ஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள முற்படுவதனையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி-கண்டனம் பேருவளை,அளுத்கமவில் பௌத்த துறவிகளுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இடையே ஆரம்பமான கலவரங்கள்கண்டிக்கத்தக்கன.இந்த வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமலும் இது இனக்கலவரமாக மாற்றம் பெறவும் அனுமதிக்கக் கூடாது எனவும் அரச இயந்திரங்களும், பொலிசாரும் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.மூன்று தசாப்தங்களாக புரையோடிப்போன யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நிலைமையை சீர்படுத்த முனையும் வேளையில் மீண்டும் ஒரு இன முறுகள் ஏற்படுவதனையும் ஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள முற்படுவதனையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.இலங்கை பிரஜைகள் எவரும் நாட்டின் அனைத்துவித சுதந்திரத்துடனும், தனித்துவத்துடனும் வாழ்வதற்கு பூரணதகுதி உடையவர்கள். ஒருவரை இன்னும் ஒருவர் ஏளனம் செய்தோ அல்லது ஒருவரை இன்னும் ஒருவர் தாழ்வுக்கண் கொண்டு நோக்குவதோ, அரசியல் அதிகாரத்தின் மூலம் அடக்கி ஆள்வதோ நீண்ட காலம் நோக்கிய அபிவிருத்தி பாதைக்கு அசௌகரியத்தினையே ஏற்படுத்தும் என்பது கடந்தகால வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்டபாடமாகும்.
ஓவ்வொரு மதத்தர்மங்களும் மனிதனை மனிதனாக மதிக்கும் உயரிய தத்துவத்தினையே கொண்டுள்ளது. அந்தவகையில் மனித தத்துவத்திற்கு மதிப்பளித்து அனைவரும் தமது தனித்துவத்துடன் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire