இமாச்சலபிரதேசத்தில் உள்ள மாண்டி நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தாலோட் பகுதியில் பியஸ் ஆற்றில் மூழ்கி ஐதராபாத்தை சேர்ந்த 24 பொறியியல் மாணவர்கள் பலியானதாக கூறப்படுகிறது. அப்பகுதிக்கு சுற்றுலா வந்த அம்மாணவர்கள் இந்த ஆற்றில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் பாயும் தண்ணீரின் அளவு அதிகரித்து அனைவரும் ஆற்றில் மூழ்கியுள்ளனர். இதில் பெண்கள் சிலரும் அடங்குவர் என கூறப்படுகிறது. லார்ஜி நீர்மின் திட்டம் மூலம் 126 மெகா வாட் மின் உற்பத்தி தயாரிக்கும் பொருட்டு அங்குள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து இந்த தண்ணீர் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஷிம்லாவை சேர்ந்த அதிகாரிகளின் கூற்றுப்படி 18 பையன்களும், 6 பெண்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. எந்த வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் நிலவும் கும்மிருட்டு காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire