கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், சுந்தர் பிச்சைக்கு 2,73,328 கிளாஸ் சி
பங்குகள் வழங்கியுள்ளது. இதன் மதிப்பு 19.9 கோடி (சுமார் ரூ.1,350 கோடி)
அமெரிக்க டாலர். இதற்கு முன்பு இந்நிறுவனத்தில் சுந்தர் பிச்சை
வைத்திருந்த பங்கு மதிப்புடன் சேர்ந்து அவரது மொத்த பங்கு மதிப்பு 65 கோடி
(சுமார் ரூ.4,417 கோடி) அமெரிக்க டாலராகியுள்ளது. இதன்மூலம்
அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அதிகாரி ஆகியுள்ளார் சுந்தர்
பிச்சை. கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் 3,460 கோடி டாலர், செர்ஜி பிரின்
3,390 கோடி டாலர் மதிப்புடைய பங்குகள் வைத்துள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire