வீடு இல்லாதவர்களுக்கு ரூ.5 லட்சத்தில் வீடு வழங்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக டெல்லியில் மாநாடு நடந்தது. இதில் மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:–
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் நவீன நகரங்கள் அமைப்பதற்கு மட்டுமின்றி ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்கவும் உறுதி பூண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சோதனை முயற்சியாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் 70 சதவீத காங்கிரீட், மணல், உருக்கு ஆகியவற்றை கொண்டு வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு வருகிற 20–ம் தேதி திறக்கப்பட உள்ளது.
அந்த வீட்டை கட்டுவதற்கு சதுர அடிக்கு ரூ.1000 மட்டுமே செலவானது. இது போல வீடுகள் கட்டினால் 450 சதுர அடி வீட்டை நம்மால் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான விலையில் வழங்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டுக்கு மானியமாக ரூ.1½ லட்சம் வழங்கப்படும். ஆகையால் வீடு கட்டுவதற்கு ரூ.3½ லட்சம் மட்டுமே செலவிட வேண்டி இருக்கும். மேலும் இத்தகைய வீடுகள் கட்டுவதற்கு 7 முதல் 7.5 சதவீத வட்டியுடன் கடன் அளிக்கப்படும்.
தற்போது நம் நாட்டில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக விலை கொடுத்து வீடு வாங்கும் வசதி 1 சதவீதம் பேருக்கே இருக்கிறது. மிகக் குறைந்த விலையில் வழங்கினால் மட்டுமே மற்றவர்களால் வீடுவாங்க முடியும். எனவே ரூ. 5லட்சத்துக்கும் குறைவான விலையில் வீடு வழங்கினால் அதை 30 சதவீதம் பேர் வாங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire