நாளை ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்திற்கும், நாளைமறுதினம் திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஹுசைன் அங்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அது தவிர, போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதன் பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் கொழுப்பில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து ஐ.நா. தீர்மானம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஹுசைன் பேச்சு நடத்தவுள்ளார்.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் இலங்கை வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹிந்த ஆதரவு பொது எதிரணியினர் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். கொழும்பு 07, நகர மண்டபம், லிப்டன் சுற்றுவட்டத்துக்கு முன்னால் மாலை 3 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது என்று மஹிந்த ஆதரவு பொது எதிரணியினரின் முக்கிய உறுப்பினர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire