dimanche 28 février 2016

அப்துல்கலாம் கனவு கண்ட தமிழகத்தை உருவாக்குவதற்காக



குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்று அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார்.
புதிய கட்சியின் பெயர் மற்றும் கட்சி கொடியை இன்று வெளியிட்டு தமிழகத்தில் ஊழற்ற ஆட்சியை அமைக்க தனித்து போட்டியிடப்படும் என்று தெரிவித்தார்.
ஏ.பி.ஜே அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் துவங்கப்பட்டுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியின் அறிமுக விழா ராமேசுவரம் பேக்கரும்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் புதிய கட்சியின் ஆலோசகர் பொன்ராஜ் தலைமை வகித்தார். பின்னர் துவங்கப்பட்ட புதிய கட்சியின் பெயரான அப்துல்காலம் வி.ஐ.பி (அப்துல்கலாம் லட்சிய இந்திய கட்சி) அறிவிக்கப்பட்டு, பின்னர்
அப்துல்கலாம் உருவம் பொறித்து கொடியை அறிமுகப்படுத்தி கட்சி தொடங்கப்பட்ட நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.
அதற்கு முன்னதாக கலாம் சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பொன்ராஜ் கூறியதாவது:
அப்துல் கலாமின் கனவுகளை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கே நாங்கள் இந்த புதிய கட்சியை துவங்கியுள்ளோம், அப்துல் கலாம் கனவான 2020 இல் இந்தியா வல்லரசு நாடக இளைஞர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியும், தமிழகத்தில் ஊழற்ற ஆட்சியை அமைக்கவும், விவசாயிகளின் வாழ்வாதரத்தை உயர்த்தவும்,
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரத்தையும், கல்வித்தரைத்தையும் உயர்த்தவும் இக்கட்சியின் கொள்கையில் ஒன்றாகும்.
துவங்கப்பட்டுள்ள கட்சியின் சார்பில் வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியுடும். மற்ற கட்சிகளுடன் கூட்டணி என்ற  பேச்சுவார்த்தைக்கு இடமில்லை.
தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்களை இணையதளத்தில் பதிவு பெற்று கட்சியின் கொள்கைக்கு உட்பட்டவர்களை வேட்பாளராக
தேர்வு செய்து பயிற்ச்சி அளித்த பின்னர் தகுதிபெற்றவர்களை தொகுதிகளில் பொதுமக்களுக்கு வேட்பாளராக அறிமுகப்படுத்தப்படும். மேலும் எங்கள் கட்சியிக்கு தற்போது ஆலோசகராக உள்ளேன். விரைவில் தலைமை பொற்பேற்ற பின்பு கட்சியின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் கொள்கைகள் குறித்து மார்ச் முதல் வாரத்தி்ல் சென்னையில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire