நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2015-16 நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் சீனாவுடன் போட்டியிட ஏற்றுமதி விரைவு கதியில் வளர்ச்சியுறுவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஒட்டு மொத்த ஏற்றுமதி முதல் மூன்று காலாண்டுகளில் சுமார் 18 சதவீதம் குறைந்ததாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சேவைகள் ஏற்றுமதி இந்தியாவின் உற்பத்திப் பொருள் ஏற்றுமதி, உலக சேவைகள் ஏற்றுமதி ஆகியவற்றைவிட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அது சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவின் நடுத்தரகால வளர்ச்சித் திறனை 8 முதல் 10 சதவீதமாக நிலைபெறச் செய்ய விரைவான ஏற்றுமதி வளர்ச்சி அவசியம் என்கிறது ஆய்வறிக்கை. சீனாவைப் போன்ற வளர்ச்சிப் பாதை அடைய வேண்டுமானால் இந்தியாவின் போட்டியிடும்தன்மை மேம்பாடு அடைந்து அதன் சேவைகள் ஏற்றுமதி உலக சந்தையில் தற்போதுள்ள 3 சதவீத்திற்குப்பதிலாக 15 சதவீதப் பங்கினை அடைய வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
வர்த்தக கொள்கை பிரச்சினை பற்றி குறிப்பிட்ட ஆய்வறிக்கை 5 விஷயங்கள் குறித்து நீண்டகாலம் நடத்தப்படாமல் இருந்த உள்ளாய்வு நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. அவை வருமாறு:
உலக சுகாதார நிறுவன விதிகளின் படி விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தல், விவசாயிகளின் சலுகைகள் மீது மாறிவரும் வர்த்தகக் கொள்கைகள் பாதிப்பினைக் குறைத்தல், வர்த்தக பேச்சு வார்த்தைகளின் போது இந்தியாவை எதிர் நோக்கும் “பெரிய ஆனால் ஏழ்மையான” என்ற பிரச்சினைக்கு தீர்வு காணுதல், வெளிச் சூழ்நிலைகள் கொண்டு வரும் அழுத்தங்களைக் கையாளுதல், வர்த்தகம் தொடர்பாக உலக நாடுகளுடன் மேலும் விரிவாகத் தொடர்பு கொள்ளுதல்.
வேளாண்மையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலைமை மாறியிருப்பதாக வலியுறுத்திக் கூறும் ஆய்வறிக்கை நாட்டின் வேளாண்மை அதிகப் போட்டியிடும் தன்மையுடன் உள்நாட்டு ஆதரவையே அதிகம் நம்பி இருப்பதாக தெரிவிக்கிறது. உலக வர்த்தக அமைப்பு சார்ந்த இந்தியாவின் பொறுப்புகள் பெருமளவில் இந்த உள்நாட்டு ஆதரவு மாறுதல் அடிப்படையில் அமைய வேண்டும் என்று ஆய்வு அறிக்கை யோசனை கூறுகிறது. இந்தியா தனது மிக உயரிய வரி கட்டுப்பாடுகளை குறைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக உள்நாட்டு ஆதரவை அதிக அளவில் வழங்குவதற்கு அதிக சுதந்திரம் கொடுப்பதை கருத வேண்டும் என்றும் கூறுகிறது.
வர்த்தகக் கொள்கை வேறு காரணங்களுக்காகவும் பாதிப்புக்குள்ளாகிறது என்று தெரிவிக்கும் ஆய்வறிக்கை சர்வதேச சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள குழப்பமும் உலகத் தேவை குறைந்து வருவதும் அதில் ஒன்று என்று கூறுகிறது. பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளின், குறிப்பாக கீழ் நிலை நிறுவனங்கள் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் போட்டியிடும் திறனைக் குறைக்கும் பொருட்கள் தொடர்பான நடவடிக்கைகளின் வழியாக, தீர்வு காணும் போக்கினை இந்தியா கைவிட வேண்டும் என்று ஆய்வறிக்கை ஆலோசனை கூறுகிறது.
உலக வர்த்தக அமைப்பு பொருட்கள் குவிப்புக்கு எதிராகவும் மானியம் வழங்குதலுக்கு எதிராகவும் இறக்குமதிகள் திடீர் திடீரென உயருவதற்கு எதிராகவும் எடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்த இந்தியா முன்வர வேண்டும் என்றும் ஆய்வறிக்கை ஆலோசனை கூறுகிறது.

Aucun commentaire:
Enregistrer un commentaire