mardi 13 janvier 2015

ரேஸ் கோர்ஸ் இரவு விடுதி ஊழியர்களை மிரட்டிய மைத்திரியின் மகன் :

dahamஅதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களும், ஊழலில் ஈடுபடுபவர்களும் உடனுக்குடன் தண்டிக்கபடுவார்கள் என்ற மைத்திரிபால சிரிசேனவின் கூச்சலின் எதிரொலி அழியும் முன்னரே அவரது மகன் கொழும்பில் தெருச் சண்டித்தனத்தில் இறங்கியுள்ளார்.
தனது நண்பர்களுடனும் மெய்ப்பாதுகாவலர்களுடனும் ஏழு வாகனங்களில் கொழும்பு ரேஸ் கோர்ஸ் இரவு விடுதியில் கடந்த பத்தாம் திகதி இரவு வந்திறங்கிய மைத்திரிபால சிரிசேனவின் மகன் டாகம் சிரிசேன அங்கிருந்தவர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.
விடுதியின் பாதுகாப்பு ஊழியர்களிடம் பாதுகாப்பு கமராக்களை நிறுத்துமாறு டாகம் கட்டளையிட்டார். அவர்கள் அதற்கு மறுக்கவே மெய்ப்பாதுகாவலர்கள் உத்தரவிட கமெராக்கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் தனது கூத்தை ஆரம்பித்த டாகம் விடுதியில் மற்றவர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.
இத் தகவல்களை லங்கா நியுஸ் வெப் தெரிவித்துள்ளது.
மகிந்தவின் மகன்களின் தொடர்ச்சியாக மைத்திரியின் மகன் தோன்றியுள்ளார். இது தொடர்பாக மைத்திரியின் புதிய அரசியல் கலாச்சாரம் எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
2013 ஆம் ஆண்டு மைத்திரிபால சிரிசேனவின் மகன் குழுவினரால் கடற்கரை விடுதியொன்றில் தாக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதும்,
அதனை மூடி மறைக்க மைத்திரிபால அதிகாரத்தைப் பயன்படுத்தியதும் பழைய செய்தி.
மேட்டுக்குடிகளின் இரவு களியாட்ட விடுதியில் நடந்த மேட்டுக்குடி மோதல் என்பதற்கு அப்பால் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய டாகம்,  மைத்திரி ஆட்சிக்கு முன்னுரை சொல்கிறார் என்பதே முக்கியமானது.                                            ............நன்றி இனியொரு
Minister Maithripala Sirisena’s Attempt in 2013 to Obstruct Justice to Safeguard Son Daham who Attacked Asela Waidyalankara

Aucun commentaire:

Enregistrer un commentaire