அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்களை அதிரடியாக நாடுகடத்தும் செயற்பாடு ஒன்றை தொடக்கி உள்ளது. தற்கொலை செய்தாலும் நாடு கடத்தப்படுமெனெ அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதன் பிரகாரமாக அனைத்து வழக்குகளும் தோல்வி அடைந்தவர்களை உடனடியாக நாட்டை விட்டு செல்ல வேண்டுமென சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர் தெரிவிக்கையில்,
கடந்த 2012ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வந்ததாகவும், தற்போது தனது வழக்குகள் தோல்வியடைந்த நிலையில் அவருக்கு வழங்கப்படிருந்த அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
மேலும் நேற்றைய தினம் குடிவரவு திணைக்கள அதிகாரி ஒருவர் இவருடன் தொலைபேசி மூலமாக தொடர்பு ஏற்படுத்தியதாகத் தெரிவித்த புகலிடக் கோரிக்கையாளர், உடனடியாக சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றும், அப்படி மறுக்கும் பட்சத்தில் பலவந்தமாக நாடுகடத்தப்படுமெனவும் அறிவிக்கப்படுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு புகலிடக் கோரிக்கையாளர் நான் நாட்டுக்கு செல்வதை விட இங்கு தற்கொலை செய்துவிடலாம் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் குடிவரவு அதிகாரி அவரிடம் கூறியதாவது,
இங்கு தற்கொலை செய்வதை விட நாட்டிற்கு சென்று தற்கொலை செய்தால் எமக்கு செலவு குறைவாகும். அதுபோன்று உங்களது குடும்பமும் பக்கத்தில் இருக்கும் என ஆணித்தரமாக தெரிவித்ததாக புகலிடக் கோரிக்கையாளர் மிகவும் மனவேதனையுடன் தெரிவித்தார்.
இவ்வாறு குடிவரவு அதிகாரிகள் செயற்படுகின்றமை மிகவும் வேதனை அளிப்பதாக மேலும் அவர் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire