சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து தாம் இன்று விலகிக் கொள்வதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சியின் தலைமைப் பதவியை ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை, சுதந்திரக் கட்சியின் செயலர் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு அனுப்பியுள்ளார்.
இதனிடையே தற்போது ஆரம்பமாகியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
தற்போது ஆரம்பமாகியுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்கு வருகை தந்துள்ளார்..........................இதெல்லாம் டூப்பு சட்டம் ஒன்றேதான் டாப்பு....
Aucun commentaire:
Enregistrer un commentaire