கறுப்பு ஜூலை83 விட மோசான மற்றும் அச்சமூட்டும் விடயங்கள் உள்ளன. அப்படியான விடயங்களைப் பற்றிய சாத்தியத்துக்கு அழுத்கம சம்பவம் ஒரு அடையாளம்.
நிகழ்வுகளின் வரிசையில் உயிர் கொல்லி வன்முறையான அழுத்கம பயங்கரம், ஜூலை 83 ஐ நினைவூட்டுவதாகவும் மற்றும் அவசரகால 1958ம் வருடத்தைய தமிழர் எதிர்ப்பு கலரத்தின் பயங்கரமான சாயல் படிந்ததாகவும் உள்ளது. அந்த இருள் நிறைந்த மூலகத்தின் தொடர்ச்சியினை தற்போதைய மோசமான காலகட்டத்தில் நாங்கள் ஒருபோதும் மறந்துவிடலாகாது. ஆனால் தொடர்ச்சியற்ற ஒரு மூலகமும் அங்கு உள்ளது, அது அழுத்கம சம்பவத்தை மிக அதிகமான சாத்தியமுள்ளதாக ஆக்குகிறது. இந்த நிகழ்வுக்கு எதிராக நாங்கள் வெற்றிகரமாக போராட வேண்டுமாயின் அதற்கு காரணமான சாத்தானை சரியாக அடையாளம் காணவேண்டும். இதுவரை ஆளும் வர்க்கத்தினரது அச்சமூட்டும் முகமூடி, சிங்கள பௌத்தத்தின் இருண்ட அவதாரம் அல்லது நவீன தாராண்மைவாத முதலாளித்துவ உபகரணங்கள் காரணமாக அது தவறாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை அனைத்துமோ அல்லது இவற்றில் சிலவோ அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இன்றைய தினத்தின் வெளிப்பாடுகளான பொது பல சேனா மற்றும் அழுத்கம வெறியாட்டம் என்பவற்றுக்கு மிகவும் முக்கியமான அல்லது ஆபத்தான சம்பவங்கள் இவைகள் அல்ல.
அழுத்கம சம்பவத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எதுவெனில் பொது பல சேனாவின் பிரதான வாய்வீச்சாளரும் ஆனால் அந்த அமைப்பின் முக்கிய வியூக அமைப்பாளர் அல்லாதவருமான கலகொடத்த ஞ}னசார வின் பேச்சுத்தான் (அந்த அமைப்பின் பிரதான வியூக அமைப்பாளரின் பாத்திரம் வண. கிராமே விமலஜோதி அவர்களினால் செயல்படுத்தப் படுகிறது). இதை அவதானமாக கேட்கும்போது எனக்குச் சொல்லப்படுவது, பொது பல சேனாவின் திட்ட நோக்கங்கள் அரசாங்க அதிகாரத்துக்கு சற்றும் குறைவானவை அல்ல என்று. இந்த பிரசங்கம் சமிக்ஞை காட்டுவது அதன் நோக்கம் அரசாங்கத்தை கைப்பற்றும் நோக்கில் அரசாங்கத்துக்கு கட்டளை இடுவது என்று. பொது பல சேனாவின் வாய்ச்சவடால் , அரசாங்கத்தில் தனக்குள்ள உரிமையையும் மற்றும் அது எப்படி நடக்கவேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரமும் தனக்கு உள்ளதாக பறைசற்றும் விதத்தில் உள்ளது. சொந்தம் கொண்டாடும் உரிமை நிச்சயமாக தனிப்பட்டதல்ல. அல்லது அது பொது பல சேனாவுக்கு என்று மட்டுப்படுத்தப் பட்டதுமல்ல. அந்தக் கோரிக்கை அந்த எல்லைக்கு உட்பட்டதல்ல. அரசாங்கத்தில் தனக்குள்ள உரிமையை பற்றி கோரிக்கை எழுப்புவுது, இன மத வாதங்களின் அதாவது சிங்கள பௌத்தம் என்பதன் அடிப்படையில். எப்படியாயினும் அது ஒரு பொய்த் தோற்றம். உண்மையான கோரிக்கை அரசாங்கத்தின் சட்டபூர்வமான உரிமையாளர் என்கிற திட்டவட்டமான சமூக அடுக்கு தாங்களே என்பதுடன், அதனால் அரசாங்கத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க இயலும் என்பதுதான். நோக்கமும் கோரிக்கையும் அரசாங்கத்தை இயக்குவதாகவே உள்ளன. பொது பல சேனா வின் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைக்கும் சமூக அடுக்கினர் சிங்கள பௌத்த பிக்குகள்.
இது புதியது. ராஜபக்ஸக்களின்(ஒருமை அல்லது பன்மை) நீடித்த ஆதரவு பொது பல சேனாவுக்கு உள்ளது என்பதுதான் இதற்கு காரணமாக இருக்கலாம். சில வேளைகளில் அரச உபகரணங்களில் உள்ள சில குறிப்பிட்ட சக்திகள் பொது பல சேனா மூலமாக, 1990 களில் பாகிஸ்தான் ஐ,எஸ்.ஐ, தலிபான்களைக் கொண்டு செய்ததைப் போல இங்கும் செய்ய எண்ணியிருக்கலாம். சில உணர்வுகளில் முன்பு எங்களிடம் இங்கிருந்தவர்களை வைத்துப் பார்க்கும்போது கலகொடாத்தே ஞ}னசார புதிய எல்லே குணவன்சவை போலவும் கிராம விமலஜோதி புதிய மாடிகி பன்னசீகாவை போலவும் தோன்றுகிறார்கள். பிறப்பிடம் மற்றும் ஆதரவு எப்படியிருந்த போதிலும் இந்த நிகழ்வு எல்லா இடத்துக்கும் பரவியிருக்கிறது.
அழுத்கமவில் திரும்பவும் நடத்தப்பட்ட ஜூலை 83 ன் ஆபத்தான மற்றொரு நாடகத்துக்கு நாம் அனைவரும் சாட்சிகளாக இருந்துள்ளோம், இந்;த உணர்வில் அந்த நிலைப்பாட்டில் ஒரு இரட்;டை அதிகாரம் உள்ளது. யார் நிலமையை கட்டுப்படுத்தவது, அரச உபகரணங்களா அல்லது தெருவில் உள்ள சிங்கள பௌத்தர்களா? எப்படியாயினும் பொது பலசேனா ஒரு மேலதிக கேள்வியை அழுத்கமவில் எழுப்பியுள்ளது: அசாங்கத்தையும் அது செல்லும் திசை மற்றும் அதன் செயல்களையும் கட்டுப்படுத்துவது யார்? சட்டபூர்வமான அரசாங்க அதிகாரிகளா அல்லது பிக்குகளா? யார் அதிகம் சட்டபூர்வத் தன்மையை கொண்டவர்கள் தேர்வு செய்யப்பட்ட மக்கள் சக்தியினரா அல்லது துறவறத்தை பின்பற்றும் பிக்குகளா என்பதைப் பற்றி மிகவும் தீவிரமான சட்டபூர்வமான போட்டா போட்டி நிலவுகிறது.
பொது பலசேனாவின் இலட்சியம் என்னவென்றால் அரசாங்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான். கழுகுப் பார்வை கொண்ட பௌத்த பிக்குகள் தங்களின் செல்வாக்கு, அழுத்தம் கொடுக்கும் குழு மற்றும் நாசப்படுத்துபவர்கள் (55 - 56ல் சிங்களம் மட்டும், 57ல் பண்டா செல்வா ஒப்பந்தம், 84ல் அனைத்துக் கட்சிக் மாநாட்டு இணைப்பு) என்று பல வடிவங்களில் நீண்ட பல தசாப்தங்களாக மேற்கொண்டு வரும் பாத்திரத்தின் ஒரு பண்பு ரீதியான விரிவாக்கம் தான் இது. கலகொடாத்தே ஞ}னசாரவின் பேச்;சு, அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் கோரிக்கையை முன் வைக்கும் புதிய நோக்கமுடையதாகவும் மற்றும் உண்மையில் அத்தகைய கட்டுப்படுத்தும் சக்தியுள்ளவராக அல்லது அரச அதிகாரத்துக்கு சவால்விடுபவரான (தேர்தல் மூலமான நிருவாகத்திற்கு மாறுபட்டதாக) புதிய சுய தோற்றத்தையும் வெளிப்படுத்துகிறது. ஞ}னசார அரசியலமைப்பு ரீதியான அரசியல் அதிகாரம் கொண்ட தலைவர்களுக்கு மேலாக ஆயுதப்படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு நேரடியாக உரைகள் மற்றும் முறையீடுகள் செய்பவராக உள்ளார். ஆயுதப்படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நினைவூட்டி அவர் அரசியல் சக்திகளை எச்சரிக்கை செய்கிறார்.
இது எளிதான ஒரு மூலோபாயம்: அரச இயந்திரங்களின் சமூகவியல் (இன மொழியியல்பு, இன மதவியல்பு) அமைப்பு, அரசாங்கத்தை பௌத்த சிங்கள பாத்திரங்களின் முன்னணி நலன்களுக்கு சாதாரணமாக செயல்படாது ஆனால் மிகவும் வெளிப்படையான முறையில் நேரடியான ஆதிக்கம் தொடங்கி அதிகாரம்,பொருளாதார இருப்பு,மற்றும் இருத்தியல் இடைவெளி என்பன வரையான வீச்சில் தனித்துவமான ஏகபோகமுடைய பாத்திரத்தை கையாள உந்துதல் வழங்குகிறது. பொது பலசேனா வெறும் ஒரு சிங்கள பௌத்த ஆட்சிக்காக உரையாற்றவில்லை, ஆனால் மிகவும் பெருந்தன்மையுடன் விளக்கினால் இனவெறியுள்ள அல்லது இன்னமும் துல்லியமாகச் சொன்;னால் அடிமைப்படுத்த எண்ணும் ஒரு சமூக அரசியல் மாதிரிக்காக உரையாற்றுகிறது - அதற்கு துணையாக பயங்கரமும் திகிலும் இணைந்துள்ளன. அரசாங்கததை கட்டுப்படுத்தும் முகவர்கள் - அரசாங்கத்தின் அபேட்சகரான இயக்குனர்கள் - பௌத்த பிக்குகள் அதில் முன்னணிப் படையாக இயங்குவது பொது பலசேனா.
இறந்த மூன்று முஸ்லிம்களும் கொல்லப்பட்டது துப்பாக்கிச் சூட்டினால் எனத் தெரிகிறது, இது ஒரு புதிய நிகழ்வு ஆயுதம் தாங்கிய போராளிகள் இந்த நாடகத்தில் பங்கேற்றிருக்கலாம். 19ம் நூற்றாணடில் அமெரிக்காவில் இருந்த கு குளுக்ஸ் கிளான் இரகசிய சங்கத்தை போன்ற இந்த குழுவினருக்கு தங்களை மறைப்பதற்கு அவர்களைப் போல போர்வைகளும் மற்றும் முகமூடிகளும் தேவைப்படவில்லை. உண்மையில் பொது பலசேனாவின் திட்டம் ஆயுதப்படை மற்றும் காவல்துறை என்பனவற்றை சிங்கள பௌத்த துறவிகளின் போராளிகளாக மாற்றம் செய்வதுதான்.
இந்த திட்டம் வெற்றியடைய முடியுமா? இந்த மோசமான திட்டம் கருக்கட்டத்தொடங்கி ஆறு தசாப்தங்கள் அல்லது அதற்கும் அதிகமான காலமாகிவிட்டது. இந்த கருத்தியல் மற்றும் விழிப்பணர்வு, வண. சோமாவின் மரணச்சடங்கில் இடம்பெற்ற சொல்லாட்சிகளினால் நச்சுத்தன்மையின் உச்சக்கட்டத்தை அடைந்தது (தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக காண்பிக்கப்பட்டது). முட்டை இப்போது குஞ்சு பொரிக்கத் தொடங்கியுள்ளது மற்றும் அரக்கன் தனது செதில் தலையை வெளிக்காட்டுகிறான். அந்த அரக்கன் வெறுமே இனவாதம்,மத பேரினவாதம், தாராளவாத முதலாளித்துவம். புதிய ஏகாதிபத்திய சதி அல்லது ராஜபக்ஸ வாதம் போன்ற எதுவுமல்ல. அது (நான் ஒரு வருடத்துக்கு முன்பு விளக்கியதை போல) இன - மத பாசிசம் மற்றும் அதன் திட்டம் மதவாத பாசிசம் என்கிற ஒரு சமூக மற்றும் அரசியல் ஒழுங்கை நிறுவுவது ஆகும். அந்த பாசிச கதாபாத்திரங்கள்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றன.
இந்த வழிக்கு அப்பால், ராஜபக்ஸக்களின் பங்கிற்கு தந்திரோபாயமான குறுகிய தேர்தல் ஆதாயம் அடையும் திட்டமும் உள்ளது. அழுத்கம பிரசங்கத்தில் ஜனாதிபதி ராஜபக்ஸ வுக்கு கலகொடாத்தே ஞ}னசார தெரிவித்த பரிகாசமான குறிப்புகள் முக்கியமாக குறிப்பிடத்தக்கவை. இந்த நாட்டில் ஒரு சமூக மாற்றம் தோன்றியுள்ளது அதை அதிகார மாற்றமாக பிரதியாக்கம் செய்யலாம் என பொது பலசேனா நம்புகிறது. அழுத்கம வெறும் ஒரு பரீட்சைக் களம் மட்டுமே. பொது பலசேனாவின் மூலோபாயத்தின் கூட்டணி பிக்கு,கும்பல் மற்றும் இராணுவம் ஆகிய மூன்றும்தான். முதலாவது திட்டம், இந்த மூன்று சக்திகளையும் பிக்குகளின் ஆதிக்கத்தின் கீழ் ஆட்சி செய்யும்: மதவாத பாசிசம். இரண்டாவது திட்டம், புத்த பிக்குகளின் பின்துணையுடன் இராணுவ ஆட்சியை நிறுவுவது: சிங்கள பௌத்த சதி மற்றும் படை ஆட்சி. மூன்றாவது திட்டம், அநேகமாக மஞ்சூரியன் வேட்பாளர் சூழ்நிலையை போன்றதாக இருக்கலாம்: கிட்டத்தட்ட முதலாவது திட்டத்துக்கு பொருத்தமான ஒருவரை நாட்டின் தலைவராக நிறுவுவது. முஸ்லிம் எதிர்ப்பு கலவரம் மட்டமல்லாது ஆனால் சிறுபான்மை எதிர்ப்பு கலவரத்தையும் கூட நாடு முழுவதிலும் தூண்டிவிடுதல், வடக்கு மாகாணசபையை இராணுவம் கைப்பற்றுதல்,1959ல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஒரு பிக்குவால் கொல்லப்பட்டதை மீண்டும் நடித்தல், அனைத்து அதிகாரத்தையும் கைப்பற்ற அல்லது தங்களுக்கு விருப்பமான ஆட்சியாளரை நிறுவுவதற்காக குழப்பமும் கலகமுhன ஒரு நிலையை தோற்றுவிப்பது இந்த திட்டத்;தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
பொது பலசேனாவை எப்படி திருப்பி அடிப்பது? ஒன்றினது அல்லது மற்றதினது மூலோபாய தகுதிகளைப் பற்றி விவாதிப்பது பயனற்றது. அதை மிகவும் சிறப்பான யதார்த்த வழியில் செயற்படுத்த வேண்டும் அல்லது பல முனைகளிலில் இருந்தும் சாத்தியமான அளவுக்கு எதிர்ப்பை தூண்டிவிட வேண்டும். இந்த அடிப்படை பொது பலசேனாவின் நலன்களுடன் அல்லது அதின் மதிப்புகளுடன் மோதலை மேற்கொள்ளும். பொது பலசேனா மீது, முற்றிலும் மதிப்பின் அடிப்படையில் அல்லது எண்ணங்களின் அடிப்படையிலான எதிர்ப்பு தேவையானதும் மற்றும் பாராட்டத் தக்கது என்றாலும் அது தேவையிலும் குறைவான அளவு பரந்ததாகவும் மற்றும் ஆழமானதாகவும் இருக்கும். நலன்களை அடிப்படையாக கொண்ட மூலோபாயத்துக்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டிய அவசியம் இல்லாவிடினும் அது அதிகம் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. ஞ}னசாரவின் பேச்சும் அதைத் தொடர்ந்து அழுத்கமவில் உண்டான வன்முறைகளுக்குப் பிறகு, அங்கு ஒரு தெளிவான நலன்களின் மோதல் ஆட்சியாளர்களுக்கும் மற்றம் பொது பலசேனாவுக்கும் இடையில் உருவாகும், அது அரசாங்கததை யார் இயக்க வேண்டும் மற்றும் அரச இயந்திரங்கள் யாரை அனுசரிக்க வேண்டும் என்பதில் உள்ள பங்கிற்கான போட்டியாளரை தெளிவுபடுத்தும். ஒரு முதலாளிக்கும் மற்றும் தான் முதலாளியாக வேண்டும் அல்லது தானே முதலாளி என நினைக்கும் ஒருவருக்கும் இடையில் எப்போதும் ஒரு முரண்பாடு உள்ளது. ராஜபக்ஸக்கள்தான் தற்சமயம் பதவியில் உள்ள அதிகார சக்திகள் பொது பலசேனா ஒரு தீவிரமயமான புனராய்வு சக்தி. முன்னவர்களுக்கும் மக்களிடையே பரந்த அதிர்வு உள்ளது.
லியோன் ட்ரொஸ்கி சொன்ன புழ்பெற்ற வார்த்தைகள், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பிசாசின் பாட்டியைக்கூட இணைத்துக் கொள்ள தனக்கு விருப்பம் உள்ளது என்பதாகும். அதேவேளை அனைத்து அரசியற் கட்;சிகள் மற்றும் ஆட்சியாளர்கள் (மிகவும் குறிப்பாக ராஜபக்ஸக்கள் உட்பட) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த பிரச்சினைக்கு பங்களிப்பு செய்துள்ளார்கள் அதன்படி அது ஒரு பகுதியாக இருந்தால் சாத்தியமானளவு அவர்களும் அந்த தீர்வில் ஒரு பகுதியாவார்கள். பொது பலசேனாவின் ஆக்க சக்தியாக ராஜபக்ஸக்கள் உள்ளதால் பாரபட்சமற்ற வகையில் பொது பலசேனாவுக்கு மிகவும் எளிதில் கிடைக்கும் எதிர்பலமாகவும் மற்றும் எதிர் சமநிலையாகவும் இருப்பாhகள் மற்றும் யதார்த்த ரீதியாக அதை தவிர்க்கவும் முடியாது. எனினும் தற்போதுள்ள அதிகார மையங்களினால் எதிரீடு செய்யப்படும் யதார்த்த மூலோபாயம் மட்டும் நியாயப+ர்வமான ஒன்று அல்ல. ஜேவிபி முன்னணி வகிக்கும் பிரதான சக்தியான பரந்த இடது முன்னணி (அதேவேளை சோசலிச முன்னணிக் கட்சி(எப்.எஸ்.பி) மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பலரையும் இதில் சேர்க்கலாம்) இதற்கான மற்றொரு பாதை, இது நிச்சயமாக பாசிசத்துக்கு எதிரான பலவழி பாதையிலான மூலோபாயம் ஆகும்.
ஸ்ரீலங்கா இராணுவத்தின் அதிகாரிகள், நிர்வாக அட்சியாளர்கள், நீதித்துறை, பெரு நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள், மாணவர் சங்கங்கள், தொழில் நிபுணர்கள், அரசியற் கட்;சிகள், ஊடகங்;கள், அறிவுஜீவிகள், சர்வதேச அமைப்புகள் (ஸ்ரீலங்காவின் நண்பர்கள் உட்பட) ஆகிய அனைத்துக்கும் பொது பலசேனாவின் திட்டங்கள் மற்றும் நலன்கள் எவ்வளவு அழிவுகரமானவை என்பதை அறிய வைப்பதுடன் அவற்றை எதிர்த்து தோற்கடிக்கும் உந்துதலை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதற்கான மிகவும் பயனுள்ள ஆயுதங்கள், பொது பலசேனாவின் பேரணியை நிறுத்துவதுடன் விவேகமான தேசப்பற்று, சிங்கள ஆர்வலர்களிடம் விடுக்கப்படும் நியாயமான முறையீடு மற்றும் உண்மையான பெருந்தன்மையை உள்ளடக்கிய ஒரு பன்முக பௌத்த மதம் என்பனவாக இருக்கும்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Aucun commentaire:
Enregistrer un commentaire