dimanche 21 février 2016

தேமுதிக அனி உருவாக்கதின் முன்னோடி அருண்பாண்டியன் உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் தேமுதிகவை விட்டு விலகில்

தேமுதிக அனி உருவாக்கதின் முன்னோடி அருண்பாண்டியன் உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் தேமுதிகவை விட்டு விலகில்:
பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏவான அருண்பாண்டியன், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் ஆகியோர் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள். தேமுதிக கட்சித்தலைவர் விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இருவரும் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தொகுதியின் வளர்ச்சி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று மதுரை மத்திய தொகுதி சுந்தரராஜன் மற்றும் திட்டக்குடி தமிழழகன் ஆகிய இரு தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவை திடீரென நேரில் சந்தித்துப் பேசினர். முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது. தேமுதிக வட்டாரம் இந்த எம்.எல்.ஏக்களின் செயலால் பெரும் அதிர்சசியில் மூழ்கியுள்ளது. கட்சி உடையுமா என்ற பெரும் பரபரப்பும் கூடியுள்ளது.அருண்பாண்டியன் எங்களது பிராண்ட் எப்போது மாற்றப்படும் என கேள்வி எழுப்பினார்
கேள்வி எழுப்பியதற்கு முதல்வர் ஜெயலலிதா புன்னகைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire