்நகர்த்தவேண்டும்  என்ற எதிர்பார்ப்பு பலருக்கு  இருந்தது. ஆனால் TNA யினரின் கதைகளும் போக்குகளும் அப்படி எந்த வித நம்பிக்கையையும் தருவதாக இல்லை.
உயர் நீதிபதி விக்னேஸ்வரனின் வருகை
உயர் நீதிபதி விக்னேஸ்வரன் இந்த சிக்கலான ஆடு களத்திற்க்குள் சம்பந்தரால் கொண்டுவரப்பட்டபோது  மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தது, இன்னும் இருக்கின்றது .  “புதிய துடைப்பம் நன்றாக கூட்டும்” என்பார்களே அது போல. நீதிபதியாக இருந்தவர், சட்டவல்லுனர், சிங்கள மக்களுக்கு நிதானமாக தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை சொல்ல கூடியவர், ஊழலற்ற நேர்மையான நடைமுறைகளை பின்பற்றுவார் என்று நம்பினார்கள், நம்புகிறார்கள்.
இன்று தமிழ் அரசியல் அரங்கில் இருக்கும் TNA தலைவர்கள் தங்களது இயலாமையை, ஊழல்களை, அங்கிடுதத்தி தனங்களை மறைக்கவவே “தமிழ் வீர” காட்டு கூச்சல் போடுகிறார்கள் என்பது பொது அறிவுள்ளவர்களுக்கு தெரியும்.
ஆனால் உயர் நீதி அரசரின் தேர்தல் பிரச்சார சாகச பேச்சுக்களும், வெளியிடப்பட்டிருக்கும்  விஞாபனத்தையும் பார்த்தால்  இவரும் இந்த சித்திரக்குள்ளர்களுடன் சேர்ந்து தமிழ் மக்களின் கண்களை கட்‌டி, “எவடம் எவடம்  புளியடி புளியடி”  என்ற விளையாட்டை மீண்டும் தொடங்க போகிறார்கள் போல் தெரிகின்றது.
தமிழ், சிங்கள அடிப்படைவாத அரசியல்:
ஒருகணம் நீங்கள் சாதாரண இனவாதமில்லாத சிங்கள பொது மகனாக இருப்பதாக நினைத்துக்கொண்டு சம்பந்தன் சுரேஷ் போன்றவர்களின் வெட்டி  வீராப்பு கதைகளை கேட்டு பார்ப்பதாக நினையுங்கள்; எங்களுக்கு பொது பல சேனா போன்ற அடிப்படைவாதிகளின் கதைகளை கேட்கும் போது தோன்றும் அதே உணர்வுதானே அவர்களுக்கும் ஏற்படும்.
ஸ்ரீ லங்கா அரசியலை பொறுத்த வரையில் பொது பல சேனாவின் இனவாத அரசியலும்  TNA இனரின் பிரிவினை கோஷமும்  ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும். பொது பல சேனா போன்ற அடிப்படைவாதிகளால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்க முடியாது என்று தமிழர்கள் எவ்வாறு நம்புகிறார்களோ அதே போல் தான் சிங்கள மக்களும் TNA யினரின் வெட்டி வீராப்பு கதைகள் நாட்டை பிரிப்பதற்க்கும் அதனை தொடர்ந்து அந்நிய சக்திகளுடன் இணைந்து சிங்கள மக்கள் ஆக்கிரமிக்கப்படுத்தலுக்குமே வழி கோலும் என்று நம்புவதில் என்ன தவறு இருக்கின்றது?
இரு தரப்பிலும் உள்ள இவர்கள்; அடிப்படை வாதத்தை பூஜித்து,  போசித்து வருகின்றார்கள் . ஒன்றில்லாமல் மற்றது உயிர் வாழ முடியாது என்பதே உண்மை. உண்மையிலேயே நாட்டில் சுமூகமான நிலை தோன்ற வேண்டும் என்றால் சிங்கள தமிழ் அடிப்படை வாத போக்குகள் இரண்டுமே அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்படல் வேண்டும். இதுவே இன்று ஸ்ரீ லங்கா மக்களுக்கான முதன்மையானதும் முக்கிய மானதுமான அரசியற் கடமையாகும்.
 இந்த பின்னணியில் தான் TNA இனரின் கோசங்களும் அணுகுமுறைகளும் பொது அறிவுள்ளவர்களினால் நிதானமாகவும் நுணுக்கமாகவும் பரிசீலிக்கப்படல் வேண்டும். தமிழ் பேசும் மக்களை  பொறுத்தவரையில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம்  வாய்ந்த தேர்தலாகும்.
தமிழ் அடிப்படை வாத அரசியல் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு இழைத்த சொல்லொணா துன்ப துயரங்கள் இன்னும் தொடரத்தான் வேண்டுமா என்பதை தீர்மானிக்கப்போகும் தேர்தல் இது.
மாவை சேனாதிராசா  போன்ற அப்பாவி தேசியவாதிகளை ஒரங்கட்டி தமிழ் அடிப்படை வாத அரசியலை முன்னோக்கி நகர்த்த்துவதன் மூலம் தொடர்ந்தும்  அரசியல் பிழைப்பு நடத்த முயலும் சுரேஷ்,  ஸ்ரீதரன் போன்றவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வாக்காளர்களுக்கு கிடைத்திருக்கும் பொன்னான சந்தர்ப்பம் இதுவாகும்.
ஆகவே அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். சிந்திக்கும் மக்கள் நூறு சத விகிதம் வாக்களிப்பு நடைபெற ஊக்குவிக்க வேண்டும்.
வட மாகாண தமிழ் வாக்காளர்கள் முன்னாலுள்ள தெரிவுகள் என்ன?
    இருபதுக்கு மேற்பட்ட குழுக்கள் போட்‌டி இடுகின்றன என்று சொல்லப்பட்டாலும் முக்கியமாக ஐக்கிய சுதந்திர முன்னணியும்(UPFA) தமிழ் தேசிய கூட்டமைப்புமே (TNA) பிரதானமான போட்டியாளர்களாகும்.
    ஐக்கிய தேசியக்கட்சிக்கு (UNP) யாழ் வர்த்தக சமூகத்தினரிடம் உள்ள ஆதரவு, ஊர்க்காரன் மற்றும் முன்னைய வாக்களிக்கும் விதங்கள், போன்ற காரணிகளை வைத்து பார்க்கும் போது  யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைக்கலாம்.
    மிகுதி முப்பத்தைந்து ஆசனங்‌களும் TNA க்கும் UPFA க்கும் இடையே தான் பகிர்ந்து கொள்ளப்படும்.  ஏனைய குழுக்களுக்கு அளிக்கும் வாக்குகள் வீணாகப்போகும் வாக்குகள் என்பதை மனங்கொள்ளல் வேண்டும்.
    எனவே இந்த தேர்தலில் TNA க்கு வாக்கு போடும் போது எதற்காக போடுகிறோம் UPFA க்கு வாக்கு போடும் போது என்ன செய்தியை சொல்ல விரும்புகிறோம்; என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அதன் விளைவுகளையும் புரிந்துகொண்டு நேர்மையாக வாக்களிக்க வேண்டும். இந்த அடிப்படையில் பின்வரும் விடயங்களை கவனத்தில் எடுக்கவும்.
 கூட்டமைப்பு பற்றிய  உண்மையான நிலை சுருக்கமாக:
     கூட்டமைப்பானது இன்று 13 பாராளுமன்ற உறுப்பினர்களையும், கிழக்கு மாகாணத்தில் 11 மாகாண சபை உறுப்பினர்களையும் உள்ளுர் ஆட்சி சபைகளில் 400 வரையிலான உறுப்பினர்களையும் கொண்டுள்ளது
    இவர்கள் அனைவரும் அரச சம்பளம், அரச பாதுகாப்பு சலுகைகள், சொகுசு வாகனங்கள், மானியங்கள் இலவச பிரயாணங்‌கள் போன்ற எல்லாவற்றையும் மக்களின் பெயரால் அனுபவித்து வருகிறார்கள்.
    இவ்வளவு பொறுப்புகளையும் இவர்களிடம் கொடுத்திருந்த போதும், தமிழ் மக்கள் அரசியற் பலமும் இழந்து வாழ்வாதார தேவைகளுக்கே நித்தமும்,  எதற்க்கும்,  எல்லோரிடமும் யாசிக்கும் இன்றைய கேவலமான நிலைக்கு யார் காரணமானவர்கள் என்றால் அதற்க்கு பொறுப்பு கூற யாரும் இல்லை. இந்த முறை வாக்களித்த்தால் எல்லாம் தீர்க்கப்படும் என்பதே ஒவொரு தேர்தல்களிலும் இவர்களது ஒரே பதில்.
    இவ்வளவு பொறுப்புக்களையும் தமிழ் மக்கள் இவர்களை  நம்பி கொடுத்தும்  இவர்கள் தமிழ் மக்களுக்கு செய்தது என்ன? குறைந்த பட்சம் ஒரு நேர்த்தியான ஜனநாயக அமைப்பாகவாவது இருக்கிறார்களா? என்றால் இல்லை என்பதே உண்மையாகும்.
    இவர்களிடம்;  கூட்டமைப்பை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அமைப்பாக பதிவு செய்யும் பக்குவம் கூட இருக்கவில்லை. இது விடயத்தில் இவர்களுக்குள் நடந்த குத்துவெட்டுக்களும் குழிபறிப்புக்களும் ஊரறிந்தவிடயமே. தேர்தல் முடிவடைந்ததும்  மீண்டும் இந்த சுயநல குடுமி பிடி சண்டை தொடரும் என்பது பொது அறிவுள்ள அனைவருக்கும் தெரியும்.
    கூட்டமைப்பிற்கு இன்றுவரை வடக்கு கிழக்கில் உத்தியோக பூர்வமான அலுவலகமும் கிடையாது. ஆளுக்காள் தங்களது வியாபாரங்களை தொடர்வதற்க்காக கடைகள் பரப்பி இருக்கிறார்கள்.
    கூட்டமைப்பிற்கு உத்தியோக பூர்வமான பத்திரிகையோ,  இணையத் த்தளமோ, பேச்சாளரோ இன்று வரை இல்லை. இவர்களுக்கு வாக்களித்த நேர்மையான பெரும்பாலான வாக்காளர்களுக்கு எந்த ஒரு விடயத்திலும் இவர்களது நிலைப்பாடு என்ன என்பதும் தெரியாது.  ஏன்? நேர்மையாக ஊழலற்ற நிர்வாகம் நடத்த விரும்பும் TNA உள்ளூர் ஆட்சி உறுப்பினர்களுக்குமே தெரியுமா என்பதும் சந்தேகமே.
    மொத்தத்தில் TNA அரசியல் என்பது அடிப்படை வாத அரசியலை தொடர்ந்து தக்க வைத்து கொள்வதன் மூலம் தத்தமது பதவி சுகங்களை காப்பாற்றி கொள்வதென்பதே
UPFA க்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி ஓரிரு குறிப்புக்கள்:
    கூட்டமைப்பு தொடர்பாக தமிழ் சமூகம் தங்களது அதிருப்தியை பதிவு செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும்.
    தமிழ் மக்கள் இனவாத அடிப்படை வாத அரசியலை நிராகரிக்கிறார்கள் என்று உறுதியாக கூறுவதற்கான சந்தர்ப்பமும் இதுவாகும்
    கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் மூன்று வருடங்களுக்கு, அதாவது 2016 ம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க தான் போகிறார்கள். எனவே அவர்கள் உண்மையாகவே நிரந்தர அரசியல் தீர்வு நோக்கி முயற்சிகள் மேற்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் எடுக்கும்  முயற்சிக்களுக்கு இத்தேர்தல்  தோல்வி தடையாக இருக்காது.
    UPFA க்குள் இருக்கக்கூடிய அதிகார பரவலாக்கலுக்கு ஆதரவான CP, LSSP, EPDP போன்றவற்றின் கரங்களை பலப்படுத்துவதன் மூலம் அரசின் மீது அரசியல் தீர்வு தொடர்பான அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
முடிவாக தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டிய  விடயம் அடிப்படைவாத அரசியலை தொடர்வதா? இல்லையேல் இந்த மாகாண சபை தேர்தலில் ஒரே ஒரு மாற்றாக உள்ள அணியை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய அணுகுமுறையை ஆரம்பிப்பதா என்பதே.
முடிவு வாக்காளர்களின் கைகளிலேயே உள்ளது!

samedi 14 septembre 2013

ரொபேர்ட் தலைமையிலான 25 முன்னாள் புலி உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் அரசாங்கத்தில் இணைந்துகொண்டனர்.

ltte former cadres-1எல்.ரி.ரி.ஈயின் மன்னார் மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் ஏரம்பமூர்த்தி சிவானந்தராஜா (ரொபேர்ட்) தலைமையிலான 25 முன்னாள் புலி உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் அரசாங்கத்தில் இணைந்துகொண்டனர். ஐ.ம.சு.மு தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் பொது மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வின்போதே இவர்கள் அரசில் இணைந்துகொண்டனர். இதன்போது மாந்தை பிரதேச சபை உறுப்பினர் ரைபீர், மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அரபாத் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டதோடு, இவர்களை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பாலியல் வழக்கு - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை


குற்றவாளிகள்

குற்றவாளிகள் டில்லியில் கடந்த டிசம்பரில் மாணவி ஒருத்தி ஆறு பேரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி இவர்கள் நால்வரும் குற்றவாளிகள் என்று ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தார். அவர்களுக்கான தண்டனை ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்று அரச தரப்பு வழக்குரைஞர்கள் கோரியிருந்தனர். இருந்தும் தாம் இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று குற்றவாளிகள் வாதிட்டனர்.இந்த சம்பவம் இந்தியாவெங்கும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதுடன், பாலியல் வல்லுறுவுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவும் வழிவகுத்தது.
கடந்த வாரம், இதே குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட பதின்பருவ இளைஞர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சீர்திருத்த நிலையத்தில் கழிக்க தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட ஆறாவது நபர் மார்ச்சில் சிறையில் இறந்து கிடந்தார்.
இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், உயர் நீதிமன்றம் அந்த தண்டனையை உறுதி செய்த பிறகே அதை நிறைவேற்க முடியும். அதன் பின் உச்சநீதிமன்றத்தை அணுகவும், ஜனாதிபதிக்கு மேல் முறையீடு செய்யவும் குற்றவாளிகளுக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று கூட்டமைப்பைப் போல கொழும்பு -7இல் இருந்து கறுவாத் தோட்டத்தில் பிறந்த ஆளைக் கொண்டு வந்து எங்களிற்குத் தலைவர் என்று கூற முடியாது;நடராசா தமிழ் அழகன்

நடராசா தமிழ் அழகன்
லங்கா சமசமாஜக் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்
நேர்கண்டவர் : ஆர்.கே.மேனன்
கேள்வி: வெற்றிலைச்சின்னத்தில் பல கட்சிகள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. லங்கா சமசமாஜக் கட்சியின் இடதுசாரி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் நீங்கள் போட்டியிடுவதற்கான காரணங்கள் என்ன?
பதில்: இன்று வடமாகாணத்தில் இருமுனைத் தாக்குதல் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஒரு முனையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், மறுமுனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமாகும். மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் பலம்பொருந்திய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் வெற்றிலையில்தான் போட்டியிடுகின்றார்கள். அது ஏன் என்று அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், நாம் வெற்றிலையில் போட்டியிடக் காரணம் 1977ஆம் ஆண்டு எனது தந்தையார் லங்கா சமசமாஜக் கட்சியில் கோப்பாய்த் தொகுதியில் தொகுதி வாரியாகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைத் தட்டிக் கொண்டார்.
1978ஆம் ஆண்டு கிளம்பிய இளைஞர் தீவிரவாதப் போக்குகளால் லங்கா சமசமாஜக் கட்சி வடபகுதியில் இல்லாது போனது. 2009 யுத்தம் முடிந்த பின்பே மீண்டும் வரமுடிந்தது. இந்தப் போராட்டம் அர்த்தமற்றது. இதன் மூலம் எதையும் எமது இனம் பெற்றெடுக்க முடியாது என்பதில் எமது கட்சி அன்றும் இன்றும் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளது. நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவன். எமது சமூகத்தை மேன்மையுற வைப்பதற்கும் இத்தேர்தல் மூலம் அதிகாரங்களை வலுப்படுத்தவும் அரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது. இதை ஒவ்வொரு தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசை எதிர்த்து, குறிப்பாக மத்திய அரசை எதிர்த்து மாகாண சபையில் எதையும் சாதிக்க முடியாது. இதனால்தான் நாம் வெற்றிலையில் போட்டியிடுகின்றோம்.

கேள்வி: தமிழ்த் தேசியம் எனும் பெயரில் மக்களை உசுப்பேத்தி இனவாத சிங்கள குழுக்களை அரசியல் அழுத்தங்களிற்கு உட்படுத்தி, தமிழர்களிற்கு வரவிருக்கும் அதிகாரங்களைத் துண்டாடுகின்ற ஓர் அரிவரி அரசியல்தான் தற்போது அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது. இது தொடர்பாக உங்கள் கருத்து யாது? யாரை நீங்கள் ஆதரிக்கின்றீர்கள்?

பதில்: நடந்து முடிந்த அனுபவங்களையும், அழிவுகளையும் கருத்திற் கொண்டு எவர் மக்களின் எதிர்கால விடிவிற்காக முற்போக்கான சிந்தனைகளை மையமாக வைத்து சுயலாப அரசியலிற்கப்பால் தொழிற்படுகின்றார்களோ அவர்கள் எவராயிருப்பினும் நாம் ஆதரிக்கத் தயாராக உள்ளோம். குறிப்பாக, டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்து தமிழ் வடபகுதி மக்களிற்கு பாரிய அபிவிருத்திகளை செய்தமையை எவரும் மறுக்க முடியாது.
அரச நிதியாக இருப்பினும் வடபகுதி குறிப்பாக தமிழ் மக்களிற்கு இந்நிதி கௌரவ அமைச்சரவர்கள் இல்லாவிட்டால் என்றுமே கிடைத்திருக்காது. இவ்வாறான செயற்பாடுகளை எவர் செய்தாலும் நாம் அவர்களிற்கு தோள்கொடுக்கத் தயார். அடுத்து இது நாடாளுமன்றத் தேர்தலல்ல. வடமாகாண சபைத் தேர்தல். இதில் மக்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் இதன் மூலம் வடமாகாண சபை கூட்டமைப்பின் கையில் போகுமாக இருந்தால் எந்தப் பயனும் தமிழ் மக்களிற்குக் கிடைக்கப்போவதில்லை என்பதைத் தெளிவாக நான் சொல்ல விரும்புகின்றேன்.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இங்கு வாழும் மக்களிற்கான ஓர் தேர்தல் விஞ்ஞாபனமல்ல. அது ஓர் புலம்பெயர் தமிழர்களிற்கான விஞ்ஞாபனம். புலம் பெயர் தமிழர்களிடமிருந்து நிதிகளைப் பெறுவதற்கான விஞ்ஞாபனம். அவர்களிடமிருந்து நிதி பெற்று அபிவிருத்திகளை செய்வார்களாம். அதை எப்படி செய்வார்கள் என்பதை சற்று விள்ளமாகக் கூறினால் நன்றாக இருக்கும்.
நாம் தமிழர் தமிழர்களாலேயே ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் தமிழர். இந்த உயர்குடிகள் என கூறப்படும் இவர்களிடம் இந்த பொலிஸ் அதிகாரங்கள் போகும் பட்சத்தில் என்ன நடக்குமென எமக்குத் தெரியும். அவர்கள் கேட்கின்றவை எல்லாம் அவர்களுக்காகவே தவிர எமக்கல்ல.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது. இருவர் இருப்பினும் அவர்கள் வௌ;வேறு குலங்களில் இல்லை. ஓரே சமூகத்தவர்களே. இது தொடர்பாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
பதில்: எனது தந்தையார் கூறுவார் தமிழன் தமிழீழம் கேட்கின்றான், தமிழனை ஒடுக்குவதற்கு தற்போது நான் கூறுகின்றேன். தமிழ்க் கூட்டமைப்பு தனியரசு கோருகின்றது. தமிழரை ஒடுக்குவதற்கு சிங்களவனை ஆள்வதற்கல்ல, ஒடுக்கப்பட்ட மக்களை ஆள்வதற்குத்தான். இதை எமது வடபகுதி ஒடுக்கப்பட்ட மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 50 வீதத்திற்கு மேற்பட்டோர் ஒடுக்கப்பட்ட இனங்களே வடபகுதியில் உள்ளன. இவர்களின் வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி அரசியலில் அரங்கேறி இவர்களை ஒடுக்கித் துன்பப்படுத்ததும் நிலை கூட்டமைப்பினை அரங்கேற்றினால் நிச்சயம் நிகழும்.

கேள்வி: அப்படியால் உங்களுடைய மாகாண சபைத் தேர்தல் வெற்றி மக்களிற்கு குறிப்பாக, நீங்கள் நேசிக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்களிற்கு எதைப் பெற்றுத்தருமென நீங்கள் கருதுகின்றீர்கள்? இதுவரை நீங்கள் இவ் ஒடுக்கப்பட்ட மக்களிற்கு எதைச் செய்தீர்கள்?
பதில்: நாம் செய்ய வேண்டுமென்று நினைப்பது சமூக அபிவிருத்தியையே. பொருளாதார அபிவிருத்தியைப் பற்றி நான் கதைக்கவில்லை. சமூகம் அபிவிருத்தியடையும்போது இப்பொருளாதார அபிவிருத்தி சுயமாக வந்தடையும். தேசிய அரசுடன் இணைந்து போய்த்தான் எமது சமூக அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். இதுவரை நாம் நினைத்தவைபோல இவ் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாதிருந்தமைக்குக் காரணம் விடுதலைப் போராட்டமென்ற பெயரில் நாம் ஓரம் கட்டப்பட்டு இருந்தமையாகும்.
14 பிரதேச சபைகளை அன்று இக்கூட்டமைப்பு எடுத்து எதை சாதித்தது? அரசினால் ஒதுக்கப்பட்டு வந்த நிதிகள்கூட திரும்பிப் போயிருக்கின்றது. ஏனெனில், அந்தந்தக் கால கட்டங்களில் உரிய வேலைகளை இவர்கள் செய்யவில்லை. ஒருசில பிரதேச சபைகளைக் கூட இயக்க முடியாத கூட்டமைப்பு மாகாண சபையை எப்படி இயக்கப்போகின்றது. இவர்களிற்கு எந்தவித அனுபவங்களும் இல்லை. ஆனால், நாங்கள் அதிகாரங்களைப் பெற்றால் பலவற்றைச் சாதிக்க முடியும். ஏனெனில் நாம் அரசாங்கத்துள்தான் உள்ளோம். 13இல் குறிப்பிட்ட அத்தனை அதிகாரங்களையும் பெற்றுக் கொள்ள எம்மால் முடியும்.

கேள்வி: உங்களைத் தவிர உங்களது கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியிடம் இந்த மாகாண சபை அதிகாரங்கள் சென்றால் தமிழ் மக்களிற்கு ஓர் சாதகமான நிலை உருவாகுமென நீங்கள் நம்புகின்றீர்கள்?
பதில்: பொருத்தமான கேள்விதான். ஆனால், பொறுக்காத கேள்வியிது. மறைந்த மேஜர் துரையப்பாவிற்குப் பின் இன்று அதிக வேலை செய்தவர் எமது டக்ளஸ் தேவானந்தாவே. இதை எந்தத் தமிழ் மகனும் மறுக்க முடியாது. வெறுமனவே வெற்றுக் கோஷங்களால் வீரவசனம் பேசுவோர் மத்தியில் செயலுருவம் கொடுத்த ஒரேயொரு தமிழ் அரசியல்வாதியென்று இவரைத்தான் பார்க்க முடியும். இனிவரும் காலங்களிலும் மத்தியரசுடன் இணைந்து மாகாண சபையை நகர்த்த இவரால்தான் முடியும் என்பதைக் கூறிக்கொள்வதோடு தாழ்த்தப்பட்ட மக்ளிற்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
உங்களுடைய சமூகத்தில் இருந்து உங்களுடைய கிராமத்தில் இருந்து உங்களுடைய தலைவர்கள் இனிவரும் காலங்களில் வேட்பாளராக முன்வரவேண்டும். இன்று கூட்டமைப்பைப் போல கொழும்பு -7இல் இருந்து கறுவாத் தோட்டத்தில் பிறந்த ஆளைக் கொண்டு வந்து எங்களிற்குத் தலைவர் என்று கூற முடியாது. எமது சுய துக்கங்களில் கலந்து கொண்ட ஓர் தலைவர்கள் வேட்பாளர்களாக வேண்டும். விக்னேஸ்வரனின் மூன்றாவது சந்ததி தமிழ் சந்ததியல்ல. ஏனெனில் எனது சிங்களத் தோழரின் மகளைத்தான் அவரது மகன் கட்டியுள்ளார். கொழும்பில் பிறந்தவர் தமிழ் கதைப்பதே இவர்களின் குடும்பங்களில் குறைவு. ஆனால், இன்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளார் எங்கள் மண் எங்கள் உரிமையென்று. ஆகவே, ஒன்றை இறுதியாகக் கூறுகிறேன். மக்கள் எப்போது உணர்வூட்டல்கள், உசுப்பேத்தல்களிற்கப்பால் உங்கள் வாழ்வு, உங்கள் அபிவிருத்தி தொடர்பாக சிந்திக்கின்றீர்களோ அன்றுதான் சுயலாப அரசியல்களிற்கப்பால் சுதந்திர அரசியல் சிந்தனை உருப்பெறும்.

விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்தியது ஏன் ?விக்னேஸ்வரனின் ஒரு மகள் இந்த திருமணத்தின் மூலம் எனக்கு உறவுக்காரியாகிவிட்டார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விளக்கம்
Mahinda and medias30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் பூரண அமைதி நிலவும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் பெற்றுக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பை வடமாகாணத்து மக்கள் சரியாகப் பயன்படுத்தி தாங்கள் வாழும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொள்ளும் கடப்பாட்டினைக் கொண்டுள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும், தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.

வடமாகாணசபைத் தேர்தல் நடத்துவதை அரசு தனக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியாக கருதுகிறது. இந்தத் தேர்தலில் என்ன முடிவை மக்கள் எடுப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், அதை நான் உங்களுக்கு இப்போது சொல்லமாட்டேன். நான் அதனை இப்போது தெரிவித்தால் நீங்கள் அதைப்பற்றி எழுதி எனக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவீர்கள் என்று சிரித்துக் கொண்டே தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எனக்கு ஒரு விடயத்தை சரியாக கூற முடியும். கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட இந்த வடமாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கூடுதலான வாக்குகள் கிடைக்குமென்பதை தம்மால் உறுதியாக கூற முடியுமென்று சொன்னார்.

“ஆயுதப் போராட்டம் முடிவடைந்து விட்டது. அது உண்மை. ஆனால், எமது போராட்டம் ஆயுதப்போராட்டம் போன்று முடிவடைய முடியாது. எமது போராட்டம் ஒரு நீதியான போராட்டம். நீங்களும் உங்கள் பேரப்பிள்ளைகளும் இந்த மண்ணில் வாழ வேண்டுமென்றால் நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது. தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்க செயற்பாடுகளில் ஈடுபடும் போது நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டீர்கள் என நான் நம்புகிறேன்” என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வடபகுதியில் தேர்தல் கூட்டமொன்றில் பேசியிருப்பது குறித்து இந்த சந்திப்பின் போது ஒரு பத்திரிகை ஆசிரியர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், தேர்தல் பிரசாரங்களில் எவரும் எதையும் கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை அதிகரிப்பதற்கு எத்தனிப்பார்கள். அதைப்பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதுபோன்ற பாரதூரமான கருத்துக்களை தெரிவித்திருந்தால் அது தவறு. ஆனால், சம்பந்தன் போன்ற பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதி இவ்விதம் கருத்துக்களை தெரிவிப்பது தவறு என்றும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் இல்லையா? இளைப்பாறிய நீதியரசர்கள் இல்லையா? சட்டத்தரணிகள் இல்லையா? கல்விமான்கள் இல்லையா? அனுபவம் மிக்க அரசியல்வாதிகள் இல்லையா? அவ்விதம் இருக்கும் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கொழும்பில் குடியிருக்கும் விக்னேஸ்வரனை தங்களின் முதன்மை வேட்பாளராக தெரிவு செய்தது ஏன் என்று கேட்க விரும்புவதாக ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகள் வடபகுதியின் 82 அரசியல்வாதிகள், 52 சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், நீலன் திருச்செல்வம் போன்ற 24 கல்விமான்களை படுகொலை செய்தனர். எல்.ரி.ரி.ஈ. இந்தக் குற்றங்களை செய்திருக்காவிட்டால் வடபகுதியில் பிறந்து, வடக்கில் நிரந்தரமாக வாழும் ஒருவரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது பிரதம வேட்பாளராக தெரிவு செய்திருக்க முடியுமென்றும் ஜனாதிபதி சொன்னார்.

பொதுவாக ஒரு முதலமைச்சர், தான் அதிகாரத்தில் வீற்றிருக்கும் பிரதேசத்திலேயே நிரந்தரமாக வாழ வேண்டும். இவ்வமைப்பின் தற்போதைய முதலமைச்சர் வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் வடபகுதியில் நிரந்தரமாக வாழ்வார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறதென்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, எனது அரசாங்கம் இன்று பாதைகளை அமைத்துவிட்டதனால் அவர் அடிக்கடி யாழ்ப்பாணம் சென்று அதன் நிர்வாகத்தை கவனிப்பதற்கான வாய்ப்பையும் நாம் செய்து கொடுத்துள்ளோம் என்று கூறினார்.

கடந்த காலத்தில் அரசாங்கம் வடபகுதியில் அனைத்து அபிவிருத்தி பணிகளையும் முழுமையாக நிறைவேற்றியது. அங்கு கழிவறைகளைக் கூட நாம் இராணுவத்தினரைப் பயன்படுத்தி நிர்மாணித்துக் கொடுத்தோம். வடக்குக்கு வசந்தம் இருக்கிறது.

ஆனால், தென்னிலங்கைக்கு வசந்தம் இல்லையே, ஹம்பாந்தோட்டைக்கு வசந்தம் இல்லையே. இவ்விதம் தான் எனது அரசாங்கம் சாதி, மத, பிரதேச பேதமின்றி வடபகுதியின் அபிவிருத்திக்கு முழுமையாக உதவியது என்று கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனின் மகள்மார் இரண்டு சிங்கள அரசியல்வாதிகளின் புதல்வர்களை மணந்திருக்கிறார்கள். ஒரு மகள் இந்த திருமணத்தின் மூலம் எனக்கு உறவுக்காரியாகிவிட்டார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உங்களுக்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கிறாரே என்று ஓர் ஆசிரியர் கேட்டதற்கு அப்படியான கடிதமொன்று எனக்கு கிடைக்கவில்லையே என்று தெரிவித்த ஜனாதிபதி, பொதுவாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தவுடன் சம்பந்தன் எனக்கு அதுபற்றி தொலைபேசியில் அறிவிப்பார். இந்தக் கடிதத்தைப் பற்றி அறிவிக்கவில்லை. ஆகவே தமது உரையை கேட்டுக் &8!qநிஸிs> ஆதரவாளர்களை மகிழ்விக்க இவ்விதமாக கூறியிருக்கலாம் என்று ஜனாதிபதி கூறினார்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இரயில் பாதையை அமைக்க வேண்டுமானால் அப்பாதையின் இரு மருங்கிலும் 500 மீற்றர் தொலைவில் உள்ள கண்ணி வெடிகளை அகற்ற வேண்டுமென்று இந்திய அரசாங்கத்தின் பொறியியலாளர்கள் தெரிவித்தனர். அவ்விதம் செய்வதற்கு 10 முதல் 15 வருடகாலம் எடுக்குமென்று மதிப்பீடு செய்த போது இலங்கை இராணுவம் முன்வந்து கண்ணிவெடிகளை மிக விரைவில் அகற்றிவிட்டது.

அவ்விதம் சேவை செய்த இராணுவத்தை வடபகுதியில் இருந்து வெளியேற்றுங்கள் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் கேட்கிறார்கள் என்றும் ஜனதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

jeudi 12 septembre 2013

சீ.வி.விக்னேஸ்வரனின் பெயர் யாழ்.மாவட்ட வாக்காளர் பட்டியலை பார்த்தேன் இல்லை .கொழும்பு பொரளை தெகுதியில் இருக்கின்றது

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலமை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரனின் பெயர் பொரளை தேர்தல் தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருக்கின்றது. ஆனால் வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றார். இவருக்கு அராலி பாலத்திற்கருகிலுள்ள வான் பகுதியில் எத்தனை வான் கதவுகள் இருக்கின்றது என்று தெரியுமா?யாழ்ப்பாணத்தில் எத்தனை தீவுகள் இருக்கின்றது என்று தெரியுமா? என பொது அறிவு வினாடிவினா கேள்விகளை எழுப்பியுள்ளார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ. நேற்று யாழ்.நகரில்; நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றுகையி லேயே அவர் மேற்படி கேள்விளை எழுப்பியுள்ளார்.குறித்த சந்திப்பில் மேலம் அவர் குறிப்பிடுகையில், வடக்கு மாகாணத்தில் பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தப் பிரதேசத் தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற கூட்டத்தில் கேட்ட தமிழ் தசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனிடம்; மாகாணசபை தேர்தலில் அந்த மாகாணத்துடன் தொடர்பல்லாதவர் போட்டியிட முடியாது என நாம் கேட்டால் கதி என்ன?கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர் சீ.வி.விக்னேஸ்வரன் எந்த மாவட்டத்தில் வாக் காளராக இருக்கின்றார் என அறிய ஆவலடைந்து யாழ்.மாவட்ட வாக்காளர் பட்டியலை பார்த்தேன் அங்கே இல்லை.வடக்கின் ஏனைய மாவட்டங்களில் பார்த்தேன் அங்கும் இல்லை. நான் அதிர்ந்துபோ னேன் சிலவேளை இலங்கையில் எந்தப் பகுதியிலும் வாக்காளர் பதிவு அவருக்கு இல் லையோ என்று. பின்னர் கொழும்பு மாவட்டத்தினை பார்த்தபோது பொரளை தேர்தல் தெ குதியில் அவருடய பெயர் இருக்கின்றது. இவரே வடக்கு மாகாணசபையின் முதன்மை வேட்பாளர். என புன்னகையுடன் கூறினார்

mercredi 11 septembre 2013

ஆய்வு;இலங்கை ஆண்களில் 14.5 சதவீதத்தினர் பலாத்காரம் செய்கின்றனர்;

இலங்கையில் 14.5 சதவீதத்துக்கு அதிகமானோர் அல்லது 10 மனிதரில் ஒருவருக்கு மேற்பட்டோர் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது பெண் மீது வல்லுறவு செய்ததை ஒப்புக்கொண்டனர் என பெண்களுக்கு எதிரான வன்முறை எனும் ஐ.நா ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் ஆறு நாடுகளை சேர்ந்த பத்தாயிரம் ஆண்கள் பங்கேற்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறை எவ்வளவு தூரம் பரவலாக காணப்படுகின்றது, அதற்கான காரணம் என்பவற்றை அறிவதற்காக பல நாடுகளை உள்ளடக்கி நடைபெற்ற முதலாவது ஆய்வு இதுவாகும். வல்லுறவை ஒப்புக்கொண்டவர்களில் அரைவாசிக்கு சற்று குறைவானோர் தாம் ஒரு தடவைக்கு மேல் இவ்வாறு செய்வதாக கூறினார். பெண்களுக்கு எதிரான பலாத்காரம் நாடுகளுக்கு இடையில் வேறுபட்டு காணப்பட்டது. பப்புவா நியூகினியில் 10 பேரில் அறுவர் பெண்களை பலவந்தமாக பாலுறவுக்கு உட்படுத்தியதாக கூறினார். கம்போடியா,சீனா,இந்தோனிஷியா ஆகிய நாடுகளில் ஆய்வுக்கு உட்பட்டோரில் 20 சதவீதம் தொடக்கம் 50 சதவீதம் வரையிலானோர் வல்லுறவு கொண்டவர்களாக உள்ளனர் என்றும் இந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகளில் முழு ஆசிய மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கும் பொருந்தாது. ஆயினும் ஆய்வுக்குட்பட்ட நாடுகளில் பயனள்ள தகவல்களை தந்துள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ,, 

mardi 10 septembre 2013

மரபுவழித்தாயகம்.- எழுச்சியும் வீழ்ச்சியும் (1)

எம்.ஆர்.ஸ்ராலின்
history-srilankaகாலனித்துவ ஆட்சியின் பின்னரான இலங்கைத்தமிழரின் அரசியல் வரலாற்றில் இந்த  மரபுவழித்தாயகம் எனும் கருத்தாக்கம் சுமார் நூறு ஆண்டுகள் கோலோச்சி  இருக்கின்றது. “தமிழ் தேசியவாதம் எனும் கோட்பாடு தமிழரின் அரசியலில்  தாக்கம் செலுத்த தொடங்கியதில் இருந்து இந்த மரபுவழித்தாயகத்துக்கான தேடலும் அதிகரிக்கத்தொடங்கியது. 1800 களிலேயே ஆங்கில காலனித்துவத்துக்கு எதிராக தமிழர் மத்தியில் உருவான எதிர்ப்புணர்வுகள் தமிழ்  தேசியவாதத்திற்கான விதைகளைத் தூவியிருக்கின்றன என கொள்ளப்படுகின்றது. 1847  ஆம் ஆண்டில் தொடங்கி ஆறுமுகநாவலர் தலைமையில் இடம்பெற்ற சைவ பிரசங்க  உரைகளும், சைவத்தமிழ் பாடசாலைகளின் உருவாக்கமும் தமிழ் நூற்பதிப்புகளும்  தமிழர் மத்தியில் நமது மொழி, நமது மதம், நமது பாரம்பரியம், நமது கலாசாரம்  என்பதாக தேசிய உணர்வுகளைத் தூண்ட ஆரம்பித்தன. அந்தவகையில் தேசியவாதத்தின்  தோற்றுவாயாக ஆறுமுகநாவலரின் செயற்பாடுகள் இருந்தன. ஆனபோதிலும் அவையொரு  “மரபுவழித்தாயகம்” எனும் கருத்தாக்கத்தை நோக்கி அவ்வேளைகளில்  விரிவடையவில்லை. ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிரான சுதேச மொழி, மற்றும்  மதங்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளாக அவை தம்மை  மட்டுப்படுத்திக்கொண்டிருந்தன.  
நாவலர் காலத்தைத் தொடர்ந்து இலங்கைத்தமிழரின் அரசியல் வரலாற்றில் பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாக பொன்னம்பலம் சகோதரர்கள் காணப்பட்டார்கள்.  இலங்கைத் தேசிய காங்கிரசின் முதலாவது தலைவராக இருந்த பொன்.அருணாசலம்  சட்டநிரூபண சபைக்கு மேல்மாகாணத்தில் ஒரு ஆசனம் தமிழர்களுக்காக வழங்கப்பட வேண்டும் என்கின்ற வேண்டுகோள்  சிங்களத் தலைவர்களினால்  மறுக்கப்பட்டது என்கின்ற குற்றச்சாட்டை முன்வைத்து  1923 ஆம் ஆண்டு காங்கிரசைவிட்டு விலகி தமிழர் மகாசபை எனும் அமைப்பை உருவாக்கினார். பொன்.அருணாசலத்தின் இந்த செயற்பாடானது தமிழர் தேசியவாதம் எனும் புதியதொரு அரசியல் போக்கினை  பகிரங்கமாக அடையாளப்படுத்தியது. இந்த தமிழர் மகாசபையின் அங்குரார்பண  உரையில் “தாயக மீட்பு” எனும் அபிலாசையை நோக்கி தமிழர்களை ஒருங்கிணைய  அழைப்புவிடுத்தார் அருணாசலம். “எமது தாயகத்தை மீட்டெடுப்பதற்கு நாம்  அனைவரும் ஒருமித்து கைகோர்ப்பது அவசியம்.” என அவரது உரை அமைந்திருந்தது.  தமிழீழம் என்கின்ற ஒரு தாயகக் கோட்பாட்டை நோக்கிய முதலாவது அடையாளமாக “நமது தாயகம்” என்கின்ற இந்த சொல்லாடல்  அமைந்திருந்தது. 
தமிழர் மகாசபையின் தொடக்கமானது இலங்கை என்கின்ற ஒரே நாட்டினுள் தமிழ் மொழி எனும்  அடையாளத்தினூடாக புதியதொரு தேசியத்தை நோக்கி தமிழர்களை ஒன்றிணையுமாறு  அழைப்பு விடுத்தது. அதேவேளை இலங்கை தேசிய காங்கிரசு என்கின்ற மொழி,  இனவேறுபாடுகளைத் தாண்டிய   இலங்கையருக்கான ஒரு பொது அமைப்பு தேய்ந்து  சிங்களத் தேசியமாக குறுகிப்போகவும் காணரமாயிற்று.  ஆனபோதிலும்   மேட்டுக்குடியினர் மத்தியிலும், கல்விகற்ற வகுப்பினராகவும்,  தனவந்தர்களாகவும் கொழும்பை மையமாகக்கொண்டிருந்த தமிழர்கள் மத்தியிலும்  தமிழர் மகாசபையின் உருவாக்கம் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது. அதேவேளை  வடக்கு கிழக்கில் வாழ்ந்த பெரும்பான்மையான தமிழர்கள் மேற்படி “தாயகம்”  பற்றி அக்கறையற்றவர்களாகவே காணப்பட்டனர். அதற்கு காரணமாக தமிழர்களிடையே  காணப்பட்ட சாதிய, பிரதேச வேறுபாடுகள் அமைந்திருந்தன. வட இலங்கையில் வேளாள  மேட்டுக்குடிகளுக்கும் பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்ட தலித்  மக்களுக்குமிடையேயான வாழ்வியல் அம்சங்களில் இருவேறு உலகங்களே அங்கு  சிருஷ்டிக்கப்பட்டிருந்தன. வன்னி, கிழக்கிலங்கை, மலையகம் போன்ற பகுதிகளில்  வாழ்ந்த தமிழர்கள் “யாழ்ப்பாணத்தவர்கள் சம அந்தஸ்துடன் தம்மை ஏற்றுக்கொள்ளாதவர்கள்” என்கின்ற மனக்குறைகளுடனும்  நம்பிக்கையீனத்துடனுமே இந்தத்தலைவர்களை அணுகினர். குறிப்பாக யாழ் -  அகற்றுச்சங்கம், நாவலர் எதிர்ப்பியக்கம் போன்றன இப்பிரதேசங்களில்  பிற்காலங்களில் உருவாவதற்கு மேற்படி மனநிலைகள் காரணமாயின. பொன்.இராமநாதன்  காலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்தின் பெருந்தலைவராக வளர்ந்துவந்த  ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரசு கூட கிழக்கில்  காலூன்றுவதற்கு செய்த பகிரதப்பிரயத்தனம் இறுதிவரை தோல்வியிலேயே முடிந்தது.  சுருங்கக் கூறினால் மரபுவழித்தாயகம் ஒன்றைக் கட்டியமைக்கும் முயற்சியில்  யாழ்ப்பாணத் தமிழர்கள் கிழக்கு மாகாண மக்களின் ஆதரவினைப் பெறுவதென்பது  மேற்படி கருத்தாக்கம் உருவாகி சுமார் அரைநூற்றாண்டுவரை இயலாத காரியமாகவே  இருந்தது. கிழக்கு மக்கள் எதிர்கொண்ட வாழ்வியல் பிரச்சனைகளுக்கும் தமிழ்  தேசியம் மரபுவழித்தாயகம் எனும் அரசியல் கோசங்களுக்கும் இடையில் இருந்து  வந்த பிணைப்பற்ற நிலைமையே இதற்கு காரணமாயிற்று. 
இந்தநிலையில்தான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறத்தொடங்கின. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது  அதிலிருந்து பிரிந்து பாகிஷ்தான் என்கின்ற புதியநாட்டை உருவாக்கினார்  ஜின்னா. இந்த பாகிஷ்தானின் உருவாக்கம் உலகெங்கிலும் செய்தியாக பரவியபோது  யாழ் முற்றவெளியில் நடந்த கூட்டமொன்றில் உரையாற்றிய ஜி.ஜி.பொன்னம்பலம்  “இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அதிலிருந்து பாகிஷ்தானை பிரித்தெடுத்த  ஜின்னாவைப்போல் இலங்கை சுதந்திரமடைந்தவுடன் அதிலிருந்து தமிழீழத்தை  மீட்டெடுக்கப்போகும் ஜின்னா நானே” என்று மார்புதட்டிப்பேசினார்.  பொன்.அருணாசலம் காலத்தில் இருந்த நமது தாயகம் எனும் அடையாள வார்த்தை  பிரயோகம் இங்கே “தமிழீழம்” என முதன்முறையாக தாயக கோட்பாட்டை நோக்கிய  பெயரிடலாக பரிணமிப்பதைக் காணலாம்.
1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டி.எஸ்.சேனநாயக்கா தலைமையிலான அரசாங்கம் புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமுல்படுத்தியது. இத்திட்டங்கள் திருமலை மாவட்டத்தின்  கந்தளாய், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்த அம்பாறை பிரதேசத்தின்  கல்லோயா போன்ற பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. எனவே  தமிழர் வாழும் பிரதேசங்களை மையமாகக் கொண்டு அமைந்திருந்த இத்திட்டங்கள்  எமது தாயகத்தை ஆக்கிரமிக்கும் செயற்பாடு என்று எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்ற தலைவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பினர். தமிழர்களின்  மரபுவழித்தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களை பலவீனப்படுத்தும் முயற்சி  இதுவென தமிழ் தலைவர்கள் வாதங்களை முன்வைத்தனர். கல்லோயா போன்ற பகுதிகளில்  சிங்களகுடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துவதால் தமிழர்கள் மட்டும் அல்ல முஸ்லிம்களும் தங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கலாம் என்று செல்வநாயகம் குரலெழுப்பினார்.   
இந்த நீர்ப்பாசனதிட்டங்களில் இனவேறுபாடு இன்றி சகலருக்கும் காணி கச்சேரிகள்  மூலம் நிலங்கள் பிரித்து வழங்கப்பட்டபோதிலும் தமிழர்கள் அங்கே குடியேற  விரும்பவில்லை. அதற்கான அவசியமும் இயற்கை வளங்களுக்கு பஞ்சமற்ற கிழக்கு  மாகாணமக்களுக்கு ஏற்படவில்லை. எனவே இத்திட்டங்களை சிங்கள மக்கள் முழுமையாக  பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதே உண்மையாகும். அதேவேளை கல்லோயா அணைக்கட்டு  திட்டம் பற்றி “மட்டக்களப்பின் தென்பகுதியில் இருந்த காடுகளை எல்லாம் பரந்த நீர்வளம், நிலவளம் சான்ற வயல்வெளிகளாகவும், குடியேற்ற நிலமாகவும்  விளங்கவைத்திருக்கும் இத்திட்டம் மட்டக்களப்பு நாட்டின் பொருள் வளத்தை  உயர்த்தும் அமுத சுரபியாகும்”(மட்டக்களப்பு தமிழகம் -பக்-22) என  வி.சி.கந்தையா போன்ற தமிழ் அறிஞர்கள் முன்வைத்த கருத்துக்கள் எல்லாம்  அரசியல்வாதிகளின் பெரும் குரல்களுக்கு மத்தியில் அமுங்கிப்போயின என்கின்ற  உண்மைகளும் உண்டு.  
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தபின்னர் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச்  சட்டம் 10 லட்சம் இந்திய வம்சாவழி தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து  அவர்களை நாடற்றவர்களாக்கியது. இச்சட்டம் கொண்டுவரப்பட்ட போது தனது  மந்திரிப் பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக தமிழ் காங்கிரசின் தலைவராக  இருந்த ஜி.ஜி. பொன்னம்பலம் அதனை ஆதரித்தார் எனக்கூறி காங்கிரசுக்குள் உடைவு ஏற்பட்டது. அதனடிப்படையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலானோர் தமிழ் காங்கிரசை விட்டு வெளியேறி 1949 ஆண்டு டிசம்பர் மாதம் தமிழரசுக்கட்சியை உருவாக்கினர். இந்த தமிழரசுக்கட்சியே தமிழரின்  தாயகக்கோட்பாடு எனும் கருத்தாக்கத்தை வடகிழக்கின் மூலைமுடுக்குகள் எல்லாம்  புகுத்துவதில் பிற்காலத்தில் வெற்றிபெற்றது. மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக குரல்கொடுத்த செல்வநாயகம் “இன்று அவர்களுக்கு நாளை நமக்கு”  என்று வடக்கு கிழக்கு மக்களை நோக்கி எச்சரிக்கை செய்தார். அதேவேளை  கந்தளாய், கல்லோயா பிரதேசங்களில் இடம்பெற்ற குடியேற்றங்களை எதிர்ப்பதிலும்  தீவிர அக்கறை காட்டினார். 
1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழரசுக்கட்சியின் திருமலை மகாநாடு பின்வருமாறு  தீர்மானத்தை நிறைவேற்றியது. “பாரம்பரியமாக தமிழ் பேசும் மக்கள்  எந்தப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்களோ! அந்தப்பிரதேசத்தை  தமதாக்கிக்கொள்ள அவர்களுக்கு பூரண உரிமை இருக்கின்றது.” தமிழரசுக்கட்சியின் இந்த முதலாவது மகாநாட்டுத்  தீர்மானமே 1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் முக்கிய பிரச்சாரமாய் இருந்தது.       மரபுவழித்தாயகம்.- எழுச்சியும் வீழ்ச்சியும் (2)  http://www.akkininews.com/2013/08/blog-post_16.html

lundi 9 septembre 2013

பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரே வடக்கின் முதலமைச்சராக திகழ்ந்திருப்பார்;சரத் பொன்சேகா

இணைப்பு 02 - பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரே வடக்கின் முதலமைச்சராக திகழ்ந்திருப்பார் – சரத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரே வடக்கின் முதலமைச்சராக திகழ்ந்திருப்பார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரபாகரன் சரணடைந்திருந்தால், அவர் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன் இணைந்து கொண்டிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்;ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் எவரும் சரணடையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு சரணடைந்த தயா மாஸ்டர், குமரன் பத்மநாதன் போன்றவர்கள் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் சுயாதீன வேட்பாளர்களுக்கு மஹிந்த ஹத்துருசிங்க ஒத்துழைப்ப வழங்கி வருவதாகவும் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான தரப்பின் சுவரொட்டிகள் கிழிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கடமை தவறிச் செயற்படும் இராணுவ அதிகாரிகளினால் அனைத்து இராணுவத்தினருக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.


போதிய அறிவின்மை.குடும்ப பொருளாதாரசூழல்.இலங்கையில் அதிகரிக்கும் இளவயது திருமணங்கள்

 இலங்கையில் சிறுவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
போதிய அறிவின்மை, குடும்ப பொருளாதாரசூழல் போன்றவையே இதற்கான காரணம் என யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி கூறுகின்றார்.சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
சிறுவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும் என இலங்கைக்கான யுனிசெப் வதிவிட பிரதிநிதி சுட்டிக்காட்டுகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மற்றும் ஏறாவூர் பற்று ஆகிய பிரதேச செயலக நிர்வாக பிரிவுகளிலும் யுனிசெப்பின் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் அதிகமாக காணப்படும் பிரதேசங்களிலே சிறுவயது திருமணங்களும் அதிகம் காணப்படுவதாக யுனிசெப் தெரிவிக்கின்றது.
தமது பிரதேசத்தில் பாடசாலை இடைவிலகலுக்கும் சிறுவயது திருமணங்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக குறித்த பிரதேச செயலக அதிகாரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
குடும்பத்தின் ஏழ்மையான சூழல், தந்தையின் மதுப்பாவனை மற்றும் தாயானவர் மத்திய கிழக்குக்கு வேலைக்குப் போவது போன்ற காரணிகள் இப்படியான சிறுவயது திருமணங்களை அதிகப்படுத்துவதாக கூறுகிறார் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரான துரைசிங்கம் ஜெயசாந்தினி.
சிறுவயது திருமணத்திற்கு சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது குறித்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்முறை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. ஆனால் நடைமுறைச்சிக்கல்களும் சமூக சூழ்நிலையும் அந்த கணவனை தண்டிப்பதற்கு இடமளிப்பதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உள்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பான தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்ட ஆலோசகரான அருள்வாணி சுதர்சன் இலங்கையில் திருமண சட்டம் 18 வயதுக்கு கீழ் திருமணப்பதிவு செய்வது சட்ட விரோதம் என்கிறது. ஆனால் அதேசமயம், 16 வயதுக்கு மேற்பட்ட பெண் விரும்பும் ஆணுடன் உறவு வைப்பது பாலியல் குற்றமாக கருத முடியாது என்றும் சட்டம் சொல்கிறது.
இந்நிலையில் 18 வயதுக்கு குறைந்த பெண் திருமணம் செய்யத்தான் தடை இருக்கின்றதே தவிர விரும்பும் ஆணுடன் இணைந்து வாழ தடை இல்லை என்றாகிறது. இதுவும் அந்த நடைமுறைச்சிக்கல்களில் குறிப்பிடத்தக்கது என்று இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் விளக்கினார் அருள்வாணி சுதர்சன்.
சிறுவயது திருமணத்தை பொறுத்தவரை சிறுவர் மற்றும் மகளிர் தொடர்பான அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விழிப்புணர்வு செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தாலும் அது எதிர்பார்த்த பலனளிப்பதாக இல்லை என்பது தான் பலரது கருத்தாகவும் இருக்கிறது.

பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது;விறுவிறுப்பு

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும், கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்.” இவ்வாறு கூறியுள்ளார், சுப்ரமணியம் சுவாமி.
‘சுவாமி கூறியிருப்பது உண்மையாக இருக்குமோ’ என்ற சந்தேகம் ஏற்படுகிறதா?
அவர் எந்த இடத்தில், எந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு கூறினார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை ராணுவத்தின் 2013-ம் ஆண்டுக்கான 3-வது ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கு  Army’s third annual international conclave the ‘Defence Seminar – 2013′), இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில், இலங்கையின் ராணுவ உயரதிகாரிகள் கிட்டத்தட்ட அனைவருமே கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும், இறுதி யுத்தம் நடந்தபோது, இலங்கை ராணுவத்தில் இருந்தவர்கள்.
மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு கருத்தரங்கின் மேடையில்தான், கொழும்புவில் வைத்தே, சுப்ரமணியம் சுவாமி, “இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும், கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது” என்று பேசினார்.
இலங்கை ராணுவ தளபதி உட்பட யாரும் அதை மறுக்கவில்லை.
இலங்கை ராணுவ பாதுகாப்பு கருத்தரங்கில் தொடர்ந்து பேசிய சுப்ரமணியம் சுவாமி, “விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா இலங்கைக்கு உதவி செய்தன. இந்தியாவின் சிறப்பு ஒத்துழைப்பு பெறப்பட்டது.
அது எப்படியென்றால், ஜனாதிபதி ராஜபக்ஷேவின் சீனியர் ஆலோசகர், ஜனாதிபதியின் செயலர், பாதுகாப்பு செயலர் உட்பட 6 பேரடங்கிய இலங்கை உயர்மட்டக் குழுவினர், யுத்தம் முடியும்வரை டில்லியுடன் நேரடித் தொடர்பில் இருந்தார்கள். டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார செயலர், பாதுகாப்பு செயலர் ஆகியோருடன் இலங்கை குழுவினர் எந்த நேரமும் தொடர்பு கொள்ள வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தன.
யுத்தம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இலங்கை மற்றும் இந்திய உயர்மட்ட குழுவினர் மிகவும் ரகசியமான முறையில் உடனுக்குடன் ஆலோசனை செய்து, அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.
தி.மு.க.வின் தலைவரும், தமிழகத்தின் அன்றைய முதலமைச்சருமான கருணாநிதிக்கு விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி அடிக்கடி விளக்கிக் கூறப்பட்டது. பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி மதிநுட்பத்துடன் நிலைமையை உணர்ந்து, இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்” என்று பேசினார்.
சுப்ரமணியம் சுவாமி கூறியிருப்பது நிஜம்தான் என்பதையும் நாம் அறிந்திருந்தோம். அதே நேரத்தில், தமிழக முதல்வர் என்ற முறையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இந்த விபரம் தெரிவிக்கப்பட்டாலும், அவரால் ஏதும் செய்து இதையெல்லாம் தடுத்திருக்க முடியாது என்பதும் நிஜம்தான். அது அவரிடமே கூறப்பட்டிருந்தது.
நாம் அறிந்தவரை, முடிவு மிகமிக மேல்மட்டத்தில், இந்தியாவுக்கு வெளியே எடுக்கப்பட்டது. டில்லிக்கும், தலையாட்டுவதை தவிர வேறு வழி கிடையாது. கருணாநிதிக்கு தகவல் மட்டும் சொல்லப்பட்டது, அவ்வளவுதான்.
அது சரி. சு.சுவாமி ஏதாவது சொன்னால் பாய்ந்து வரும் ‘உணர்வாளர்கள்’ யாரும், சுவாமியின் கொழும்பு பேச்சு தொடர்பாக வாயே திறக்கவில்லை கவனித்தீர்களா? என்ன காரணம்? “பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது” என்று சுவாமி பேசியது குறிந்து பொங்கியெழுந்தால், லாஜிக் உதைக்கும் அல்லவா?

dimanche 8 septembre 2013

எதுவும் நடக்காது யார் முதலமைச்சராக வந்த்தாலும்

sekarவடக்கில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருப்பது அரை இராணுவ ஆட்சி. அனைத்திலும் இராணுவம் தலையிட்டுக் கொண்டிருக்கின்றது. வன்னியில் திருமண வீட்டிற்கு கூட படையினரது அனுமதி பெறப்பட வேண்டியிருக்கின்றது. பாடசாலையில் மாணவர்கள் அரங்கேற்றும் நாடகத்தின் ஸ்கிரிப்ட்டினை அருகிலுள்ள படைமுகாமில் ஒப்படைத்து முன் அனுமதி பெறவேண்டி இருக்கின்றது.
இந்நிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக வந்தால் என்ன டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சராக வந்தால் என்ன சிலவேளைகளினில் நாமல் ஜனாதிபதியாக வந்தால் என்ன எதுவுமே நடக்கப்போவதில்லை என தெரிவித்தார் ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தேசியப்பிரச்சினைக்கு தீர்வுக்கான அணுகு முறைகள் எனும் கருப்பொருளில் நாளை யாழ்.பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடக்கவிருக்கும் ஜேவிபியினது பிரச்சாரக் கூட்டத்திற்கான முன்னறிவிப்பு பற்றிய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இத்தகைய கருத்தினை முன்வைத்திருந்தார்.
எவர் ஆட்சிபீடமேறினாலும் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீரப்போவதில்லை. தடுப்புக்களிலும் சிறைகளிலுமுள்ள இளைஞர்கள் விடுவிக்கப்படப் போவதில்லை. காணாமல் போனோhர் திரும்பப்போவதில்லை. அன்றாட விலைவாசிகள் குறையப் போவதில்லை. இத்தேர்தலின் பின்னர் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றினதும் விலைகள் கூட்டப்படப் போகின்றது.
இந்நிலையில் தமிழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள ஏனைய மக்களையும் ஒன்றிணைத்து போராடுவதை தவிர வேறு வழிகளில்லையெனவும் அவர் தெரிவித்தார்.