இது குறித்து சர்வதேச வானியற்பியல் மற்றும் வான வியல் பல்கலைக் கழக
மையத்தின் இயக்குனர் சோமக் சவுத்ரி கூறும்போது, ‘‘சர்வ தேசக் குழுவுடன்
இணைந்து இதனை கண்டுபிடித்துள்ளோம். தற்போதைக்கு வேறு எந்த தகவலையும்
தெரிவிக்க முடி யாது. முறைப்படி இதற்கான அறிவிப்பு நாளை (இன்று) வெளி
யிடப்படும்.
இந்த புதிய அறிவியல் கண்டுபிடிப்பு துகள் கண்டுபிடிப்பை போன்று உலகம் முழுவதும் பெரும் கவ னத்தை ஈர்க்கும்’’ என்றார்.
இந்த அறிவிப்பு மூலம் பிரபஞ்சத்தின் ரகசியத்தை புரிந்துகொள்வதில் விஞ்ஞானி
கள் செய்துள்ள அடுத்தகட்ட சாதனை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விஞ்ஞானிகள்
இந்த அறிவிப்பு விழா வில் பங்கேற்கும்படி இந்திய விஞ்ஞானிகள் கே.கஸ்தூரி
ரங்கன், அனில் ககோட்கர், ஸ்ரீகுமார் பானர்ஜி மற்றும் கிரண் குமார்
ஆகியோர் அழைக்கப் பட்டுள்ளனர்.
இவர்களுடன் நாடு முழுவதும் இருந்து 12க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகளும், ஆராய்ச்சி யாளர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire