சம்மந்தன் சொல்கிறார் -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்திருக்கிறது.
ஆகவே தமிழ் மக்கள் மைத்திரிக்கே வாக்களிக்க வேண்டும். மைத்திரிக்கு வாக்களிக்கும்படியே நாம் மக்களைக் கேட்கின்றோம்.
அப்படியென்றால் -
மைத்திரியின் ஆட்சியில் இனப்பிரச்சினைக்கான தீர்வு வருமா?
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகள் கிட்டுமா?
எத்தகைய அரசியல் தீர்வு கிடைக்கும்?
அப்படியென்றால் அது எவ்வளவு கால எல்லையில் நடக்கும்?
இதற்ககெல்லாம் மைத்திரியுடன் கூட்டு வைத்திருக்கும் ஜாதிக ஹெல உறுமயவும் ஜேவிபியும் உடன்படுமா?
அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா?
வடக்குக் கிழக்கிலிருந்து படையினர் விலக்கப்படுவார்களா?
படையினரின் பயன்பாட்டிலிருக்கும் காணிகள் விடுவிக்கப்படுமா?
உயர் பாதுகாப்பு வலயங்கள் முற்றாகவே நீக்கப்படுமா?
மாகாணசபைகளுக்கான அதிகாரம் எதிர்பார்ப்பதைப்போல முழுமையாக வழங்கப்படுமா?
ஆளுநர்கள் மாற்றப்படுவரா?
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட நிவாரணம் கிடைக்குமா?
போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டு மாற்றுவலுவுடையோராக உள்ளவர்களுக்கான உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுமா?
குறிப்பு -
இந்தக் கேள்விகளுக்கான பதிலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் சொல்லப்போவதில்லை. ஆனால், படித்தவர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நம்புகின்றவர்களும் இதற்கான பதில்களைக் கண்டு பிடிக்க வேண்டும்.
இந்தக் கேள்விகளுக்கான பதிலை மைத்திரியிடம் கேட்காமல் எப்படி மைத்திரிக்கு ஆதரவளிப்பத்கு சம்மந்தன் துணிந்தார்?
ஜாதிக ஹெலஉறுமயவுடன் உடன்படிக்கை செய்த மைத்திரி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடும் முஸ்லிம் தரப்புகளோடும் உடன்படிக்கை செய்யாமல் விட்டது ஏன்?
ஜாதிக ஹெலஉறுமயவுடன் உடன்படிக்கை செய்த மைத்திரி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடும் முஸ்லிம் தரப்புகளோடும் உடன்படிக்கை செய்யாமல் விட்டது ஏன்?
உடன்படிக்கையோ, வாக்குறுதியோ இல்லாமல் எதற்காக இவ்வளவு அந்தரப்படுகிறார் சம்மந்தன்?
அபிப்பிராயம்
எந்த வகையான உத்தரவாதமும் இல்லாமல் ஒரு தரப்புக்கு வாக்களிக்கும்படியும் ஒரு தரப்பை ஆதரிக்கும்படியும் மக்களை கேட்கின்ற கூட்டமைப்பு சொந்த மக்களை அடகு வைக்கிறது. இதைத் தமிழ் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
Aucun commentaire:
Enregistrer un commentaire