பெர்ன் - சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களின் விபரத்தினை இந்தியாவிடம் கொடுக்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கறுப்பு பணத்தினை மீட்க பிரதமர் மோடி சிறப்புக் குழு ஒன்றினை நியமித்துள்ளார். இந்தக் குழு கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் விபரங்களைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. சுவிட்சர்லாந்தைச் சார்ந்த அரசு அதிகாரி, இந்த விபரங்களை பரிமாறிக் கொள்ள தங்களது அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கறுப்பு பண மீட்புக் குழுவின் தலைவர் ஷா, சுவிட்சர்லாந்து அரசிடமிருந்து விபரங்கள் கிடைத்ததும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் மொத்தம் 283 வங்கிகள் உள்ளன. இதில் யு.பி.எஸ்., மற்றும் கிரெடிட் சுசி ஆகியவை மிகப் பெரியன.
இந்தியர்களின் பணம் ஏறத்தாழ 14,000 கோடிரூபாய் கறுப்பு பணமாக சுவிஸ் வங்கிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire