சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு மேல் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சென்னை நகரின் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் போரூர் முகலிவாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான 13 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த இரண்டு கட்டடங்களில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் (13 மாடி) இடிந்து விழுந்தது. இந்த கட்டத்தில் ஏராளமானோர் சிக்கிவுள்ளனர். இவர்களை மீட்க தீயணைப்பு படையினர் விரைந்து உள்ளனர். 108 ஆம்புலன்ஸ்களும் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் 5 மாடிக்கு மேல் எந்த கட்டிடம் கட்டப்படவில்லை. இந்த இடம் இருந்த பகுதியில் ஏரி இருந்தாக கூறப்படுகிறது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலானோர் ஆந்திராவைச் சேரந்தவர்கள். இன்று வார இறுதி நாள் என்பதால் அதிக அளவில் வேலைக்கு வந்துள்ளனர்.
தற்போதைய நிலவரங்கள்:
இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட 15 பேர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மதுரையைச் சேர்ந்த மருது பாண்டி (வயது 25) என்பவர் உயிரிழந்தார். மேலும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கட்டிட இடிபாடுகளில் இருந்து தற்போது மேலும் 4 மீட்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மருதுபாண்டியை காப்பாற்ற அவருடன் பணிபுரிந்தவர்கள் அருகே சென்ற ஆட்டோ மற்றும் குட்டியானை வாகனத்தை நிறுத்தி உதவி கேட்டபோது நிறுத்தாமல் அவர்கள் சென்றுவிட்டதாக மதுரை டி கல்லுப்பட்டி தொழிலாளர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். மேலும் தக்க சமயத்தில் உதவிக்கு ஆம்புலன்ஸ வரவில்லை என்றும், மிகவும் காலதாமதாகமாகவே உதவிக்கு ஆம்புலன்ஸ் வந்ததாகவும் தெரிவத்தனர்.
ஜெயலலிதா உத்தரவு; இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும் படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்/
கட்டிட நிறுவனம் விளக்கம்: இடிந்து விழுந்த கட்டடம் இடி தாக்கியதால் விழுந்ததாகவும், சி.எம்.டி.ஏ.,விடம் உரிய அனுமதி வாங்கியுள்ளதாகவும், விதிமீறல் ஏதுமில்லை என்றும், மண் பரிசோதனை செய்யப்பட்டு உரிய சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளதகாவும், , எத்தனை ஊழியர்கள் தொழிலாளர்கள் இருந்தார்கள் என்பது பற்றி தெரியவில்லை என்றும், மழை காரணமாக பணிகள் ஏதும் நடைபெறவில்லை எனவும், கட்டடத்தில் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும், மழை காரணமாக தொழிலாளர்கள் ஒதுங்கியுள்ளனர் என்றும், சம்பவத்துக்கு நாங்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும் என கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வல்கள் கோரிக்கை: இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் கட்டிட அனுமதியை முறைப்படுத்த வேண்டும் என்றும் , அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire