நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை தமிழ் வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் இணைந்து வீதியில் இறங்கி வெள்ளிக்கிழமை(6) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பாடசாலைக்கு சொந்தமான இடத்தில் தலவாக்கலை லிந்துலை நகரசபையினால் வர்த்தக கட்டிடங்கள் அமைக்கபட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
'எமது பாடசாலை காணி எமக்கே வேண்டும். இது குறித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான கவனம் செலுத்த வேண்டும். அவர், இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைத்தந்து எமது பிரச்சினைக்கு ஒரு முடிவை பெற்றுக்கொடுக்கும் வரை நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக இல்லை' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire