உலகில் யுத்தம் காரணமாகவும் கொடுமைகள் காரணமாகவும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 50 மிலியனை தாண்டியுள்ளதாக ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஆணையம் கூறுகின்றது.
இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.கிட்டத்தட்ட 17 மிலியன் மக்கள் தமது சொந்த நாடுகளை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
சுமார் 33 மிலியனுக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாடுகளுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு சிரியா யுத்தம் முக்கிய காரணமாகியுள்ளது.
கடந்த ஆண்டில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு சிரியா யுத்தம் முக்கிய காரணமாகியுள்ளது.
அதேநேரம், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளிலும் புதிய மோதல்கள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டைவிட, 6 மிலியன் பேரால் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐநா கூறுகின்றது.
போர்கள் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டு செல்கின்றமையும் அவற்றைத் தடுக்கத் தவறுகின்றமையுமே இந்த அதிகரித்த அகதிகள் எண்ணிக்கை சுட்டிக்காட்டுவதாக ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஆணையம் கூறுகின்றது.
அகதிகளை உள்வாங்குவதற்கு செல்வந்த நாடுகள் இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருப்பதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire