இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, ரஷ்ய துணைப் பிரதமர் டிமித்ரி இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதை அடுத்து, முதன் முதலாக ரஷ்ய துணைப் பிரதமர் டிமித்ரி இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று இந்தியா வந்த இவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசியுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 வது மற்றும் 4 வது அணு உலைகள் அமைப்பதுத் தொடர்பாக சுஷ்மாவுடன், டிமித்ரி பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிய வருகிறது. மேலும், ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகளின் செயல்ப்பாடுகள் குறித்தும் அவர் அணுசக்தித் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். டிமித்ரி பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து, அவருடன் இரு நாட்டு நல்லுறவுக் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire