மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் வலது கரமாக விளங்கிய சோட்டாராஜன் அண்மையில் இந்தோனேஷியாவில் பிடிபட்டார். இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்ட அவர் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான பல வழக்குகளில் போலி பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் வலது கரமாக விளங்கியவர் சோட்டா ராஜன். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், மிரட்டல் என பல வழக்குகள் உள்ளன. ஒரு கட்டத்தில் தாவூத்துக்கும், சோட்டாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சோட்டா ராஜனை கொலை செய்ய தாவூத் ஆள் நியமித்தார். இதை தொடர்ந்து சோட்டா ராஜன் இந்தியாவிலிருந்து வெளிநாடு தப்பினார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி தாவூத் இப்ராகிமும் வெளிநாடு தப்பினாார். இருவரையும் சிபிஐ தேடி வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி சோட்டா ராஜன் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு வந்த போது இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் காரணமாக போலீசிடம் சிக்கினார். நவம்பர் 6ம் தேதி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் கடந்த 2003ம் ஆண்டு இந்தியாவிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் ஆஸ்திரேலியா தப்பினார். பெங்களூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணிபுரிந்து 3 பேர் இவருக்கு போலி ஆவணங்கள் அடிப்படையில் பாஸ்போா–்ட் கிடைக்க உதவி செய்துள்ளனர்.
தற்போது இவர்கள் ஓய்வு பெற்று விட்டனர். இவர்களை சிபிஐ கைது செய்துள்ளது. இந்த வழக்கில் சோட்டா ராஜன் உள்பட 4 பேர் மீது நேற்று பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதை தொடர்ந்து அவர் மீதான மற்ற வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை வரிசையாக தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

Aucun commentaire:
Enregistrer un commentaire