முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ பாரிய ஊழல், மோசடி
தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று ஆஜராகி
வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். அவரிடம் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் துருவித்துருவி விசாரணை நடத்தியுள்ளனர். மஹிந்தவின்
இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ஷ நிதி மோசடி தொடர்பில் கைதாகி
வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,
நேற்றைய தினம் ஷிரந்தி ஆணைக்குழுவில் ஆஜராக இருந்தமை பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியிருந்தது. கடந்த
ஆட்சிக் காலத்தில், ஊடக இணைப்பாளராக செயற்பட்ட ஒருவருக்கு குறைந்த
மதிப்பீட்டில் வீடொன்றை வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம்
தொடர்பிலேயே இவரிடம் நேற்று இரு மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு,
வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டை அவருக்கு வழங்குமாறு ஷிரந்தி ராஜபக்ஷ தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை,
அந்த வீடு, ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியானது எனக் காட்டப்பட்டு விற்பனை
செய்யப்பட்டுள்ள போதிலும், அதன் உண்மையான பெறுமதி 55 இலட்சம் ரூபா என
பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்
செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன்,
இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க ஷிரந்திக்கு கடந்த
திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும், அவர் அன்றையதினம்
சமுகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - இன்னும் பார்க்க:
Aucun commentaire:
Enregistrer un commentaire