திருகோணமலையில் பொலிஸ் திணைக்களம் சிவில் பாதுகாப்பு குழு இணைந்து நடாத்திய இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் எத்தாபெந்திவெவ பகுதியில் நடாத்தப்பட்டது.
பொது மக்களினதும் பொலிசாரினதும் தொடர்பினை வலுப்படுத்தும் நோக்கில் கோமரங்கடவெல - மொறவெவ பிரதேசத்துக்கு பொறுப்பான உப பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்னவின் வேண்டுகோளின் படி மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிக விஜயசிங்க தலைமையில் இடம் பெற்றது.
இந்த நடமாடும் ஆயுர் வேத சேவையில் நோயாளர்களை பரிசோதித்து இலவச மசாஜ் சேவையும் வழங்கப்பட்டது. முதலாவது இலவச சேவையினை பிரதேச செயலாளர் பிரேமதாச ஆரம்பித்து வைத்தார்.இச்சேவையில் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு துவிச்சக்கர வண்டிக்கான அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு காப்புறுதி சேவை மற்றும் அனைத்து வைத்திய சேவைகளும் இடம் பெற்றது.

Aucun commentaire:
Enregistrer un commentaire