இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக தண்டனை வழங்கப்போவதாக இதுவரை கூறிவந்த அமெரிக்காவை நோக்கி ராஜபக்ச குடும்பத்தினர் பயணமாகின்றனர். பசில் ராஜபக்ச தனது மனைவியான புஷ்பா ராஜபக்சவுடன் லோஸ் எஞ்ஜல்ஸ் நோக்கிப் பயணமானார். இன்று அதிகாலை 2.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பதாகவே கம்பகாவில் அமைந்திருந்த தனது அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் அனைத்தையும் வெளியேற்றிய பசில் அலுவலகத்தைச் சுத்தப்படுத்தியிருந்தார். அமெரிக்காவில் வாழ்ந்துவந்த பசில் ராஜபக்ச மகிந்த அதிகாரத்திற்கு வந்ததும் மீண்டும் இலங்கைக்கு வந்தார்.
தேர்தலின் இறுதிக் கட்டங்களில் பசிலுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு முரண்பாடு என கொழும்பில் உயர் மட்ட வதந்திகள் உலாவின.
இலங்கையின் மருத்துவத் துறையில் முதலிட்டிருந்த கோத்தாபய ராஜபக்ச லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் என்ற மருத்துவமனையை நடத்திவந்தார். அதன் தலைமைப் பதவியிலிருந்து கோத்தாபய விலகியுள்ளார். இந்தியாவின் அப்பலோ மருத்துவமனையால் இலங்கைக் கிளையைத் தனது பினாமிகள் ஊடாக வாங்கியிருந்த கோத்தாபய அதன் தலைமைப் பதவியிலிருந்து வெளியேறியுள்ளார்.
கோத்தாபயவினால் நடத்தப்பட்ட இலங்கையின் தனியார் இராணுவ நிறுவனமான ரக்ன ஆர்காஷ லங்கா தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதன் இணையத்தளத்தில் கோத்தாபயவின் பெயர் நீக்கப்படவில்லை.|http://www.rallsecurity.com/about-us-overview.html|
சர்வாதிகாரி ராஜபக்சவின் குடும்பத்திடமிருந்து ஏகாதிபத்திய அடியாட்களின் கைகளிற்கு மாற்றப்பட்ட அரசியல் அதிகாரம் மக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக நவீன ஏகாதிபத்திய நட்பு அரசு ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தனியார் குடும்பத்திடமிருந்த அதிகாரம் இப்போது ஏகாதிபத்தியத் தரகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தால் சூறையாடப்பட்ட இலங்கை இனிவரும் காலங்களில் அமெரிக்க அரச தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளால் ஒட்டச் சுரண்டப்படும். .... நன்றி..இனியொரு
Aucun commentaire:
Enregistrer un commentaire